Monday, February 14, 2011

பூத்துக் குலுங்குது தில்லி


தில்லியில் சீசன் என்றால் அது பிப்ரவரி - மார்ச் மாதங்கள் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் ஆகிய மாதங்கள் தான். தில்லியை சுற்றி பார்க்க வருபவர்கள் கூட இந்த மாதங்களில் வந்தால் தான் சிரமமில்லாமல் இருக்க முடியும். காரணம் கோடையில் அதிக பட்சமாக சுட்டெரிக்கும் வெயில். குளிர்காலத்தில் கடுங்குளிர். இந்த சீசனில் தட்பவெப்ப நிலை இதமாக இருக்கும்.

பிப்ரவரி மாதத்தில் தான் வசந்தபஞ்சமி வரும். வசந்த காலம் ஆரம்பிக்கும் முதல் நாளில் கொண்டாடப்படும் பண்டிகைதான் இது.  அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடுவார்கள்.  பள்ளிகளில் சிறு குழந்தைகளை மஞ்சள் நிற உடை உடுத்தி, மஞ்சள் நிற பூவினையும், மஞ்சள் நிற உணவினையும் எடுத்துக்கொண்டு வரச் சொல்வார்கள்.

பூக்களைப் பார்த்தாலே மனதுக்கு இதமாக, சந்தோஷமாகத் தோன்றும். கடுங்குளிர் முடிந்து கொஞ்சமாக குளிரும் மிதமான வெயிலும் ஆரம்பிக்கும் இந்த வேளையில் பூச்செடிகள் எல்லாம் பூத்து குலுங்கும். சாலைகளின் ஓரங்களிலும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் கார்டனில் (MUGHAL GARDEN) இந்த மாதத்தில் தான் பலவிதமான ரோஜாக்கள், டேலியா, மற்றும் பலவிதமான பூக்கள் பூத்துக் குலுங்கும். ஆதலால் இந்த நேரத்தில் தான் பார்வையாளர்களுக்கும் முகல் கார்டன் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைக்கும்.

இந்த கார்டன் 15 ஏக்கர் பரப்பளவுள்ளது. இதில் வித விதமான மலர்களும், மூலிகைத் தோட்டமும், அரிதான மரங்களும், அரிதான மலர்களும், ரோஜாவுக்கென்றே தனி தோட்டமும் இருக்கும். இந்த பெரிய இடத்தை சுற்றிப் பார்க்கும் போது அங்கங்கே இளைப்பாற இடங்களும் உண்டு. சென்ற வருடம் தான் முதன் முறையாக சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாதுகாப்பு காரணத்துக்காக செல்போன், ஹாண்ட் பேக், உணவுப் பொருட்கள். பேனா, போன்ற எதையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அப்படின்னா, கத்தி, துப்பாக்கி எல்லாம் எடுத்துட்டு போகலாமான்னு கேட்கக் கூடாது!  குழந்தையை வைத்துக் கொண்டு எதையும் எடுத்துச் செல்லாமல் போகவும் முடியாது.  இந்த காரணத்துக்காகவே தான் சென்ற வருடம் தான் சென்றோம். இந்த வருடமும் முகல் கார்டன் திறந்த உடன் செல்ல நினைத்து இருக்கிறோம். இந்த முகல் கார்டனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

இங்கு புகைப்படங்களும் எடுக்க அனுமதி இல்லை. சென்ற வருடம் ஊரிலிருந்து உறவினர்கள் இந்த சீசனில் வந்திருந்தார்கள். அவர்களுடன் LOCAL SIGHT SEEING வேன் எடுத்துக் கொண்டு சென்றோம். அப்போது சென்ற இடங்களிலும், சாலை ஓரங்களிலும் பூத்திருந்த மலர்களின் அணிவகுப்பை காணுங்கள்.

தில்லியின் அப்டேட்கள்

கடுங்குளிர் முடிந்து விட்டதால் நானும் ரஜாய், ஸ்கார்ஃப், சாக்ஸ் இவற்றிலிருந்து விடுதலையாகி விட்டேன். சற்று சுறுசுறுப்பாகவும் உணர்கிறேன். குளிர் காலங்களில் காய்கறிகளும், பழங்களும், பார்க்கவே பச்சை பசேல் என வாங்கத் தூண்டும்படியாக இருக்கும் என்று  ஏற்கனவே கூறியிருந்தேன் அல்லவா!  இந்த வார காய்கறிச் சந்தைக்கு சென்ற போது, மற்ற பழங்களுடன் திராட்சை வர ஆரம்பித்திருப்பதைப் பார்த்தேன். காய்கறிகளின் விலையும் மலிந்திருந்தது.

உருளைக்கிழங்கு, காலிப்ளவர், முள்ளங்கி ஆகியவை ஒன்றரை கிலோ 10 ரூபாய்க்கும், பச்சைப் பட்டாணி, கேரட் ஆகியவை கிலோ 10 ரூபாய்க்கும் கிடைக்கிறது. வெங்காயம் கிலோ 25 ரூபாயாகவும், தக்காளி கிலோ 20 ரூபாயாகவும் விற்கிறது. இது மலிவு என்றாலும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த சீசனில் உருளைக்கிழங்கு 4 கிலோ 10 ரூபாய்க்கு கூட வாங்கியிருக்கிறேன்.   உங்க ஊரில் எப்படி?

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போமா?31 comments:

 1. மொகல் கார்டன் கண்ணைக்கவரும் ..

  நானும் குளிராடையிலிருந்து தப்பிச்சு இப்பத்தான் சுறுசுறுப்பா உணருகிறேன்.:))

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு நன்றி.

  ReplyDelete
 3. டியர் வெங்கட், படித்தேன் பார்த்தேன் ரஸித்தேன். பதிவு மிகவும் அருமை. நானும் என் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை அதுவும் ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு தலைநகருக்கு வந்திருந்தேன். பல இடங்களையும் சுற்றிப் பார்த்தேன். அது ஒரு தனி அனுபவமாகத் தான் இருந்தது. காய்கறி விலைகள் இங்கு திருச்சியில் ரொம்பவும் ஜாஸ்தியாக உள்ளது. நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் டெல்லியில் தான் கொள்ளை மலிவோ என்று தோன்றுகிறது. OK Bye now.

  ReplyDelete
 4. Respected Madam,
  Sorry. I have given my comments addressed to Dear Venkat.
  Please adjust.

  ReplyDelete
 5. முகல் கார்டனுக்கு நானும் 2009ல் சென்று வந்தேன்.வித விதமான பூக்களுக்கு இடையே நம்ம ஊர் கனகாம்பரம்,நந்தியாவட்டை பூவும்,மூலிகைச் செடி பகுதியில்,அருகம்புல்,கண்டங் கத்திரிக்காய் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 6. காலமெல்லாம் காதல்,
  வாழ்க வளமுடன் !
  http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

  ReplyDelete
 7. நேற்றைய மழையோடு நிறைவுற்றது குளிர்காலம். ஆனா, ஹோலி வரைக்கும் கொஞ்சமா குளிர் இருக்கும்.

  ReplyDelete
 8. முகல் கார்டன் பேப்பரில் பார்த்தேன். காய் விலை இப்ப கொஞ்சம் ஓகே .

  ReplyDelete
 9. cute post and all those pics, sis. daliya and jaathimalli are my favorites... :)

  enjoy the weather now... :))

  ReplyDelete
 10. குதுகுலுக்கும் டெல்லி பதிவு அருமை.

  நாங்க அங்கு வந்த் போது சீசன் சரியில்ல கச க்சன்ன்னு இருந்தது.

  ReplyDelete
 11. டெல்லி பதிவு மிகஅருமையாக தொகுத்துள்ளீர்கள்.. ..

  ReplyDelete
 12. வாங்க முத்துலெட்சுமி,

  நன்றிங்க.

  வாங்க லாவண்யா,

  நன்றிங்க.

  வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

  வாங்க thirumathi bs Sridhar,

  நன்றிங்க.

  வாங்க ஆகாயமனிதன்,

  நன்றிங்க.

  வாங்க கலாநேசன்,

  நன்றிங்க.

  வாங்க எல்.கே,

  நன்றிங்க.

  வாங்க அன்னு,

  THANK U.

  வாங்க JALEELA KAMAL,

  நன்றிங்க.

  வாங்க அன்புடன் மலிக்கா,

  நன்றிங்க.

  ReplyDelete
 13. இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 14. நல்ல படங்கள் ஷேர் பண்ணியதுக்கு தேங்க்ஸ் ஆதி... டெல்லி வந்து இருக்கேன் ஒரே ஒரு முறை காலேஜ்ல இருந்து, ஆனா இந்த இடம் பாத்தது இல்லை...

  இங்க இன்னும் குளிர் கொன்னுட்டு தான் இருக்கு... மைனஸ் பத்துல இருந்து இருவது வரை இருக்கு... எப்படா இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் எல்லாம் தூக்கி போடலாம்னு காத்துட்டு இருக்கோம்... ஹா ஹா...

  Nice post :))

  ReplyDelete
 15. வாங்க புவனா,

  உங்க கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 16. இருக்கவா, போகவான்னு குளிர் இங்க இன்னும் யோசிச்சிட்டு இருக்கு. ஒரு மழை விழுந்தாப்போதும், ஓடிடும் :-)))

  ReplyDelete
 17. நல்ல பதிவுங்க. பலமுறை தில்லி வந்தும் இந்த கார்டனைப் பார்க்கவில்லை. அடுத்த முறை அவசியம் பார்ப்பேன்.நன்றி

  ReplyDelete
 18. வாங்க அமைதிச்சாரல்,

  இங்கயும் மழைத் தூறல் போட்டுகிட்டே குளிர் கொஞ்சம் அதிகமாகலாமா, வேண்டாமான்னு யோசிச்சுகிட்டே இருக்கு. கருத்துக்கு நன்றிங்க.

  வாங்க மோகன்ஜி,

  அடுத்த முறை வரும்போது அவசியம் பாருங்கள். கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 19. பகிர்வுக்கு நன்றி.தில்லி பற்றிய ஐடியா உங்க ப்ளாக்கின் மூலம் நிறைய தெரிஞ்சிகிட்டு வருகிறேன்.தொடர்ந்து எழுதுங்க.1989 -ல் வந்தது,மறந்து போய் விட்டது,குழந்தைகளுடன் வந்து பார்க்கணும்னு ஆசை.

  ReplyDelete
 20. வாங்க ஆசியா உமர்,

  கண்டிப்பா டெல்லிக்கு வாங்க. கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 21. இந்த மாதம் வந்தால் முகல் தோட்டம் பார்க்கலாம் ஆனால் வரமுடியவில்லை.

  நீங்கள் ரசித்து வாருங்கள் குழந்தையுடன் எங்களுக்கு நல்ல பதிவு தாருங்கள் அதைப் பற்றி ஆதி.

  ReplyDelete
 22. மொஹல் கார்டனுக்கு போன வருஷம் போனேன்ங்க.உண்மையிலேயே கொள்ளை அழகு. டெல்லியைப் பற்றி அருமையா சொல்லி இருக்கீங்க.
  இன்னும் நிறைய சொல்லுங்க.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. வாங்க கோமதி அரசு அம்மா,

  இன்னும் போகலைம்மா. போயிட்டு வந்து தெரிவிக்கிறேன். நன்றிம்மா.

  வாங்க ஜி.ஜி,

  தங்கள் கருத்துக்கு நன்றிப்பா.

  ReplyDelete
 24. நானும் டெல்லி வந்திருக்கிறேன் 84லில்.
  டூரிஸ்ட் வேகத்தில் தாஜ்மஹால்,குதுப் மினார்,வேக வேகமாக வெயிலில் எதையும் ரசிக்க முடியாமல் [ஜூன் ஜூலை]சுற்றிய நினைவு.ஆர்வத்தை ஊட்டிவிட்டீர்கள்.நல்ல சீசனில் சாவகாசமாக வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 25. வாங்க goma,

  வாருங்கள் சீசனில் வந்தால் ரசிக்கலாம். முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 26. முதல்முறை வருகிறேன்.. தங்கள் பிளாக் அருமையாக உள்ளது...

  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

  ReplyDelete
 27. பள்ளிகளில் சிறு குழந்தைகளை மஞ்சள் நிற உடை உடுத்தி, மஞ்சள் நிற பூவினையும், மஞ்சள் நிற உணவினையும் எடுத்துக்கொண்டு வரச் சொல்வார்கள்//
  மனதை மயக்கும் மஞ்சள் -நினைத்தாலே இனிக்கிறது.

  ReplyDelete
 28. வாங்க வேடந்தாங்கல் – கருன்,

  முதல் வரவுக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

  வாங்க இராஜராஜேஸ்வரி,

  கருத்துகளுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 29. நான் அங்கிருந்த காலத்தில் பெரும்பாலும் வாரயிறுதி நாட்களில் நான் சென்றது டெல்லித் தமிழ்ச் சங்கம். அருமையான நூல்நிலையம். நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும். திரைப்படங்களும் உண்டு.

  ReplyDelete
 30. வாங்க சுந்தரவடிவேல்,

  நான் இன்னும் தமிழ்ச்சங்கம் சென்றதே இல்லை. முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. போன வருடம் மார்ச்சில் டில்லி வந்தேன். முகல் கார்டன் அடுத்த முறை கட்டாயம் பார்க்க வேண்டும்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…