Tuesday, March 22, 2011

நாங்களும் கிராஜுவேட் ஆகிட்டோம்ல!தலைப்பை பார்த்ததும் நான்தான் கிராஜுவேட் ஆகிட்டேன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு. கிராஜுவேட் ஆனது என் மகள். “அப்போ உனக்கு அவ்வளவு பெரிய மகள் இருக்கிறாளா? அப்படின்னா வயசு எவ்வளவு இருக்கும்” ந்னு கணக்கு பண்ணீங்கன்னா நீங்க ஏமாந்திருவீங்க! ”ஸ்..... அப்பா இப்பவே கண்ண கட்டுதே!” என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுவதற்குள்  விஷயத்துக்கு வருகிறேன். [அப்பாடா! விஷயத்துக்கு வந்தாச்சா?]

என் மகள் படிக்கும் பள்ளியில் KINDER GARDEN முடித்து முதல் வகுப்புக்கு செல்லப் போகும் குழந்தைகளுக்காக வருடா வருடம் GRADUATION DAY பள்ளியில் ஏற்பாடு செய்வார்கள். என் மகள் இந்த வருடம் UKG முடித்து முதல் வகுப்புக்கு செல்லப் போகிறாள். ஆதலால் இதன் பொருட்டு பள்ளியில் ஒவ்வொரு குழந்தையிடமும் ரூபாய் 300 வீதம் ஒரு மாதத்திற்கு முன்பே வசூல் செய்ய ஆரம்பித்து விட்டனர். ”அதானே, காசு இல்லாம தோசையா?”

LKG, UKG படிக்கும் எல்லா குழந்தைகளும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று அவர்களாகவே முடிவு செய்ததால், ஒரு நடன நிகழ்ச்சியில் என் மகள் பங்கேற்றாள். இதற்கான பயிற்சியும், தினமும் பள்ளியில் எடுத்துக் கொண்டிருந்தாள். சென்ற வருடம் FASHION SHOW வில் பங்கேற்று LUCKNOW பெண்ணாக அலங்கரித்து சென்றாள். சென்ற வருடம் வசூலித்த தொகை ரூபாய் 150. இப்ப எதுக்கு 300 ரூபாய்னு கேட்டா, ”ஒரு வருடத்துல விலைவாசி எகிறிடுச்சுல்ல!” என்ற பதில் உடனே வருகிறது. 

வசூல் தொகை போக நிகழ்ச்சிக்கேற்ப ஆடைகள் வாடகைக்கு எடுத்து அனுப்ப வேண்டும். என் பெண்ணிற்கு பள்ளி சீருடையிலேயே நடனம் என்று சொல்லி விட்டனர். அதனால் அந்த செலவில்லை.

பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. சிறப்பு விருந்தினரின் உரை முடிந்ததும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும், பொம்மலாட்டமும், இன்ன பிற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒவ்வொரு பருவநிலைக்கேற்ற உணவுகளாக குழந்தைகள் வேடமிட்டும், அந்த பருவத்துக்கு ஏற்ற உடைகளை அணிந்து கொண்டும் மழலை மொழிகளில் அவர்கள் பேசுவதை கேட்க ஆனந்தமாக இருந்தது. மருத்துவராகவும், செவிலியராகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், ஆசிரியராகவும் வந்து இரண்டு வரிகளில் தன்னை பற்றி மழலைக் கொஞ்சும் மொழியில் பேசியது அழகாய் இருந்தது.

இதன் பின்னர் ஒவ்வொரு வகுப்பின் குழந்தைகளையும் மேடையில் நிற்க வைத்து பட்டமளிப்பு விழா உடையில் சிறப்பு விருந்தினரின் கையால் பதக்கம் அணிவித்தனர். இதைப் பார்த்த எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. காரணம் நான் பத்தாவது முடித்து பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்தவள். அதன் பிறகு PART TIME B.E பண்ண வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் என்னை  படிக்க விட வில்லை. திருமணமாகி இங்கு வந்த பின் கணவரிடம் என் ஆசையைக் கூறினேன். அவர் ஒத்துக்கொண்டாலும், புதிய இடம், மொழிப் பிரச்சனை போன்ற  காரணங்களால் என்னால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அதன் பின் மகளும் பிறந்துவிடவே அந்த ஆசையை மறந்தே விட்டேன். (அடடா! இவ சுய புராணம் தாங்கலையே!) 

என் மகள் வளர்ந்து கல்லூரிக்கு சென்று பட்டம் பெற எப்படியும் பதினைந்து வருடமாவது ஆகும். ஆனால் இப்போதே அந்த பட்டம் பெறும் நிகழ்ச்சியைக் காண முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்!

ஆதி வெங்கட்.

29 comments:

 1. உங்கள் மகள் மேன்மேலும் பல பட்டங்களும்
  பரிசுகளும் பதக்கங்களும் பதவிகளும் பெற்று
  சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 2. ஹ்ம்ம் இப்படியும் ஒரு சந்தோசம் அனுபவிக்கலாம் நாம் எல்லாம்

  ReplyDelete
 3. புது செய்தியா இருக்கே,மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. குட்டியூண்டு பெண்ணான தங்கள் மகள் பட்டதாரி ஆனதற்கு என் வாழ்த்துக்கள்.

  மேன் மேலும் பல பட்டங்களை (வாலுடன்) தொடர்ச்சியாகப்பெற்று, வானத்தில் கலர் கலராக பறந்து உங்களை மகிழ்வித்திட வேணுமாய்ப் ப்ரார்த்திக்கிறேன்.

  இது உண்மையிலேயே ஒரு மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிதாங்க.

  மழலைகளின் செயலும், பேச்சுக்களும் (திருமதி ராஜி அவர்கள் குறிப்பிட்ட ‘தச்சு மம்மு’ போல) ஏற்படுத்தும் குதூகுலத்திற்கு ஈடு இணை கிடையாதுங்க.

  வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைக்கு.
  பாராட்டுக்கள் உங்கள் பதிவுக்கு.

  ReplyDelete
 5. ஆமாங்க, இப்ப இப்படி ஒரு கிராஜுவேஷன், டேன்ஸ்னு ஏதாவது ஒரு பேரச் சொல்லி வசூல் செஞ்சிடறாங்க.

  ஆனாலும், சின்னக் குழந்தைகளை இப்படி பாக்க அழகாத்தான் இருக்கு. (இந்த வீக்னெஸைத்தானே ஸ்கூல்லயும் யூஸ் பண்ணிக்கிறாங்க)

  ReplyDelete
 6. என் மகனும் ரெண்டுவாட்டி கிராஜுவேட் ஆகிட்டாரு. :))
  கேஜிலேர்ந்து 1ஆம் வகுப்பு போனப்ப ஒரு வாட்டி, 5 லேர்ந்து 6ஆம் கிளாஸ் போகும்போது ஒரு வாட்டி. பாவம் அம்ருதாதான் ஸ்கூல் மாத்தினதுல கிராஜுவேட் ஆகாம போயிட்டா. :))

  உங்க செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க. பசங்களுக்கு இதெல்லாம் ஒரு இனிமையான அனுபவங்கள்.

  ReplyDelete
 7. இப்போதே அந்த பட்டம் பெறும் நிகழ்ச்சியைக் காண முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.//
  மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைக்கு.

  ReplyDelete
 8. மழலை பட்டத்தாரிக்கு வாழ்த்துக்கள்.

  உங்கள் அழகான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. வாழ்த்துகள் அம்மா, பொண்ணு ரெண்டு பேருக்கும்.

  நீங்க இப்போ AMIE படிங்க புவனா.. அப்புறம் வர்ஷினியும் உங்க க்ராஜுவேஷன் பார்ப்பால்ல..

  ReplyDelete
 11. அழகு,நாங்களும் நேற்று தான் என் மகனின் கிராடுவேஷனுக்கு போய் வந்தோம்,நானும் போஸ்ட் ரெடி செய்து கொண்டு இருக்கிறேன்..அந்த அனுபவமே தனி தான்.
  பகிர்வுக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 12. :) குழந்தைகளுக்கு என்ன மேக்கப்னாலும் அழகுதான். ஹுசைனம்மா சொன்னதை வழிமொழியிறேன்.


  எங்க வீட்டுல எங்க அப்பா பெரியப்பா எல்லாம் அப்படி போட்டோ எடுத்து வச்சிருப்பாங்க..இப்ப என் மகன் தான் ப்ளே ஸ்கூல்லயே க்ராஜுவேட்டா போட்டோல பெருமையா நிக்கறார்.

  ReplyDelete
 13. பசங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் இல்லியா...

  ReplyDelete
 14. வாங்க ராஜி,

  உங்கள் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைக்கும் நன்றிப்பா.

  வாங்க எல்.கே,

  ஆமாம் சகோ.

  வாங்க திருமதி பி. எஸ் ஸ்ரீதர்,

  எனக்கும் சென்ற ஆண்டு புதுசாகத் தான் இருந்தது. வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

  வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

  வாங்க ஹுஸைனம்மா,

  உங்கள் கருத்து சரி தான். வருகைக்கு நன்றிங்க.

  வாங்க புதுகைத் தென்றல்,

  5லிருந்து 6வது போகும் போது வேறயா! குழந்தைகளுக்கு இது இனிமையான அனுபவம் தான்.

  வாங்க இராஜராஜேஸ்வரி,

  உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  வாழ்த்துகளுக்கு நன்றிமா.

  வாங்க middleclassmadhavi,

  வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

  வாங்க விக்னேஷ்வரி,

  வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. AMIE ரொம்ப கஷ்டம்ப்பா. படிச்ச சப்ஜெக்ட்டே மறந்துடுச்சே! அப்புறம் வர்ஷினி இல்லப்பா ரோஷ்னி.

  வாங்க ஆசியா உமர்,

  அப்படியா! உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி.

  வாங்க முத்துலெட்சுமி,

  குழந்தைகளுக்கு எந்த அலங்காரம் செய்தாலும் அழகு தான். வருகைக்கு நன்றிப்பா.

  வாங்க அமைதிச்சாரல்,

  ஆமாங்க. வருகைக்கு மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 15. மழலை பட்டதாரிக்கு வாழ்த்துக்கள். அதை எங்களையும் ரசிக்க வைத்த அம்மாவுக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 16. குட்டி பொன்னுக்கு வாழ்த்துகள்...ரொம்ப சந்தோசமாக இருக்கு படிக்க...

  எனக்கும் ஆசையாக இருக்கு....

  ReplyDelete
 17. //தலைப்பை பார்த்ததும் நான்தான் கிராஜுவேட் ஆகிட்டேன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு//
  இந்த சீசன்ல இந்த தலைப்பை பாத்ததுமே புரிஞ்சு போச்சே... உங்க குட்டிஸ் தான் பட்டம் வாங்கினதுன்னு...:)

  //என் மகள் வளர்ந்து கல்லூரிக்கு சென்று பட்டம் பெற எப்படியும் பதினைந்து வருடமாவது ஆகும். ஆனால் இப்போதே அந்த பட்டம் பெறும் நிகழ்ச்சியைக் காண முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி//
  குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள்..:)

  ReplyDelete
 18. வாங்க லக்ஷ்மிமா,

  தங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றிமா.

  வாங்க கீதா ஆச்சல்,

  ரொம்ப நன்றிங்க. உங்க பொண்ணுக்கும், உங்களுக்கும் இந்த சந்தோஷம் கிடைக்க வாழ்த்துகள்.

  வாங்க புவனா,

  வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 19. இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 20. பட்டம் பெற்ற மகளுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்.
  மறக்காம அவங்களுக்கு வானத்தில் பறக்கற பட்டமும் வாங்கித் தாங்க.. சந்தோஷப்படுவாங்க.. ;-))

  ReplyDelete
 21. சொல்லாட்சியை கைவரப்பெற்று , பல மாதங்களாக நானிலம் போற்றிடிடும் வண்ணம் நல்லாட்சியை தொடர்ந்திடும் கோவை பேரரசியே, பட்டம் பெற்றிடும் பெண்னரசிக்கும், இதுபோன்று பட்டம் பெற்றிடத்துடிக்கும் உங்கள் கனவு நனவாகவும், தாங்கள் எம்மை வாழ்விக்க இம்மாநிலத்தில் வந்துதித்த இந்த நன் நாளில் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்!!

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 22. உங்களின் செல்ல மகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!
  உங்களின் கனவு நிறைவேறவும் மகளுக்கு முன்னால் பொறியியல் பட்டதாரியாகவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. ஒரு பட்டதாரி மகளின் பாசக்கார அம்மாவே! அழகான பதிவு.. உங்க செல்லக்குட்டிக்கு என் அன்பு முத்தங்கள். அவள் படிப்பில் சிறந்து நலம்பல காண முருகன் துணையிருப்பான்.

  ReplyDelete
 24. பொறியியல் இல்லாட்டியும் post graduate diploma ஏதாவது ஆவது பண்ணுங்க. நம் குழந்தைகள் படிச்சு முடிக்கறப்ப நம்மளைத்தான் கேள்வி கேட்கும், நீ ஏன் படிக்கலைன்னு. டைம் ஒதுக்கி (வேண்டுமானால் பிளாகையும் ஒதுக்கி!!) படிக்க பாருங்க. ஆல் தி பெஸ்ட்.

  பொண்ணு எங்க நிக்கிறாங்க? ப்ரொஃபைல் ஃபோட்டோ வெச்சு தேடினா தெரிய மாட்டேங்குது!! எனிவே, மகளுக்கு செல்ல முத்தங்களும் வாழ்த்தும்!! :))

  ReplyDelete
 25. வாங்க ஆர்.வீ.எஸ்,

  தங்கள் வாழ்த்துகளையும் ஆசியையும் மகளிடம் தெரிவித்து விட்டேன். பறக்கற பட்டமும் வாங்கிக் கொடுத்துட்டா போச்சு. :)
  நன்றி சகோ.

  வாங்க V.K. NATARAJAN அவர்களே,

  தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

  வாங்க மனோம்மா,

  தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிமா.

  வாங்க மோகன்ஜி,

  தங்கள் வாழ்த்துகளை மகளிடம் தெரிவித்து விட்டேன். நன்றி சகோ.

  வாங்க அன்னு,

  பிளாகையும் ஒதுக்கி படிக்க முயல்கிறேன். தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிபா. மகள் முதல் வரிசையில் இருக்கிறாள். தூரத்தில் இருந்து எடுத்ததால் தெளிவாக எடுக்க முடியவில்லை.

  ReplyDelete
 26. பட்டம் பெற்ற உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்...மென்மேலும் பட்டங்கள் பெறவேண்டும்.

  ReplyDelete
 27. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 28. குட்டி பென்னுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் நிறய பட்டம்பெற்று நல்ல பட்டதாரியாக வேண்டும்.

  ReplyDelete
 29. வாங்க ஜிஜி,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க.

  வாங்க MAHI,

  முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க VIJISVEG KITCHEN,

  முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…