Wednesday, April 20, 2011

கை வைத்தியங்கள் – பகுதி 2


முன்பு ஒரு  பதிவில் என் மாமியார் எனக்கு எழுதிக் கொடுத்த சில கை வைத்தியங்கள் பற்றி எழுதியிருந்தேன். பின்னூட்டமிட்ட பலரும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளதால் மேலும் சில வைத்தியங்களை தெரிவிக்கலாம் என்று எண்ணியதன் விளைவு இந்த இடுகை. இதில் குறிப்பிடும் பொருட்கள் யாவும் வீட்டிலுள்ளதாகவும், அல்லது நாட்டு மருந்து கடையில் கிடைப்பதாகவும் தான் இருக்கும்.

இரத்த கட்டிற்கு

இரத்தக் கட்டிற்கு மஞ்சள் அரைத்து பற்று போட நல்லது.

குழந்தையின் அழுகையை நிறுத்த

குழந்தை அழுது கொண்டே இருந்தால் சந்தனத்தை நெற்றியில் பூச வேண்டும்.

தும்மல் நிற்க

தொடர்ந்து தும்மல் வந்தால் விபூதியைக்  குழைத்து மூக்கில் தடவ வேண்டும்.

பித்த வெடிப்பிற்கு

பித்த வெடிப்பிற்கு சிறிது சுண்ணாம்பையும், விளக்கெண்ணையும் போட சரியாகும்.

வேர்க் குருவிற்கு

வேர்க் குருவிற்கு சாதம் வடித்த கஞ்சியை உடம்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

தொண்டை வலி, சாதாரண ஜுரம்

ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், சிறிது இஞ்சி, ஒரு பிடி துளசி இலை சேர்த்து கஷாயம் செய்து சர்க்கரை பால் சேர்த்து அருந்த தொண்டை வலி, சாதாரண ஜுரம் சரியாகும்.

பல் பிரச்சனை

மிளகுத் தூளும், உப்புத் தூளும் சேர்த்து பல் துலக்க ஈறில் இருந்து ரத்தம் வருவது நிற்கும்.

மிளகுத் தூளும், கிராம்புத் தூளும் ஒரு சிட்டிகை எடுத்து பல் வலிக்கும் போது தேய்த்தால் வலி குறையும்.

குழந்தையின் வாந்தி நிற்க

ஓமத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து கொடுக்க குழந்தையின் வாந்தி நிற்கும்.

மீண்டும் வேறு சில குறிப்புகளுடன் வேறொரு பதிவில் சந்திக்கிறேன்.

ஆதி வெங்கட்.

30 comments:

  1. உபயோகமான குறிப்புக்கள்.

    வீபூதியை குழைத்து அடுப்பில் வைத்து சூடாக்கி பொறுக்கும் சூட்டில் நெத்தியில்பட்டு போல போட்டால் தலைபாரம் குறையும்.

    சுளுக்கு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் புளியைக் கரைத்து மஞ்சள் தூள் சேர்த்து, கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் போடவேண்டும்.

    ReplyDelete
  2. மிக‌வும் ப‌ய‌னுள்ள‌ ப‌திவு

    ReplyDelete
  3. நல்ல மருத்துவ குறிப்புகள்

    //குழந்தை அழுது கொண்டே இருந்தால் சந்தனத்தை நெற்றியில் பூச வேண்டும்.


    தொடர்ந்து தும்மல் வந்தால் விபூதியைக் குழைத்து மூக்கில் தடவ வேண்டும்//

    இவை இரண்டும் மருத்துவக் குறிப்பாக இருந்தாலும் கொஞ்சம் காமெடியா தெரியுது.

    ReplyDelete
  4. பயனுள்ள மருத்துவ குறிப்புக்கள்,தொடர்ந்து சொல்லுங்க,குறிப்பு எடுத்து வைக்க வேண்டும்...

    ReplyDelete
  5. Thank you for the useful tips.



    ///இரத்த கட்டிற்கு

    இரத்தக் கட்டிற்கு மஞ்சள் அரைத்து பற்று போட நல்லது.///


    .......கஸ்தூரி மஞ்சள் பற்று, இன்னும் சிறந்தது என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  6. நல்ல மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. thirumathi bs sridhar said...
    நல்ல மருத்துவ குறிப்புகள்

    //குழந்தை அழுது கொண்டே இருந்தால் சந்தனத்தை நெற்றியில் பூச வேண்டும்.
    தொடர்ந்து தும்மல் வந்தால் விபூதியைக் குழைத்து மூக்கில் தடவ வேண்டும்//

    /இவை இரண்டும் மருத்துவக் குறிப்பாக இருந்தாலும் கொஞ்சம் காமெடியா தெரியுது./

    மேடம், தங்கள் குழந்தை அம்ருதா குட்டிக்கு இன்று நெற்றியில் சந்தனமும், மூக்கின் மேல் விபூதியும் லேசாகத் தடவிப்பாருங்கள். பார்க்கவே காமெடியா தெரியும்.

    ReplyDelete
  8. என் மகள் அடிக்கடி கீழே விழுவாள். இரத்தம் கட்டிக்கொள்ளும். அதற்கு நல்லெண்ணெயில் மஞ்சளை குழைத்து விளக்கில் காட்டி சூடு செய்து பத்து போடுவேன் சரியாகி விடும்.

    உங்கள் குறிப்புகள் பயனுள்ளது.

    ReplyDelete
  9. uஉபயோகமான பகிர்வு.நன்றி.

    ReplyDelete
  10. நல்ல குறிப்புகள்.

    ReplyDelete
  11. நன்றிங்க டாக்டர். ;-))

    ReplyDelete
  12. உபயோகமான குறிப்புகள்

    ReplyDelete
  13. இரத்தக் கட்டிற்கும், வேர்க்குருவிற்கும் உள்ளது மிகவும் உதவும். நன்றி.

    ReplyDelete
  14. உபயோகமான குறிப்புக்கள்

    ReplyDelete
  15. உபயோகமான குறிப்புகள். விபூதியை ஓமவல்லி இலைச்சாற்றுடன் குழைத்து, லேசா சூடாக்கி உச்சந்தலையிலும் நெற்றியிலும் பற்றுப்போட்டாலும் தலைவலி, ஜலதோஷம் குறையும்.

    ReplyDelete
  16. கோபலகிருஷ்ணன் சார்

    அந்த வேஷம் போட நான் விரும்பவில்லை.

    அழுகும் குழந்தையும்,தும்மும் குழந்தையும் குறிப்பிட்டிருக்கும் வைத்தியத்தை செய்ய விடமாட்டார்கள்.

    இதற்கு ஒத்துழைக்கும் குழந்தைக்கு செய்து பார்க்கலாம்.

    ரெண்டு வார்த்தைக்கு மேல எழுதிடப்படாதே
    வந்துருவீங்களே.

    ReplyDelete
  17. டாக்டர் அம்மா, தங்கள் கொடுத்துள்ள குறிப்புகள், அதில் சற்று மெருகேற்றி வாசகர்வட்டம் கொடுத்துள்ள மருத்துவ குறிப்புகள் இரண்டும் சமயத்தில் உபயோகிக்க உகந்தவை. வேற்குருவுக்கு வடித்த கஞ்சி .....? மாதரசியே, வடித்த் கஞ்சி பட்டால் வேர்க்குரு போவதற்கு பதிலாக, நீர் கொப்பளங்கள் தோன்றக் கூடுமே?

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  18. வாங்க புதுகைத்தென்றல்,

    உங்களுடைய குறிப்புகளையும் நான் குறித்து கொள்கிறேன்.
    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க உயிரோடை,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க திருமதி பி.எஸ் ஸ்ரீதர்,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க ஆசியா உமர்,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க சித்ரா,

    கஸ்தூரி மஞ்சள் சிறந்தது தான்.
    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    வாங்க கோமதி அரசு அம்மா,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிமா.

    வாங்க இராஜராஜேஸ்வரி,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க ராமலஷ்மி மேடம்,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க ஆர்.வீ.எஸ்,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

    வாங்க எல்.கே,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

    வாங்க ஹுசைனம்மா,

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

    வாங்க சிநேகிதி,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க அமைதிச்சாரல்,

    உங்கள் குறிப்புகளையும் குறித்து வைத்துக் கொள்கிறேன்.
    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க திருமதி பி.எஸ் ஸ்ரீதர்,

    மீண்டும் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க வீ.கே. நடராஜன் அவர்களே,

    ஆறவைத்த வடித்த கஞ்சியை உபயோகிக்கவும். சூடான கஞ்சி பட்டால் தான் நீர் கொப்புளங்கள் தோன்றக்கூடும். வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.




    .

    ReplyDelete
  19. இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றிகள்.

    .

    ReplyDelete
  20. செலவில்லா மருந்து சொன்னமைக்கு நன்றி....

    ReplyDelete
  21. கைவைத்தியங்கள் எளியதாக இருக்கின்றன .. குறித்து வைத்துக் கொண்டால் தக்க சமயத்தில் பயன் அளிக்கும் ...

    ReplyDelete
  22. ரொம்ப ரொம்ப யூஸ்புல்லான டிப்ஸ்..

    பல் வலிக்கு கொடுத்துள்ள டிப்ஸ் சூப்பர்ப்..

    ReplyDelete
  23. மூக்கில் விபூதி குழைத்து தடவுவது புதுசு! நன்றி

    ReplyDelete
  24. வாங்க MANO நாஞ்சில் மனோ,

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    வாங்க பத்மநாபன்,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க கீதா ஆச்சல்,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க மிடில் கிளாஸ் மாதவி,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  25. 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதாக மாமியாரின் அனுபவ வாழ்நெறிகளை எங்களுக்குமானதாக மடை மாற்றுகிறீர்கள் ஆதி... நன்றி!

    விபூதி சந்தானம் குங்குமம் எல்லாம் வெறும் ஆன்மீக சம்பந்தப் பட்டது மட்டுமல்ல. நம் முன்னோர்களின் புத்தி சாதுர்யம் அளப்பரிது. நியம நிஷ்டைகளாகவும், சாஸ்திர சம்ப்ரதாயங்களாகவும் இருப்பவற்றை ஆழ்ந்து நோக்கினால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் நமக்கான நன்மை.

    இரண்டொரு வயதில் கூட என் குழந்தைகளுக்கு வியர்க்குருவிற்கு சந்தானம் குழைத்துப் பூசியதுண்டு. சற்று நேரத்தில் ஈரம் காய்ந்து சந்தனக் குழந்தையாகி சாட்சாத் முருகப் பெருமானே காட்சியளிப்பது போலொரு பரவசத்தை அனுபவித்திருக்கிறோம் பார்த்துப் பார்த்து பெருமிதப் பட்டிருக்கிறோம். இப்போது நினைத்தாலும் 'எப்படியிருந்தவர்கள்...' என பூரிப்பாயிருக்கும்.

    விபூதிக்கு நீரை உறிஞ்சும் தன்மை இருப்பதால் தான் நெற்றி நிறைய தரிப்பது! குழந்தைகளுக்கு கண்ணில் பட்டு உறுத்தாமலிருக்க குழைத்துப் போடுவதே உத்தமம். குழந்தைகளின் ஜலதோஷத்துக்கு குங்குமம் (கலப்படமற்றது) அல்லது சாம்பிராணி தூள் கூட நீரில் குழைத்துப் போடுவதுண்டு.

    ReplyDelete
  26. அனைத்துமே மிகவும் பலன் தரக்கூடிய உபயோகமான மருத்துவக் குறிப்புக்கள் ஆதி! பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  27. மிகவும் அருமையான பயனுள்ள குறிப்புகள்

    இரத்த கட்டிக்கு , போட்டுள்ளது நோட் பண்ணி கொண்டேன்.

    நான் எப்போதும் பின்னூட்டத்துக்கு கடைசி பெஞ்சு தான்.
    முடிந்த போது வருவேன்.

    ReplyDelete
  28. வாங்க நிலாமகள்,

    தங்கள் கருத்துக்களையும் குறித்துக் கொள்கிறேன். வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க மனோ சாமிநாதன்,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிமா.

    வாங்க ஜலீலா கமல்,

    வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  29. குழந்தையின் சூட்டு கொப்பளத்திற்கு சந்தனம் பூசினால் சளி பிடிக்கும் காய்ச்சல் வரும் என்கிறார்கள். உண்மையா? வேறு என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete
  30. உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
    http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
    இப்படிக்கு
    ஜலீலாகமால்

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…