Friday, March 18, 2011

ஆலு மேத்தி


வட இந்தியர்கள் செய்யும் சப்ஜிகளில் சிலவற்றை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அந்த வகைகளில் இந்த ஆலு மேத்தியும் ஒன்று. ஆலு என்பது உருளைக்கிழங்கின் இந்தி பெயர். இதை எந்த காய்கறியுடனும் சேர்த்து சப்ஜி செய்வார்கள். நாம் இப்போது பார்க்கப் போவது மேத்தி என்று இந்தியில் அழைக்கப்படும் வெந்தயக்கீரையுடன் சேர்த்து செய்வதைப் பற்றி. வெந்தயக்கீரை உடலுக்கு நன்மை தரக்கூடியது என்று அனைவரும் அறிந்ததே. அதன் செய்முறைக்குச் செல்வோமா?.

தேவையான பொருட்கள் :-

உருளைக்கிழங்கு – 4 ( நடுத்தர அளவுள்ளது )
வெந்தயக்கீரை – 1 கட்டு
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
எண்ணெய்தேவையான அளவு
உப்புதேவையான அளவு

செய்முறை :-

வெந்தயக்கீரையை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். அதே போல் உருளைக்கிழங்கையும் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும் உருளைக்கிழங்கை சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும் ஆய்ந்து வைத்த வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும். இதனுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இப்பொழுது ஒரு கை தண்ணீர் தெளித்து வாணலியை மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்தால் சுவையான ஆலு மேத்தி தயார்.

பின் குறிப்பு :-

கொடுக்கப்பட்ட பொடிகளை தவிர்த்து வெறும் சாம்பார்ப்பொடி சேர்த்தும் செய்யலாம். இதை சாதத்துடனும், சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.



மீண்டும் சந்திப்போம்

ஆதி வெங்கட்.

16 comments:

  1. நானும் இப்படியேதான் செய்வேன் ஒரு தக்காளியும் சேர்த்துப்பேன். நல்ல சுவையான ரெசிப்பிக்கு நன்றி.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி அடுத்த முறை இதை முயற்சி பண்றேன்

    ReplyDelete
  3. ஆஹா, ஆலுமேத்தி உடனடியாக சாப்பிடணும் போல நாக்கில் ஜலம் ஊறுகிறது. நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி,மட்டரும்(பச்சைப் பட்டானி) சேர்த்துக்கலாம்.

    ReplyDelete
  5. நல்ல ரெசிப்பி.
    இந்த மேத்தி நம்மூர் மாதிரி குட்டி குட்டி இலைகளா இல்லாம
    அங்கல்லாம் பெரிசு பெரிசா இருக்கே.

    ReplyDelete
  6. இதை கடுகு எண்ணெய் பயன்படுத்தி செஞ்சு பாருங்க. செம டேஸ்டா இருக்கும். :)

    ReplyDelete
  7. நான் இதுவரை செய்ததில்லை.ரொம்ப ஈசியா இருக்கு.செய்துபார்க்கிறேன்.பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  8. ஆஹா சூப்பர் சப்ஜி.உருளைக்கிழங்கை பார்த்தாலே ஆசையாக இருக்கு,அழகு..

    ReplyDelete
  9. நல்லா இருக்கு ஆலு மேத்தி ஆதி.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. தில்லிக்கு வந்திருந்தபோது, வட இந்திய சப்ஜீ வகையறாக்களை ஒருகை பார்த்தது ஞாபகத்துக்கு வருகிறது. இந்த மேத்தியில் சப்ஜீ தவிரவும், மேத்தி கா லாடு என்ற லட்டுவும் செய்கிறார்கள் அல்லவா? செம டேஸ்டாக இருக்கும். :-)

    ReplyDelete
  11. சுலபமாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி

    ReplyDelete
  12. உருளைக்கிழங்கில் எது செய்தாலுமே
    நன்றாக இருக்கும். அதுவும் நீங்கள்
    வேந்தயக்கீரையும் சேர்த்து செய்துள்ளீர்கள்.
    சுவை இன்னும கூடுதலாக இருக்கும் என
    நினைக்கிறேன். நன்றி ஆதி.

    ReplyDelete
  13. எளிமையான குறிப்பு. சுவையான பதிவு.

    ReplyDelete
  14. வாங்க லக்ஷ்மிம்மா,

    தக்காளி சேர்த்ததில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

    வாங்க எல்.கே,

    முயற்சி செய்து பாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    வீட்டில் செய்து தர சொல்லுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    வாங்க திருமதி பி.எஸ் ஸ்ரீதர்,

    பச்சைப் பட்டாணியும் சேர்த்துக் கொள்ளலாமா! முயற்சி செய்து பார்க்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

    வாங்க ராஜி,

    ஆமாம். இங்கு கொஞ்சம் பெரிய இலைகள் கொண்டதாக இருக்கும்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

    வாங்க விக்னேஷ்வரி,

    கடுகு எண்ணெய் வாடையே பிடிக்காதே!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

    வாங்க ஜிஜி,

    செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  15. வாங்க ஆசியா உமர்,

    எடுத்துக் கொள்ளுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    வாங்க கோமதி அரசு அம்மா,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

    வாங்க சேட்டைக்காரன்,

    மேத்தி கா லாடு நான் கேள்விப்பட்டதில்லை. மேத்தி பராட்டா, மேத்தி பக்கோடா செய்வார்கள். சுவையாக இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    வாங்க middleclassmadhavi,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    வாங்க புவனேஸ்வரி ராமநாதன்,

    ஆமாம். உருளைக்கிழங்கில் செய்வது எல்லாமே சுவையாக இருக்கும். இது ஆரோக்கியத்துக்கு நல்லதும் கூட. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    வாங்க இராஜராஜேஸ்வரி,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…