Monday, March 7, 2011

பேர் வைச்சாலும்!


பெயர்க் காரணம் பற்றிய தொடர் பதிவுக்கு திருமதி ராஜி அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என்னை தொடர் பதிவுக்கு அழைப்பு விடுப்பது இதுவே முதன்முறையாகும். இதைப்  படித்து விட்டு யாராவது டென்ஷன் ஆனால் திருமதி ராஜியை கேட்கலாம்!

நான்கு வருட தவத்துக்கு பின் பிறந்த எனக்கு குடும்ப வழக்கப்படி மூன்று பெயர்கள் வைக்க வேண்டுமென முதல் பெயராக ஆதிலக்ஷ்மி என்றும்  இரண்டாம் பெயராக புவனாவும், மூன்றாவது  பெயராக குலதெய்வத்தின் பெயரையும் வைத்தனர். (அந்த பெயர் என்னன்னு சொல்ல மாட்டேனே!) தெரிந்து யாராவது கிண்டல் செய்தால் உம்மாச்சி கண்ணை குத்தி விடும்! அப்பாடி  உங்க கண்ண நான் காப்பாத்திட்டேன்.

ஆதிலக்ஷ்மி என்ற பெயர் வைத்ததன் காரணம் என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) பெயர் ஆதிநாராயணன். முதல் குழந்தை பையனாக பிறந்தால் தாத்தாவின் பெயரான ஆதிநாராயணன் என்று வைக்கலாம் என்றே  பெற்றோர் முடிவு செய்திருந்தார்களாம். பெண்ணாக பிறந்ததால் ஆதிலக்ஷ்மி என்று வைத்து விட்டனர். முதன் முதலாக தாத்தாவின் பெயரில் பேத்திக்கு பெயர் வைத்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.

இரண்டாவது பெயரான புவனா என் அப்பாவின் நண்பர் நியூமராலஜிப்படி புவனேஸ்வரி (அ) புவனா என்று வைக்கலாம் என்று சொன்னதால் புவனா என்று அழைத்திருக்கிறார்கள். சான்றிதழில் ஆதிலக்ஷ்மி என்றாலும் பள்ளி, கல்லூரியில் எல்லோரும் செல்லமாக அழைத்த பெயர் ஆதி. வீட்டிலும் உறவினர்கள் வட்டத்திலும் புவனா.

குடும்ப நண்பரான ஒரு மாமா நான் பிறந்த போது ரோஸ்கலரா (நெஜமாப்பா!) இருப்பதை பார்த்து என்னை டயானா என்று அழைக்க தொடங்கி இப்போது வரை அப்படித்தான் அழைப்பார். எங்கம்மா காலையில் அன்றாடம் என்னை எழுப்ப கூறும் சுப்ரபாதமே “கடங்காரி போற இடத்துல மொத்து வாங்கப் போற எழுந்திரு என்பது தான். முகத்தில் தண்ணீர் ஊற்றினாலும் துடைத்துக்  கொண்டு தூங்குவேன்! இப்பல்லாம் அந்த தூக்கம் மிஸ்ஸிங். பின்னே? நடுராத்திரி 6 மணிக்கே எழுந்திருக்க வேண்டியதாகி விட்டதே! தம்பியுடன் சண்டை போடும் போது வாங்கிய பெயர்கள் நாயே, பேயே, முண்டம் ஆகியவை.  என்னைஅவ்வப்போது பாட்டி (அம்மாவின் அம்மா) " இம்புட்டு உசரமா போயிண்டு இருக்கியே உனக்கு எப்படிடீ  மாப்பிள்ளை தேடி கண்டு பிடிக்கிறது? " என்பார்கள். (அதான் தேடிக் கண்டு பிடிச்சிட்டாங்கல்ல!)

பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் எனக்கு வைத்த பட்டப்பெயர் என்றால் அது ”தயிர்சாதம் தான். இப்போ கூட மூன்று வேளையும் தயிர்சாதம் குடுத்தாலும் சாப்பிட்டு விட்டு  சமத்தா இருப்பேன். ஆதிலக்ஷ்மி என்ற பெயர் பழைய பெயராக இருக்கு சான்றிதழில் புவனா என்று வைத்திருக்கலாமே என்று பலமுறை அப்பாவிடம் கேட்டதுண்டு. அதற்கு " எங்கப்பா பெயர்ல ஆரம்பிக்குது அதுவும்  போக அஷ்டலக்ஷ்மில ஒரு லக்ஷ்மி ஆதிலக்ஷ்மி நல்ல பெயர் "என்பார் என் அப்பா.(அவருக்கென்ன!) அவரே  என்னை செல்லமா பப்ளி, பப்லு என்றும்  அழைத்ததுண்டு.

இந்த பெயராலான விளைவுகள் என்ன என்று கேட்டால் ஆங்கில எழுத்தான A வில் ஆரம்பிப்பதால் எங்கள் துறையில் ரோல் நம்பர் 1 நான் தான். முதல் டெஸ்க். பல நேரம் கேள்விகள் கேட்கப்பட்டு 'திருதிரு'வென்று    முழிக்க வேண்டியிருக்கும். தூங்க முடியாது. இன்னொரு காரணம் எங்கள் இயந்திரவியல் துறையில் நாங்கள் மூன்றே பெண்கள் தான். அதனாலும் முதல் இருக்கை தான். எங்களிடம் தான் புத்தகம் வாங்கி ஆசிரியர் பாடம் நடத்துவார்.

திருமணமாகி தில்லி வந்த பின் இங்குள்ள நண்பர்களுக்கும் புவனா தான் பரிச்சியம். திருமதி ராஜி கூறியிருப்பது போல என் முழு பெயரான ஆதிலக்ஷ்மி வெங்கட்ராமன் என்று எழுதி முடிப்பதற்குள் கை வலி வந்து விடும். "லக்ஷ்மி" என்று யாராவது கூப்பிடுவார்களா என்றும்  நினைத்ததுண்டு. அதுவும் ஒருவரால் நடந்தது. கருவுற்றிருந்த போது மாதா மாதம் செக்கப் செல்லும் போதும் இங்குள்ள பஞ்சாபி மருத்துவர் லக்ஷ்மி என்று தான் கூப்பிடுவார்.

இப்போது என் மகள் அவளுக்கு பிடித்தமான (பாகற்காய் ரோஸ்ட்) அயிட்டங்களை செய்து கொடுத்தால் ”செல்லகுட்டி அம்மா “அம்மா ரொம்ப அழகும்மா, நீ சமத்தும்மா என்று கொஞ்சுவது பிடித்திருக்கிறது.

ஒன்பது வருடமாக ”ஹலோ என்ற பெயரும் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது என்னடா இது! தொலைபேசியில் தானே முதலில் எடுத்ததும் ஹலோ என்பார்கள். இப்படி ஒரு பெயர் கூட இருக்குமா என்று யோசிக்க வேண்டாம். சமயத்தில் என் கணவருக்கு என் பெயர் மறந்து விடும். அப்போது என்னை அவர் அழைப்பது ”ஹலோன்னுதான்.

இந்த பதிவை எழுத வைத்து என் நினைவலைகளை மீட்ட உதவி செய்த திருமதி ராஜிக்கு என் நன்றிகள். என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்து என் எண்ணங்களை வெளிக்கொணர வைத்த என் கணவருக்கும், என்னுடைய சந்தோஷ வாழ்வை வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிற என் அப்பா, அம்மாவுக்கும் இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்!

ஆதி வெங்கட்.

42 comments:

 1. உல‌க‌த்தில் ஒருத்த‌ருக்கு இத்த‌னை பேர்ன்னா. ஸ்ப்பா க‌ண்ண‌ க‌ட்டுதே...

  ReplyDelete
 2. நான் தான் முதலா?!!

  உங்கள் முழுப் பெயரும் நன்றாக இருக்கிறது, சுருக்கமான ஆதி வெங்கட்டும் அழகாக இருக்கிறது, உங்கள் பதிவைப் போலவே!

  ReplyDelete
 3. இங்க ஏற்க்கனவே ஒரு புவனா இருக்காங்க. எனவே ஆதியாகவே இருங்கள் ( சிவாஜி ஆதி இல்லையே ????)

  ReplyDelete
 4. ஹலோ...... நல்ல பேருங்க :-)))

  ReplyDelete
 5. ரொம்ப நல்லா இருக்குங்க உங்க பெயர்கள் எல்லாம்.அதை நீங்க பதிவா எழுதி இருக்குறது இன்னும் அழகா இருக்கு.

  ReplyDelete
 6. பெயர்க் காரணம் அழகாய் பதிவாகிவிட்டது.
  //சமயத்தில் என் கணவருக்கு என் பெயர் மறந்து விடும். அப்போது என்னை அவர் அழைப்பது ”ஹலோ”ன்னுதான்.//
  என்னை கேட்பார்கள். “உங்க மிசஸை எப்படி கூப்பிடுவீங்க” யோசித்து பார்த்தால் இதுவரை அவர்களை நான் பெயர் சொல்லி அழைத்ததே மிகக் குறைவு தான். அவர் எங்கே இருக்கிறாரோ அங்கே போய் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி விடுவேன்!

  ReplyDelete
 7. உங்கள் பெயர் காரணம் படிக்க எனக்கு முழுவதும் நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்பான [வாழ்க்கையில் மட்டுமல்லாமல் வலைப்பூவினிலும் உங்களோடு வலம்வரும்] கணவருக்கும்.

  //சமயத்தில் என் கணவருக்கு என் பெயர் மறந்து விடும். அப்போது என்னை அவர் அழைப்பது ”ஹலோ”ன்னுதான்.//

  சூப்பர் ..... இந்த ஹலோ எல்லோர் வீட்டிலும் தான் இருப்பினும் அதையே நீங்கள் எழுதியவிதம் அருமை.

  ReplyDelete
 8. ஆதிலக்ஷ்மி - அழகான பேர். என்னது, வீட்டுக்காரருக்கு உங்க பேர் அடிக்கடி மறக்குதா? ம்ஹும், சரியில்லை - மறக்கவே முடியாதபடி உடனடி ஷாக் ட்ரீட்மெண்ட் ஒண்ணு கொடுங்க. ;-)))))

  ReplyDelete
 9. வாங்க முத்துலெட்சுமி,

  அப்படியா! முதலில் பின்னூட்டமிடுவதற்காக வடை உங்களுக்கு .நன்றிங்க.

  வாங்க உயிரோடை,

  ஆமாமா என்ன செய்வது! கண்ணைக் கட்டுதா!
  தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிங்க.

  வாங்க் middleclassmadhavi,

  அழகா இருக்கா! வடையை முத்துலெட்சுமி கொத்திட்டு போயிட்டாங்க. நன்றிங்க.

  வாங்க எல்.கே,

  ஆதியாகவே இருக்கேன். வில்லியெல்லாம் இல்லப்பா! நன்றி சகோ.

  ReplyDelete
 10. வாங்க அமைதிச்சாரல்,

  நல்லாயிருக்கா! எல்லாரும் சொல்லிட்டா இனிமே எப்பவுமே அப்படித் தான் கூப்பிடப்போறார். நன்றிங்க.

  வாங்க ஜி.ஜி,

  உங்க கருத்துக்கு நன்றிங்க.

  வாங்க ரிஷபன் சார்,

  எல்லார் வீட்டிலும் இதே கதை தான் போல இருக்கே! உங்க கருத்துக்கு நன்றி சார்.

  வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்.

  வாங்க ஹுஸைனம்மா,

  ஷாக் ட்ரீட்மெண்ட்டா! என்ன கொடுக்கலாம். எனக்கு ஒன்றும் தெரியாது. உங்க கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 11. பெயர் காரணம் நகைச்சுவையாக ஆரம்பித்து நெகிழ்வாய் முடித்துவிட்டீர்கள்.

  பெயர் நல்லா இருக்கு ஆதிலக்ஷ்மி.

  ReplyDelete
 12. சமயத்தில் என் கணவருக்கு என் பெயர் மறந்து விடும். அப்போது என்னை அவர் அழைப்பது ”ஹலோ”ன்னுதான்.


  ......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க ரொம்ப நல்லவருங்க.... அவர், உங்கள் பெயரையே மறந்தாலும் சிரிச்சிக்கிட்டே சொல்றீங்க..

  ReplyDelete
 13. நானும் ஹுஸைனம்மா சொன்னதை அப்பிடியே ஆமோதிக்கிறேன். வெங்கட் ஹலோன்னு கூப்பிடுவாராமே? ஒரு வாறன்ம் உப்பு போடாம சமைச்சு போடுங்க டயானா.. காலத்துக்கும் பெயரை மறக்க மாட்டாரு

  ReplyDelete
 14. அச்சச்சோ! எழுதக் கூப்பிட்ட நானே லேட்டா?
  (ராஜி!டூ பேட் :-( , டூ லேட் :-( )

  ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி என்று
  மங்கலகரமான என் மனங்கவர்ந்த பாடல் ஒன்று உண்டு.

  அதை போல் உங்க பேர்,பதிவு எல்லாமே மங்கலகரமா எல்லார்
  மனத்தையும் கவருகிறாப் போல இருக்கு.

  //”செல்லகுட்டி அம்மா” “அம்மா ரொம்ப அழகும்மா, நீ சமத்தும்மா” //

  எத்தனை பேரு எத்தனை பேர் வச்சு கூப்ட்டாலும்
  உலகத்துல நமக்கு, இந்த பேருக்கு ஈடு இணை உண்டா ஆதி?

  ReplyDelete
 15. //வீட்டிலும் உறவினர்கள் வட்டத்திலும் புவனா//
  ஐ இன்னொரு புவனா :)))
  (ஐயையோ... இன்னொரு புவனாவா...:-(((( - மைண்ட்வாய்ஸ்)

  //குடும்ப நண்பரான ஒரு மாமா நான் பிறந்த போது ரோஸ்கலரா (நெஜமாப்பா!) இருப்பதை பார்த்து என்னை டயானா என்று அழைக்க தொடங்கி இப்போது வரை அப்படித்தான் அழைப்பார்//
  நல்லவேள...ரோஸ் மேரினு வெக்காம விட்டாரே... நோ அபன்ஸ் உங்க மாமாவுக்கு...சும்மா தோணினத சொன்னேன் சிஸ்டர்...:)

  //முகத்தில் தண்ணீர் ஊற்றினாலும் துடைத்துக் கொண்டு தூங்குவேன்//
  இந்த பேரு வெச்சாலே இப்படிதான் போல...நானும் நெறைய "பெட்பாத்" வாங்கி இருக்கேன்...ஹி ஹி ஹி...:)))

  //தம்பியுடன் சண்டை போடும் போது வாங்கிய பெயர்கள் நாயே, பேயே//
  வீட்டுக்கு வீடு நாய் கடி... இப்பவும் சிலநேரம் டங் ஸ்லிப் ஆகி "சொல்லு நாயே" னு போன்ல சொல்லி ரங்க்ஸ் விடற கிண்டலுக்கு இலக்காவோம் நானும் என் தங்கையும்...ஹா ஹா...:))

  //அதான் தேடிக் கண்டு பிடிச்சிட்டாங்கல்ல//
  ஹ்ம்ம்...கொஞ்சம் குள்ளமா இருந்துருக்கலாம்னு அவர் பீல் பண்றார்னு நியூஸ் வந்ததே...இதான் அதன் பின்னணியா...:)))

  //பல நேரம் கேள்விகள் கேட்கப்பட்டு 'திருதிரு'வென்று முழிக்க வேண்டியிருக்கும்//
  "B" க்கே நான் பல நேரம் திணறி இருக்கேன்... உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுது தோழி...:)))

  //என் முழு பெயரான ஆதிலக்ஷ்மி வெங்கட்ராமன் என்று எழுதி முடிப்பதற்குள் கை வலி வந்து விடும்//
  எனக்கும் அதே கடுப்பு தான்... என்னோட பேரும் அவரோட பேரும் சேத்தா 26 எழுத்து வரும் in English...அட நிஜமாங்க... ஸ்ஸ்ஸ்பப்பா... நல்லவேள இங்கிலீஷ் மொத்தமே அவ்ளோ தான் ...:))

  //”செல்லகுட்டி அம்மா”//
  எல்லா பேர்லயும் இதான் Best of the Best ...:))

  //என் கணவருக்கு என் பெயர் மறந்து விடும்//
  watttttttttttttttttttttttttt? அண்ணா உங்களுக்கு டைம் ஏதோ நல்லா இருக்கப்போய் இப்படி ஒரு நல்ல பொண்ணு ஆத்துக்காரியா இருக்காக... இல்லைனா இப்படி பேரை மறக்கற மேட்டர்க்கு என்னா ஆகறது...:))))

  கொஞ்ச ஓவராத்தான் கமெண்ட் போட்டுட்டனோ... ஹ்ம்ம்... சரி அட்ஜஸ்ட் பண்ணிகோங்க...:)))

  ReplyDelete
 16. நானும் உங்க பெயரை ஆதி என்று ப்ளாக்கில் பார்த்ததில் இருந்து ஆதியுடன் நிறைய காம்பினேஷனில் பெயரை நினைத்து பார்த்தேன்,ஆனால் இந்த லஷ்மியை மட்டும் மறந்திட்டேன்,புவனா அழகான எனக்கு பிடித்த பெயர்.ரொம்ப சுவாரசியமாக இருக்கு.

  ReplyDelete
 17. சுவாரஸ்யமான நினைவலைகள். அது எப்படிங்க நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் இந்த தொடர்ப்திவை எழுதினீங்க...

  ReplyDelete
 18. முதன் முதலாக தாத்தாவின் பெயரில் பேத்திக்கு பெயர் வைத்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.//

  ஏன் நாங்க இருக்கோமே. தாத்தா பேரு கிருஷ்ணமூர்த்தி. பையனா பொறப்பேன்னு நினைச்சாரு அப்பா. பெண்ணா பிறந்தாலும் விடாம கிருஷ்ணாவை என் பேரோட சேர்த்தாட்டாருல்ல மனுஷன்.

  ReplyDelete
 19. சமயத்தில் என் கணவருக்கு என் பெயர் மறந்து விடும். அப்போது என்னை அவர் அழைப்பது ”ஹலோ”ன்னுதான்.//

  என்னக்கொடுமை சரவணன் இது!!! அதெப்படி பேர் மறக்கும். விடக்கூடாது. ஏதாவது செய்யணும் பாஸ்
  :)) (மகளீர் தினத்தில் இப்படி ஏதாவது உருப்படியா செய்யணும்ல)

  ReplyDelete
 20. மிக ரசிச்சு படித்துக் கொண்டே வந்த எனக்கு //என்னுடைய சந்தோஷ வாழ்வை வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிற என் அப்பா, அம்மாவுக்கும் இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன்// என்றதும் off ஆகிட்டேன்.

  ReplyDelete
 21. ஒன்பது வருடமாக ஹலோ வா... நீங்க ரொம்ப பொறுமைசாலிங்க...

  ரிஷபன்... நீங்களுமா....

  ReplyDelete
 22. அருமையான பதிவு. பாராட்டுக்கள். பேரோடும் புகழோடும் வாழ வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. வாங்க கோமதி அரசு அம்மா,

  தங்கள் கருத்துக்கு நன்றிம்மா.

  வாங்க சித்ரா,

  உங்க பாராட்டுக்கு நன்றிப்பா.

  வாங்க மோகன்ஜி,

  உப்பில்லாம கூட சமத்தா சாப்பிட்டுடுவார். கருத்துக்கு நன்றி சார்.

  வாங்க ராஜி,

  எனக்கும் அந்த பாடல் பிடிக்கும். குழந்தைகளின் மழலைக்கும், பாசத்துக்கும் ஈடு இணையே இல்லை.
  கருத்துக்கு நன்றிப்பா.

  வாங்க புவனா,

  இங்கயும் மைண்ட் வாய்ஸா!
  ரோஸ் மேரி! இது கூட நல்லாயிருக்குப்பா.
  நீங்களும் பெட் பாத் வாங்கியிருக்கீங்களா! Same blood!
  நானும் இப்பவும் சொல்லுடா நாயேன்னு சொல்வதுண்டு.
  //என் கணவருக்கு என் பெயர் மறந்து விடும்//
  watttttttttttttttttttttttttt? அண்ணா உங்களுக்கு டைம் ஏதோ நல்லா இருக்கப்போய் இப்படி ஒரு நல்ல பொண்ணு ஆத்துக்காரியா இருக்காக... இல்லைனா இப்படி பேரை மறக்கற மேட்டர்க்கு என்னா ஆகறது...:))))

  இதை அவர் பதிவில இல்ல நீங்க போடனும். :)

  பெரிசா பின்னுட்டமிட்டதற்கு நன்றி.

  ReplyDelete
 24. வாங்க ஆசியா உமர்,

  ஆதி என்ற எனது பெயருடன் காம்பினேஷனல்லாம் போட்டு பார்த்ததுக்கு நன்றிங்க. உங்க கருத்துக்கு நன்றி.

  வாங்க கலாநேசன்,

  கண்ணு வைக்க கூடாது! :) கருத்துக்கு நன்றி சகோ.

  வாங்க புதுகைத் தென்றல்,

  உங்களுக்கும் தாத்தா பெயரை வெச்சிருக்காங்களா!
  பேர் மறந்துடுதே என்ன செய்ய!
  கருத்துக்கு நன்றிங்க.

  வாங்க thirumathi bs Sridhar,

  தங்கள் வருத்தத்துக்கு நன்றிப்பா. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

  வாங்க ஸ்வர்ணரேக்கா,

  உங்க பாராட்டுக்கு நன்றிங்க.

  வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 25. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

  மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

  ReplyDelete
 26. வெரி குட்! வெரி குட்! நல்ல பேரும் புகழும் பெற்று வாழ்க! வாழ்க!

  (எதுக்கும், மிஸ்டர் ஹலோ, உண்மையிலேயே பேரை மறந்தாரா!இல்லை, சுதாரிக்கிறாரா! என்று கவனித்துக் கொள்ளுங்கள்)

  (எங்க வூட்டுக்காரரு ரொம்ம்ப்ப்ப நல்லவரு என்று சொல்லுவது கேட்கிறது.)

  ReplyDelete
 27. உலகாளும் மாதரசியே, கோவையரசியே,
  இப்படி பலபெயர்களிட்டு என் பின்னூட்டங்களில் உங்களை அழைக்கும் பாணியை நான் ஆரம்பித்து அந்த மரபினை தொடர்ந்து காப்பாற்றிவரும் முதல்வனாக நான் இருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். இது ஒரு ஆனந்த உணர்ச்சியின் வெளிப்பாடு அன்றி வேறு இல்லை.இதில நான், தங்களை ஆதிலட்சுமி என்று அழைத்ததும் அடக்கம். எனக்கு மிகவும் பிடித்த பெயரும் இதுவேயாகும்.

  சிலவீடுகளில், மனம்கவர் கள்வன், எங்கே அம்மா, பெண்டாட்டி தாசன் என்று கூறுவார்களோ (அல்லது) மனம்வருந்துவார்களோ என்று மனைவியை பெயரிட்டு அழைப்பதை தவிர்த்து விடும் போக்கும் உண்டு. மற்றும் சிலபேர், மனைவியை , "அடியே, ஏண்டி " என்று மரியாதையாக அழைப்பதை கேட்டிருக்கிறேன். சில புகுந்த வீடுகளில், தாய் வீட்டில் வைத்த மூன்று பெயர் தவிர மற்றொறு பெயர் வைப்பதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். கரமபிடித்தவளை, என்றும் மாறா காதலோடு ஒரு "செல்லப் பெயரிட்டு," (அம்மா இல்லாதபோது) அழைப்பதும் உண்டு. சாலமன் பாப்பையா பாணியில் " உள்ளம் கவர்ந்தவன், எந்த பெயரிட்டு அழைத்தால், மனையாட்டிக்கு மனம் இன்ப ஊஞ்சலாடுமோ , அந்த பெயரிட்டு அழைப்பதில் பெருமைகொள்ளலாம்" என தீர்ப்பு அளிக்கிறேன்!!

  தங்கள் பெயருக்கு பின்னால் உள்ள காரணங்களை, அதில் மறைந்திருக்கும் உணர்சிகளின் பிரதிபலிப்பை சுவைபட கூறிய பாங்கினை வியந்து போற்றி தங்களுக்கு ,"நவரச நாயகி" என்ற மற்றுமொரு பெயரை , இந்த "பெண்கள் நூற்றாண்டில்" சூட்டுவதில்நான் பெருமை கொள்கிறேன்.! வாழ்க, வளர்க!!!

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 28. அந்த குலதெய்வம் பேரு நாகலெட்சுமி தானே..
  ஹலோ அப்படின்னு கூப்பிட்ட ராங் நம்பெர்ன்னு சொல்லிடுங்க.. சரியாயிடுவாறு.. ;-))
  பெயர்க்காரண பதிவு நன்றாக இருந்தது. ;-))

  ReplyDelete
 29. வாங்க பாரத் பாரதி,

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  வாங்க ஈஸ்வரன்,

  உங்க வாழ்த்துக்கு நன்றி.

  நெஜமாவே என் வூட்டுக்காரரு ரொம்ப நல்லவரு தான்!

  வாங்க V.K.NATARAJAN அவர்களே,

  தங்களின் தீர்ப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க ஆர்.வீ.எஸ்,

  உங்க யூகத்துக்கு நன்றி. ஆனா அதில்லை.

  ராங் நம்பர்ன்னு சொல்லலாமா! ஓகே!

  வரவுக்கு கருத்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 30. இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 31. RVS said...

  ஹலோ அப்படின்னு கூப்பிட்ட ராங் நம்பெர்ன்னு சொல்லிடுங்க.. சரியாயிடுவாறு.. ;-))

  haah hhhaaaaaa haaa haaaa haahhaaaa.......

  ReplyDelete
 32. வாங்க ராஜி,

  மீண்டும் வரவு தந்ததற்கு நன்றி.

  வாங்க அமுதா கிருஷ்ணா,

  கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 33. ஆஹா...நகைசுவையுடன் அழகாக எழுதி இருக்கின்றிங்க..

  நானும் தம்பி தங்கையிடம் அந்த பெய்ரை வாங்கியது உண்டு...அவர்களையும் அதே மாதிரி சொல்லி இருக்கின்றினேன்.....அது எல்லாம் இனிமையான மலரும் நினைவுகள்...

  ReplyDelete
 34. கலக்கறீங்க ஆதி...! ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் அதன் மென்மையும் மணமும் அப்படியே ....

  ReplyDelete
 35. வாங்க கீதா ஆச்சல்,

  ஆமாம். இது மலரும் நினைவுகள் தான்!

  தங்கள் பாராட்டுக்கும் நன்றிங்க.

  வாங்க நிலாமகள்,

  ரோஜாவுடன் ஒப்பிட்டு என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டீர்கள்!

  கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 36. வாவ்...

  பெயர் காரணம் பற்றி ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..

  ஹலோ... எனக்கும் சொல்லணும் போல இருந்தது...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 37. வாங்க R.GOPI,

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 38. //நானும் ஹுஸைனம்மா சொன்னதை அப்பிடியே ஆமோதிக்கிறேன். வெங்கட் ஹலோன்னு கூப்பிடுவாராமே? ஒரு வாறன்ம் உப்பு போடாம சமைச்சு போடுங்க டயானா.. காலத்துக்கும் பெயரை மறக்க மாட்டாரு
  March 7, 2011 at 8:43 PM//

  ம்ஹும், இவ்வளவு பொறுமையாவா இருக்கிறது? உடனே மோகன் ஜி சொன்னாப்போல் செய்யுங்க. இப்போ வருவாரில்லை. வந்ததுமே உங்க ஷாக் ட்ரீட்மென்டை ஆரம்பிச்சுடுங்க. :)))))

  ReplyDelete
 39. கமென்ட் அனுப்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. நெட் சொதப்பல், கூகிள் தகராறு. :(

  நம்மவர் மத்தவங்க பேரைத் தான் இஷ்டத்துக்கு மாத்துவார். இதுவரைக்கும் அவர் மாத்தாத ஒரே நபர் என்னோட பெயர் மட்டுமே. :P :P :P
  வல்லியோட பதிவிலே சுட்டியைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன். :)))

  ReplyDelete
 40. கீதா மாமி,

  வல்லிம்மா பதிவுல பார்த்துட்டு இங்க வந்ததுக்கு நன்றி.
  ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்துடலாமா! சரி செய்துடலாம்....:))ஆனா பாருங்க மாமி, உப்பில்லாம கூட சமத்தா சாப்பிட்டுடுவார்...:))) என்ன செய்ய?

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…