Monday, March 14, 2011

ஐம்புலன்களுக்கு விருந்து!


முகல் கார்டனுக்கு  வார இறுதியில் செல்லலாம் என்று பிளான் பண்ணிக் கொண்டிருந்த போது அலுவலகத்திலிருந்து வந்த கணவர் செய்தித்தாளில் தில்லி சுற்றுலாத் துறை GARDEN OF FIVE SENSES-இல் இரண்டு நாட்கள் தோட்டத் திருவிழா நடத்துவதாகச்  சொல்லவும் ஆஹா! நெடுநாட்களாக போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இடமாச்சே என்று அடுத்த நாளே  கிளம்பி விட்டோம்.

எங்கள் ஏரியாவிலிருந்து மெட்ரோ பிடித்து KASHMERE GATE ல் இறங்கி அங்கிருந்து HUDA CITY CENTER செல்லும் இன்னொரு மெட்ரோ பிடித்து SAKET மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி வெளியே வந்தோம். அங்கு FREE SHUTTLE SERVICE TO GARDEN OF FIVE SENSES என்று எழுதிய வண்டிகள் இந்த விழாவின் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து இந்த இடத்திற்கு செல்லும் தூரம் 2 கிமீ. எங்களுக்காகவே நின்று கொண்டிருந்த ஒரு இனோவாவில் ஏறி தோட்டத்திற்குச் சென்று சேர்ந்தோம்.

நுழைவு வாயிலிலேயே (பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 20 ரூ. சிறியவர்களுக்கு 10 ரூபாய்) இருந்த கவுண்ட்டரில் நுழைவுச் சீட்டுகளை   வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். வாயிலிலேயே பரிசு பெற்ற தொங்கும் தொட்டிகள் இருந்தது. அந்தரத்தில் பூப்பந்துகள் தொங்குவது போல இருந்த  ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. . இன்னொரு புறம் மலர்களாலேயே அமைத்த மயில், யானை, ஒட்டகச்சிவிங்கி, மாடு [மாட்டுக்காரனுடன்] என்று அழகாக அலங்கரித்து இருந்தனர்.

உள்ளே சென்று ஒவ்வொரு இடமாய் பார்த்துக் கொண்டு வந்தோம். மொட்டை மாடியில், பால்கனியில் வைத்துக்கொள்ள வசதியாகட்ரே கார்டன் கூட அழகாய் செய்து வைத்திருந்தனர். எங்கெங்கு பார்த்தாலும் விதவிதமான மலர்கள் கண்ணைப் பறிக்கும் விதத்தில் இருந்தது.  என்னவர் நிறைய புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினார்!  பூக்கள்பூக்கள் என அங்கிருந்த பூக்கள், நீரூற்று, என அவர் எடுத்த படங்களை இங்கே காணலாம்.

ஆங்காங்கே கிராமிய கலைஞர்கள் செவிக்கும் கண்ணுக்கும் விருந்து படைத்துக் கொண்டு இருக்க கூடவே   தோட்டத்தில் பறித்த காய்கறிகளின் அணிவகுப்பும் இருந்தது!  ஒரு பக்கத்தில் மூலிகைத்தோட்டம் மூலிகை வாசனையை  பரப்ப, காக்டஸ் தோட்டம் இன்னொரு பக்கத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் பாடிக்கொண்டு இருந்தது!

சிறுவர்களுக்காக ஒட்டக சவாரி, சவாலான சாகச விளையாட்டுகளையும்  ஏற்பாடு செய்திருந்தனர்.  நிறைய உணவகங்களும் அமைத்து இருந்தனர்மக்களும் சாப்பிட்டு விட்டு, நம்முடைய வழக்கமான வழக்கப்படி எல்லா இடத்திலும் குப்பையை  போட்டுக் கொண்டு இருக்க   ஒவ்வொரு மறைவிடத்திலும் நிறைய காதல் ஜோடிகள்யாரைக் கண்டு எனக்கு என்ன பயம்!” என்ற எண்ணத்தில்  மெய்மறந்து உட்கார்ந்திருந்தனர்!!

தோட்டத்தின் ஒரு புறத்தில், சிறிய தொட்டிகளில் செடிகளும், விதைகளும், செடிகளை வளர்க்க விதவிதமான வடிவங்களில் மண் தொட்டிகளும், செடிகளுக்கு போடுவதற்கு உரங்களும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

பூக்களை ரசித்து, ஐம்புலன்களுக்கும் விருந்து கிடைத்த ஒரு திருப்தியோடு வீடு திரும்பினோம்!  இந்த தோட்டம் வருடம் முழுவதும் திறந்திருக்கும்.  இந்த தோட்டத்தின் மொத்த பரப்பளவு 20 ஏக்கருக்கு மேல்.  தில்லி வரும் சமயத்தில் சென்று பார்க்கலாம்.   இந்த தோட்டத்தின் மற்ற விவரங்களை ஏற்கனவே என்னவர் அவரது "தலை நகரிலிருந்து" தொடரில் எழுதி இருக்கிறார்.

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திக்கிறேன்.

ஆதி வெங்கட்

17 comments:

 1. பூக்கள் யாவும் கண்ணைப் பறிப்பதாக வெகு அழகாக படமெடுத்து, தக்க விளக்கங்களுடன் கொடுத்துள்ளீர்கள்.

  நல்ல அழகானதொரு பதிவு, அந்த வண்ண வண்ணப் பூக்களைப்போலவே.

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இதுவரை நான் கேள்விப்படலங்க,வருடம் முழுவதும் திறந்திருக்கும்னு வேற சொல்லியிருக்கீங்க,ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சென்று வந்துவிட வேண்டியதுதான். நன்றி.

  ReplyDelete
 3. ஓ, நான் இன்னும் பார்க்காத இடங்களில் இதுவும் ஒன்று. குறித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
 4. வாவ்...அருமையான க்ளிக்ஸ்...பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 5. தோட்டம் கண்ணுக்குத் தரும் விருந்தில் மற்றவை மறந்தே போகும்.. அப்புறம்தான் பசி, அலுப்பு எல்லாம் நினைவுக்கு வரும்.. உங்களுக்கு பொழுது போக நிறைய இடங்கள் இருக்கும் போலிருக்கே..

  ReplyDelete
 6. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.

  வாங்க thirumathi bs Sridhar,

  ஒரு முறை சென்று வாருங்கள் ஆச்சி. கோடையில் மலர்கள் இருக்காது. ஆனால் சுற்றி விட்டு வரலாம்.

  வாங்க விக்னேஷ்வரி,

  இன்னும் பார்க்கலையா! சென்று வாருங்கள்.

  வாங்க கீதா ஆச்சல்,

  பாராட்டுக்கு நன்றிங்க.

  வாங்க ரிஷபன் சார்,

  நானே பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய பாக்கி இருக்கிறது. நேரமின்மை, தட்பவெப்பம் ஆகியவை ஒத்து வந்தால் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 7. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. அருமையான பகிர்வுக்கு நன்றீஸ்

  ReplyDelete
 9. சூப்பர் ஆதி
  பகிர்வுக்கு நன்றி

  பூக்களை விரும்பாதவர்கள் கூட இருக்க முடியுமா?
  கண்ணுக்கும் மனதுக்கும் இதம் தரும் பதிவு

  ReplyDelete
 10. அட எங்க ஏரியாவுல இப்படி ஒண்ணு நடந்ததே தெரியாதே.(சாகீயத்தில் இருந்து எங்கள் வீடு 4 km ) . அடுத்தமுறை சொல்லுங்கள். முகல் கார்டன் நாளை வரை மட்டுமே. அருமையான புகைப்படங்களை எடுத்த நண்பருக்கு பூங்கொத்து.

  ReplyDelete
 11. வாங்க எல்.கே,

  நன்றி சகோ.

  வாங்க புதுகைத் தென்றல்,

  நன்றிங்க.

  வாங்க ராஜி,

  கருத்துக்கு நன்றிப்பா.

  வாங்க கலாநேசன்,

  SAKETல் லிருந்து 4 கி.மீ தூரத்தில் தான் உங்கள் வீடா! அடுத்த முறை சொல்கிறேன். கருத்துக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 12. அருமையான புகைப்படங்கள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. வாங்க இராஜராஜேஸ்வரி,

  வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 14. அருமையான பதிவு+படங்கள்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 15. பகிர்வுக்கு நன்றி,ஐம்புலன்களுக்கும் விருந்தென்றால் கேட்கவா வேண்டும்?இடுகை அருமை.

  ReplyDelete
 16. வாங்க லக்ஷ்மிம்மா,

  பாராட்டுக்கு நன்றிம்மா.

  வாங்க ஆசியா உமர்,

  கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 17. ஆஹா............. படத்துலே நம்மாளுங்க வரிசை சூப்பர்!!!!!

  அருமையான பதிவுக்கு நன்றிங்க. தில்லி வரும்போது மறக்கக்கூடாதுன்னு மூளையில் முடிச்சுப்போட்டு வச்சுருக்கேன்:-)

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…