Thursday, February 3, 2011

அவசரத்துக்கு கை வைத்தியங்கள்


பதிவாளர் திருமதிமனோ சாமிநாதன்தனது ஒரு பதிவில் அவரது அனுபவங்களையும், தனது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அதற்கு பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படுகிற கை வைத்தியங்கள் எப்படி உதவி புரிந்தன என்றும் சொல்லியிருந்தார்கள். இதை படித்தது, எனது மாமியார் எனக்கு எழுதிக் கொடுத்த கை வைத்தியங்கள் இருந்த டைரியை தேடி எடுக்க வைத்தது. இந்த இடுகை எழுத காரணமாயிருந்த மனோம்மாவுக்கு எனது நன்றி.

இந்த வைத்தியங்கள் பெரும்பாலான நேரங்களில் எனக்கும் என் மகளுக்கும் உதவியாய் இருந்திருக்கின்றன. தொட்டதெற்கெல்லாம் மருத்துவரிடம் சென்று காண்பிப்பதை தவிர்க்கும் அதே வேளையில் அலட்சியமாகவும் இருந்துவிடக்கூடாது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் அவசர தேவைகளுக்கும் இந்த முறைகளை உபயோகித்துக் கொள்ளலாம்.

இங்கு மாமியார் எழுதி கொடுத்த சில கை வைத்தியங்களைக் கொடுத்துள்ளேன்.  

சுளுக்கு:-

கை கால்களில் சுளுக்கு ஏற்பட்டால் உப்பில் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து பற்று போட குணமாகும்.

கட்டி, புண்:-

மாதுளை இலை, கொய்யா இலை இதில் எது கிடைக்கிறதோ அதை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கட்டி, புண் இவற்றில் தடவ குணமாகும்.

பல் வலி:-

மல்லிகை செடியின் இலையை வாயில் அடக்கிக் கொள்ள பல்வலி குணமாகும்.

அரிப்பு , சேற்றுப்புண் :-

பாகற் கொடியின் இலை சாறை தேய்த்தால் அரிப்பு சேற்றுப்புண் சரியாகும்.

தொண்டைப்  புண்:-

மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து நெய்யில் குழைத்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட சரியாகும்.

சளி:-

குழந்தைகளுக்கு சளி பிடித்தால் மாதுளம் பழசாற்றுடன் தேன் கலந்து கொடுக்கவும்.

நெஞ்சில் கபம் இருந்தால் வால் மிளகை தூள் செய்து ஒரு சிட்டிகை தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும்

அல்லது சிறிது கோதுமை மாவினை வாணலியில் வறுத்து அதைத் துணியில் கட்டி வைத்து, பொறுக்கும் சூட்டில், நெஞ்சு, முதுகு பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் கபம் இளகி வெளியேறும்.  தில்லியில் ஒத்தடம் கொடுப்பதைசிக்காய்” [SIKKAAI] என்று சொல்கின்றனர்

மேலும் சில குறிப்புகளை வேறு ஒரு பதிவில் பகிர்கிறேன்.

32 comments:

 1. நல்ல பகிர்வு, தொடருங்கள்.

  ReplyDelete
 2. மிக உபயோகமான பதிவு. நான் நேற்று வால் மிளகு வாங்க கடைக்காரரிடம் காலி மிரிச் பூச்(வால்) கி சாத் என்றதும் விழுந்து விழுந்து சிரித்தார். :( வால்மிளகுக்கு இந்தியில் என்ன என்று தெரியவில்லை. ஆனால் சபேத் காலி மிரிச் கிடைத்தது. கபத்திற்கு நல்ல பலன் அளிக்கிறது.

  ReplyDelete
 3. அட இங்கயும் ஹிந்தி வகுப்பு ஆரம்பிச்சாச்சா.. நல்லது.. :)

  ReplyDelete
 4. வால் மிளகை ஹிந்தியில் கபாப் சீனி என்று அழைக்கிறார்கள். வெள்ளை மிளகை சஃபேத் மிர்ச் என்று சொல்வார்கள்.

  ReplyDelete
 5. வாங்க thirumathi bs Sridhar,

  நன்றிங்க.

  வாங்க அமைதிச்சாரல்,

  நன்றிங்க.

  வாங்க உயிரோடை,

  வால் மிளகுக்கு இந்தியில் என்னவென்று இந்தி ஆசிரியர் சொல்லி விட்டாரே. நன்றிங்க.

  வாங்க முத்துலெட்சுமி,

  ஆமாமாம். நன்றிங்க.

  வாங்க வெங்கட் நாகராஜ்,

  இந்தி பாடத்துக்கு நன்றி என்னவரே.

  வாங்க புவனா,

  THANK U.

  ReplyDelete
 6. நல்ல உபயோகமான பதிவு ...

  ReplyDelete
 7. பயனுள்ள எளிய குறிப்புகளை தந்தமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 8. தங்களின் கை வைத்தியம், பாதிக்கப்படுவோர் பலருக்கும், கைமேல் பலனைத்தரும் என்று நம்புகிறேன். இந்தப் பதிவினால் ஒரு சில ஹிந்திச் சொற்களையும் கற்க ஏதுவானது கூடுதல் மகிழ்ச்சி.
  பதிவுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு.அவசரத்திற்கு உதவும்.நன்றி.

  ReplyDelete
 10. கோவை பேரரசியே,

  ஒரு அழகிய பெண். ஆனால் அவளுள் இருப்பதோ பல முகங்கள் !! பெற்ற வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் புகழ் தேடித்தரும் ஒரு மாதரசி, ஒரு சிறந்த இல்லத்தரசி, பாசமுள்ள ஒரு தாய், பயணக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் என்பதுபோன்ற பலவற்றை சுவைபட தன் ப்ளாக் மூலம் தெரிவித்தமையால் "ப்ளாக் அரசி", தற்போது பயனுள்ள பாட்டி வைத்ய குறிப்புகளை கொடுத்து மக்களின் ஆரோக்யத்தில் அக்கரை கொண்டமையால் ஒரு சிறந்த மருத்துவர்.அப்பப்பா இவரை எப்படி அழைப்பேன,எங்கு, எபபோது காண்பேன்?!! வாழ்க உமது தொண்டு மனப்பான்மை, வளர்க உமது தன் நலமற்ற சேவை.!!!

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 11. ஆபத்து , ஒரு அவசரத்திற்கு மிகவும் உபயோகப்படும்.

  சுளுக்கு, வாதவலி, கைகால் மூட்டுவலி என்றால்
  தேங்காய் எண்ணையில் சிறிது கற்பூரம் பொடித்துப்
  போட்டு பொறுக்கும் சூட்டில் தேய்த்துப்பாருங்கள்.
  உடனடி நிவாரணம் கிடைக்கும்.

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு ஆதி.

  தொட்டதற்கு எல்லாம் டாகட்ரிடம் ஓடாமல் நம் சமையல் அறையில் உள்ள பொருட்களை வைத்து வைத்தியம் செய்து கொள்ளலாம்.

  வாலமிளகின் இந்தி பெயர் தெரிந்து கொண்டேன் நன்றி.

  ReplyDelete
 13. மிக அருமையான கை வைத்தியம், எல்லோருக்கும் பயனளிக்கும்,

  ReplyDelete
 14. வாங்க எல்.கே,

  நன்றி சகோ.

  வாங்க சித்ரா,

  நன்றிங்க.

  வாங்க VAI.GOPALAKRISHNAN சார்,

  கருத்துக்களுக்கு நன்றி சார்.

  வாங்க ASIYA OMAR,

  நன்றிங்க.

  வாங்க V.K.NATARAJAN அவர்களே,

  கருத்துக்களுக்கு நன்றி அய்யா.

  வாங்க RAJESHWARI,

  தகவலுக்கு நன்றிங்க.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  கருத்துக்களுக்கு நன்றிம்மா.

  வாங்க JALEELA KAMAL,

  நன்றிங்க.

  ReplyDelete
 15. இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 16. பயனுள்ள பகிர்வு ஆதி

  இரண்டு பேரும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் ஆக
  கலக்கறீங்க.எங்களுக்கு இது மாதிரி நிறைய அருள் புரியணும்னு
  கேட்டுக்கறோம்

  ReplyDelete
 17. வாங்க ராஜி,

  கலக்கல் எல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ எனக்கு தோன்றும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன். நன்றி.

  ReplyDelete
 18. தலைவலின்னதும் மல்லியையும் சூடத்தையும் பொடி செஞ்சு நெத்தில பத்து போடச் சொன்னாங்க.. தலைவலி ஓடிப் போச்சு..
  தலைவலித்தைலம்லாம் எதுக்கு.. கை வைத்தியமே பெஸ்ட்..
  உபயோகமான பதிவு..

  ReplyDelete
 19. மிக அருமையான குறிப்புகள். அனைவருக்குமே பயன் படும். நன்றி.

  ReplyDelete
 20. வாங்க ரிஷபன் சார்,

  கை வைத்தியத்தை விட தலைவலிதைலம் எல்லாம் எடுபடவே எடுபடாது. தகவலுக்கு நன்றி சார்.

  வாங்க LAKSHMI அம்மா,

  கருத்துக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 21. நிறைய புத்சா இருகு. பல்வலிக்கு மல்லி இலை... இதுபோல இன்னும் எழுதுங்க. நன்றி.

  ReplyDelete
 22. வாங்க ஹுஸைனம்மா,

  கருத்துக்கு நன்றிங்க.

  வாங்க KANCHANA RADHAKRISHNAN,

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. கை வைத்தியங்கள் அருமை.. சில வைத்தியங்கள் அறியாதவை அதே சமயத்தில் எளிதில் செய்து கொள்ளக்கூடியவையாக இருக்கிறது..பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 24. பத்துஜிக்கு நிறைய வைத்தியங்கள் தெரியும். அவர் அருமை சொல்லிவிட்டால் நானும் அதைத்தான் சொல்ல வேண்டும். அற்புதம். நன்றி. ;-)

  ReplyDelete
 25. உபயோகமான பதிவு ..பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 26. மிகவும் அருமையான வைத்திய குறிப்புகள்...வால் மிளகு என்றால் என்ன...

  பகிர்வுக்கு நன்றி...உங்க மாமியாருக்கும் நன்றி...

  ReplyDelete
 27. வாங்க பத்துஜி,

  கருத்துக்கு நன்றிங்க.

  வாங்க ஆர்.வீ.எஸ்,

  கருத்துக்கு நன்றிங்க.

  வாங்க ஆயிஷா,

  கருத்துக்கு நன்றிங்க.

  வாங்க GEETHA ACHAL,

  வால் மிளகு என்பதும் மிளகு போலவே தான் இருக்கும். காம்புடன் சேர்ந்து வால் போலவே இருக்கும். மருத்துவ குணம் கொண்டது.
  தங்கள் கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 28. அட... ஆதியும் நம்ம வகையறா... ! தெரிந்தது, அறிந்தது தாண்டியும் விடாப் பிடியான வியாதிக்குதான் மருத்துவரைத் தேடுவது! மாமியாரின் பொக்கிஷத்தில் நாங்களும் கைநிறைத்துக் கொண்டோம்... நன்றி இருவருக்கும்! என்னிடமிருக்கும் இருப்பை எல்லாம் பதிவேற்றினால் ஏகப்பட்டது தேறுமே...! கொய்யா இலைகளை போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை வெதுவெதுப்பாக கொப்பளித்தால் கூட பல்வலி குறையும்.

  சுளுக்குக்கு உப்பை வறுத்து ஒத்தடம் கொடுப்பதும் உண்டு. சேற்றுப் புண்ணுக்கு இட்லிக்கு அரைக்கும் உளுந்தில் சிறிது எடுத்து எலுமிச்சை சாறு பிழிந்து குழைத்து இரவில் பற்று போல் போட்டு காயவிட்டு காலையில் கழுவினாலும் குணம் தெரியும். மருதாணி அரைத்துப் பூசுவதுமுண்டு. கட்டிக்கு வெற்றிலையை நல்லெண்ணெய் தடவி வாட்டி ஓட்டலாம். (நம்ம பக்கம் ஊமத்தை இலை, காட்டாமணக்கு இலை கிடைக்கும்... அதுதான் வெகு பலன்) சுண்ணாம்பும் தேனும் குழைத்துப் போடலாம். சிறு சிறு பூச்சிக் கடியால் அரிப்பெனில், விபூதி தேய்த்தாலே சரியாகும். ஓயாத இருமலுக்கு சிறிது வால் மிளகு வாயில் அடக்கி சாறு விழுங்க இதமாயிருக்கும். சாதா மிளகைவிட காரம் குறைவாய்தான் இருக்கும். உங்களிருவர் பதிவுகளைப் படிக்க படிக்க, இந்தியும் பரிச்சயமாகிறது எங்களுக்கு. அதிக இடமெடுத்துக் கொண்டேனோ ... முடிக்கிறேன்.

  ReplyDelete
 29. வாங்க நிலாமகள்,

  உங்கள் மருத்துவ தகவல்களை கண்டு மகிழ்ந்தேன். என் மாமியார் கூட எப்போதுமே சாலையில் போகும் போது வழியில் உள்ள செடிகள், மரங்களின் பெயர்களை கூறி அதன் மருத்துவ குணங்களையும் கூறுவார். (நெய்வேலியில் மரங்களுடனும், செடிகளுடனும் வாழ்ந்தவராயிற்றே)

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…