Monday, February 28, 2011

தாதி - நானி

அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைய இருக்கும் இந்த காலத்தில் ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இருக்கும் தடுப்பே ஒரு ஒற்றைக்கல் சுவர் தான். இது கூட பரவாயில்லை. ஒரு தெருவில் இருக்கும் வீடுகளுக்கும், அடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கூட மிகவும் குறைவே.  Service Street” என்று சொல்லக்கூடிய சிறிய தெருவைத்  தாண்டினால் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கம் வந்து விடும்.  இந்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அதிக பட்சமாய் 30 அடி இடைவெளிதான். 
ஒற்றைக் கல் சுவராக  இருப்பதால், இந்த வீட்டில் ஒரு பாத்திரம் விழுந்தால் கூட அடுத்த வீட்டில் சத்தம் கேட்கும் அளவுக்குத் தான் இருக்கிறது.   இதை விட மோசமான விஷயம் அடுத்த தெருவில் உள்ள வீட்டில் பேசுவது எல்லாம் கூட துல்லியமாய்க்  கேட்கும். 
என் வீட்டின் பின்புற வீட்டில் உள்ளவர்கள் பேசும் எல்லாமே, நமக்குத் தேவையோ இல்லையோ நம் காதில் வந்து பாயும்.  இந்த வீட்டின் பெண்மணி ஆடும் தோய்ப்பு நடனம் பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.  பெரும்பாலான நாட்களில் நாங்கள் காலையில் துயிலெழக் கேட்கும் சுப்ரபாதமே, “பிங்கி பாட்டி கரோ!” என்பது தான்.  ஹிந்தி புரிந்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரிந்து இருக்கும்.  இல்லையெனில் பதிவின் முடிவில்  புரிய வைக்கிறேன்.
நாங்கள் காலையில் பெண்ணரசியை பள்ளிக்கு அனுப்ப சீக்கிரம் சீக்கிரமாக தயார் செய்து கொண்டு இருக்க, அங்கே அவர்கள்பிங்கியை தயார் செய்து கொண்டு இருப்பார்கள், என்ன, மேலே சொன்னபடியான வாக்கியங்கள் அவ்வப்போது  சத்தமாய் வந்து கொண்டிருக்கும். 
அதுவும் ஒரு முறை சொன்னால் கேட்க மாட்டார் அந்த பிங்கி.  திரும்பத் திரும்ப அவர் அம்மா ஐந்தாறு முறையாவதுபிங்கி பாட்டி கரோஎன்று சொல்லவேண்டும், பிறகுதான் வேலை நடக்கும். 
 சரி என்னடா அதுபாட்டியைஎதுக்குடா அடிக்கடி கூப்பிடறான்னு சந்தேகம் வருதா?  ஹிந்தியில்பாட்டி கரோஎன்றால்டாய்லெட் போஎன்று அர்த்தம்.  இந்த பாட்டியை கேட்டு நாளை ஆரம்பித்தால்இந்த நாள் இனிய நாள்என்று சொல்ல முடியுமா என்ன?
இந்த பாட்டியோட அர்த்தமே வேறு ஆகிவிடுவதால், தில்லியில் உள்ள தமிழ் குழந்தைகள் தனது பாட்டியைபாட்டிஎன அழைக்காமல் ஹிந்தியிலேயே அப்பா வழி எனில்தாதி [Dhadhi] எனவும் அம்மா வழி பாட்டி எனில்நானி” [Naani] என்றுமே   அழைக்கின்றனர்.

24 comments:

 1. ஹஹ்ஹா.. என்னால முடியலங்க..

  எங்க வீட்டுல சபரி .. முன்னாடில்லாம் என்னை கூப்பிட ஃபினீஷ் ந்னு கத்துவான் இப்பல்லாம் ஆயிடுச்ச்ச்சு ந்னு கத்துவான்( அதான் தமிழ் கத்துகிட்டான்ல).. ஹஹ்ஹா.. நானும் ஏண்டா ஊரையே கூட்டரேன்னு திட்டிக்கிட்டே போவேன்.. அப்ப இப்படித்தான் சொல்வேன்.. நீ இங்க உக்காந்திருக்கேன்னு தெருவில் எல்லாருக்கும் தெரியனுமான்னு.. ஜன்னல் ரோட்டு ஓரத்தில் இருக்கே.. :))

  அந்த வார்த்தையத்தான் முதல் முதல் கெட்ட வார்த்தையா சபரி திட்டரதுக்கு கத்துகிட்டது.. :( இப்ப அது போய் பாகலோங் , சிலசமயம் ஆலு (அதுஎன்ன பாவம் செய்தது )

  ReplyDelete
 2. நல்ல சுவாரசியமான பகிர்வு.இனிமே பிங்கி பாட்டி கரோ லேசாக மறக்கும்னு நினைக்கிறீங்க.

  ReplyDelete
 3. அந்த “பாட்டி” எங்கள் பகுதியில் “போட்டி” என்றே சொல்லப்படுகிறது. “மே போட்டி நை கருங்கா “ என்று அடம் பிடிக்கும் எதிர் வீடு குழந்தையின் அழுகையை நானும் தினம் கேட்கிறேன்.

  ReplyDelete
 4. நல்ல வேடிக்கையான பதிவு.

  பிங்கி பாட்டி காரோ பண்னால் தான் அந்த குழந்தைக்கு இனிய நாள். அம்மாவுக்கு நிம்மதி.

  காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் எல்லாம் இந்த பாடல் ஒலிக்கும் ஆதி.

  ReplyDelete
 5. Ha ha... sema comedy :)

  Language ragalai ellaa pakkamum undu pola...

  ReplyDelete
 6. அவ். இப்படி ஒரு அர்த்தம் இருக்கா பாட்டிக்கு

  ReplyDelete
 7. நல்ல காமெடிதான்.

  ReplyDelete
 8. It is Potty over here... Same blood!

  ReplyDelete
 9. இந்த உங்கள் பதிவு படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

  என் பேரனுக்கு ஒரு வயதோ இரண்டு வயதோ இருக்கும் போது (அன்றும் இன்றும் துபாயில் இருப்பவர்கள்) இங்கு திருச்சி வந்தால் அந்தக் குழந்தை இங்குள்ள எங்கள் வீட்டு டாய்லெட்டுக்குள் போகவே மாட்டான்.

  அவனை எந்த மொழியில் கெஞ்சினாலும் ”நோ” [NO] சொல்லி விடுவான்.

  இதை முன்கூட்டியே நன்கு அறிந்து திட்டமிட்ட என் புத்திசாலி மருமகள் அவர்கள் துபாயிலிருந்து இங்கு வரும்போதே, ’பாட்டி’ என்று சொல்லி (ஒரு தக்காளி நிறத்தில்) கெட்டி ப்ளாஸ்டிக்கில் செய்த மொபைல் டாய்லெட் ஒன்று கையோடு கொண்டு வந்து விட்டாள்.

  அதை எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன் படுத்தலாம். (ஆகாய விமானம், ரயில் முதலியன) நடு ஹாலில் அவன் டி.வி. யில் கார்ட்டூன் சானல் பார்த்துக்கொண்டே, இந்த முக்கியமான வேலைகளையும் முடித்துக் கொண்டு விடுவான்.

  பிறகு அவள் அதை பாத்ரூமுக்கு எடுத்துச் சென்று சுத்தப்படுத்திவிட்டு, அங்கேயே ஒரு ஓரமாக வைத்து விடுவாள்.

  திரும்பத் தேவைபடும் போது “அம்மா........ஐ வாண்ட் பாட்டி” என்பான்.

  என் வயதான தாயாரும் அப்போது என்னுடன் இருந்ததால், தன்னைத் தான் ஆசையாக கொள்ளுப்பேரன் கூப்பிடுகிறானோ என்று “என்னடா கண்ணு வேணும்” என்பாள்.

  ”ஐ டோண்ட் கால் யூ” என்று கத்துவான். இப்போது இந்த தங்களின் பதிவைப் படித்த பிறகு தான் இது பற்றிய விவரம் முழுமையாக உணர முடிகிறது.

  நல்லதொரு நகைச்சுவையான பதிவு தான். நன்றி! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. Sariya pochu ponga.unga pathivula comedy padichutu coments paatha gopalakrishnan sir vera inum comedyaakitar

  ReplyDelete
 11. //தில்லியில் உள்ள தமிழ் குழந்தைகள் தனது பாட்டியை “பாட்டி” என அழைக்காமல் ஹிந்தியிலேயே அப்பா வழி எனில் “தாதி [Dhadhi] எனவும் அம்மா வழி பாட்டி எனில் ”நானி” [Naani] என்றுமே அழைக்கின்றனர்.//

  இந்தக் குழப்பம் இன்றுதான் தீர்ந்தது எனக்கு. தாதி,நானி வித்தியாசம் என்னவென்று ரொம்ப நாள் தெரியாமலே இருந்தது. :-)

  ReplyDelete
 12. மாதரசியே,

  தங்கள் பாட்டி வைத்யம் பற்றி குறிப்புகளை கொடுக்கிறீர்கள் . தங்களுக்கு தெரியாததா, "பாட்டி கரனே கே பாத் ஹி தின் அச்சா ரஹேகா?" பஸ் பாட்டி, மாப் கீஜியே, மாமணியே, மைன் பிதா லேதா, பிர் மிலேங்கே!

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 13. 'இடக்கரடக்கல்' விஷயங்கள் எப்பவும் 'எடக்குமடக்காக'த் தான் இருக்கும் போல... உங்க பதிவும், வை.கோ. சாரின் மறுமொழியும் ரசிக்கும்படி இருக்கிறது ஆதி...

  ReplyDelete
 14. அப்ப ஹிந்தியில பாட்டின்னா நாஸ்ட்டியா... ;-)))))

  ReplyDelete
 15. நல்லவேளை! நான் பாட்டி ஆகவே மாட்டேன்.

  ReplyDelete
 16. //என் வீட்டின் பின்புற வீட்டில் உள்ளவர்கள் பேசும் எல்லாமே, நமக்குத் தேவையோ இல்லையோ நம் காதில் வந்து பாயும். //
  நோட் பண்ணாதீங்க..நோட் பண்ணாதீங்க..

  ReplyDelete
 17. வாங்க முத்துலெட்சுமி,

  ரோஷ்னியும் அப்படி தான் கத்துவா!
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க ஆசியா உமர்,
  ஊரிலிருந்து வந்திருந்த என் நாத்தனார் மகன் பிங்கி என்று அந்த வீட்டில் கத்தியவுடனேயே பாட்டி கரோ என்று பின்னாடியே சொல்லுவான். எங்கிருந்து மறக்கறது.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க ஆச்சி,

  எல்லா இடத்திலும் இதே தான் போல. :)
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  நீங்க சொல்வது சரி தான்.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  வாங்க புவனா,

  கருத்துக்கு நன்றிப்பா.

  வாங்க எல். கே,

  ஆமாம் சகோ. சத்தமா இங்க சொல்லக்கூடாது. :)
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  வாங்க லக்ஷ்மிம்மா,

  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  வாங்க சித்ரா,

  THANKS FOR UR COMMENT.

  வாங்க அமுதா கிருஷ்ணா,

  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  நீங்க சொல்வது போல் கொள்ளு பாட்டி கேட்பது பேரன் கூறுவது காமெடியா இருக்கு.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  வாங்க ராஜி,

  ஆமாம்ப்பா. அவர் எழுதி இருக்கும் விஷயத்தை நினைத்து பார்த்தால் காமெடியா இருக்கு.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க மங்கை,

  உங்கள ரொம்ப நாளா காணோமே.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க சேட்டை,
  குழப்பம் தீர்ந்ததா!
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க V.K.NATARAJAN அவர்களே,

  ஹான் ஜி. பாட்டி கர்னே கே பாத் ஹி தின் அச்சா ஹோகா.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க நிலா மகள்,

  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க ஆர்.வீ.எஸ்,

  அந்த வேளை நடக்கலன்னா தான் நாம நாஸ்ட்டி ஆயிடுவோம்.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  வாங்க EASWARAN,

  ஆமாம். வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க கலாநேசன்,

  நான் நோட் பண்ணலைங்க. அதுவா காதில விழுதே! என்ன செய்வது.
  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 18. இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 19. பாட்டியை பிரபலமாக்கி விட்ட பதிவு..

  ReplyDelete
 20. என் பிள்ளைகள் லண்டன் போகணும் என்பார்கள்.
  நம்பர் ஒன்னை 'பௌலிங்' என்றும் நம்பர் டூவை 'பாட்டிங்' என்றும் சொல்வார்கள்..

  இப்படியெல்லாம் சொல்வதற்கு தமிழிலக்கணத்தில் 'இடக்கரடக்கல் 'என்பார்கள்.-(சபையில் சொல்லக் கூசும் விஷயத்தை ஓர் குறிப்பு பெயரால் உணர்த்துவது)

  ReplyDelete
 21. நன்றாக இருந்தது நகைச்சுவை.மொழிக்குழப்பம்.

  ReplyDelete
 22. வாங்க ரிஷபன் சார்,

  ஆமாம். கருத்துக்கு நன்றி சார்.

  வாங்க மோகன்ஜி,

  தமிழிலக்கணத்தில் இருந்து கூறியதற்கு நன்றி சார்.

  வாங்க இராஜராஜேஸ்வரி,

  கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…