சென்ற பதிவான சப்பாத்தி சுட்டுச் சுட்டு போடட்டுமா-வில் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள தேவையான எனக்குத் தெரிந்த வடஇந்திய சப்ஜி வகைகளின் செய்முறையை எழுதுவதாகச் சொல்லி இருந்தேன். இந்த இடுகையில் பாலக் பனீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஹிந்தியில் ”பாலக்” என்றால் பசலைக் கீரை. பசலைக் கீரையில் விட்டமின் A, K, C, B2, B6 போன்ற பலவிதமான சத்துக்கள் இருக்கின்றன. அதில் போடும் மற்ற பொருளான பனீரிலும் சுண்ணாம்புச் சத்து கிடைக்கும்.
ஆங்கிலத்தில் பாலக் கீரையை Spinach என்று சொல்வார்கள். “THE POPEYE SHOW” பார்த்து ரசிக்காத யாரும் உண்டோ. அதில் பாலக் சாப்பிட்ட உடன் அவருக்கு அப்படி ஒரு சக்தி வரும் இல்லையா, அது போல இந்த பாலக் பனீர் சாப்பிடுங்க, நல்ல சக்தி கிடைக்கும்!
தேவையான பொருட்கள்:
பாலக் [பசலைக்கீரை] : 1 கட்டு.
வெங்காயம் : 2
தக்காளி : 2
பச்சை மிளகாய் : 1 அல்லது 2
இஞ்சி : 1 துண்டு
மிளகாய்த் தூள் : அரை டீ ஸ்பூன்
மல்லித் தூள் : 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா : ½ டீ ஸ்பூன்
சீரகம் : ½ டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி : ¼ டீ ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணை : சிறிதளவு [வதக்க]
பனீர் : 200 கிராம்
செய்முறை:
”பாலக்” கீரைக் கட்டினைப் பிரித்து, இலைகளைத் தனியாக ஆய்ந்து, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யவும். குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடங்களுக்கு ஆவியில் வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சீரகம் போட்டு தாளித்து அரைத்து எடுத்த விழுதினைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். வதக்கிய பின் அதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.
வெந்து இருக்கும் பாலக் கீரையை எடுத்து ஆற வைத்து மிக்சியில் நன்கு அரைக்கவும். அரைத்து எடுத்த பாலக் கீரை விழுதை வாணலியில் வதங்கி உள்ள க்ரேவியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பிறகு பனீரை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து, சின்னச் சின்னத் துண்டுகளாய் வெட்டி எடுத்து கொதித்துக் கொண்டு இருக்கும் பாலக் கலந்த க்ரேவியில் போடவும். போட்டு ஒரு கொதி வந்த பிறகு இறக்கி வைத்து சூடாகப் பரிமாறவும். பனீர் போட்ட பிறகு நிறைய கொதிக்க விட்டால், பனீர் கெட்டிப்பட்டு சுவை மாறிவிடக்கூடும். இந்த பாலக் பனீர் ஃபுல்கா ரொட்டி, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம் .
ஆதி
குறிப்பு: இந்த இடுகையை மீள் பதிவாக சாப்பிட வாங்க வலைப்பூவிலும் பகிர்ந்து இருக்கிறேன்.
இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.


21 comments :
கீரை கிரேவி மட்டும் செஞ்சு அதுல பன்னீர் தூவுன மாதிரி இருக்குங்க..போட்டோ.
இன்னிக்கு எங்க வீட்ல பாலக் கீரை. :)
ஹை ஹை .. பாலக் பனீர்..
பனீரும் பாலக்கும் இருந்தா நாலு ரொட்டி கூடவே உள்ள போகுமே..
சாப்பாடு விஷயங்கள்ல நாம ராமன் கோஷ்டி.. தயாரிக்கும் முறைக்ககெல்லாம் அதிகப்படியா கமென்ட் போடக்கூடாது.. பார்த்துக்கிட்டேன்.. சமையல்ல உள்ள இறங்கும்போது செஞ்சு பார்க்கிறேன்.. நன்றி. ;-)
Looks so yummy!
வாங்க கலாநேசன்,
”கீரை கிரேவி மட்டும் செஞ்சு அதுல பன்னீர் தூவுன மாதிரி இருக்குங்க..போட்டோ. ”
ஆமாங்க கீரையில பனீர் போட்டு கொதிக்க விட்டுட்டேன். அது தெரியாதுங்கிறதுனால போட்டோ எடுக்கும் போது மேலாக கொஞ்சம் போட்டேன். நன்றிங்க.
வாங்க விக்னேஷ்வரி,
“ இன்னிக்கு எங்க வீட்ல பாலக் கீரை. :) ”
அப்படியா எனக்கும் ஒரு கட்டோரி அனுப்பிடுங்க. நன்றிங்க.
சப்பாத்தி பிடிக்காதுன்னு சொல்லிகிட்டே இப்படி அதுக்கு சைட் டிஷ் போடறீங்க. சரி இல்ல
டேஸ்ட்டி குறிப்பு.. வீட்ல பனீர் இருந்தா எங்கூட்ல பாலக் பனீர், இல்லைன்னா மட்டர் பனீர் செஞ்சாகணும் :-))
வாங்க முத்துலெட்சுமி,
”ஹை ஹை .. பாலக் பனீர்..
பனீரும் பாலக்கும் இருந்தா நாலு ரொட்டி கூடவே உள்ள போகுமே”
ஆமாமா. எடுத்துக்கோங்க. நன்றி.
வாங்க ஆர்.வி.எஸ்,
’’சாப்பாடு விஷயங்கள்ல நாம ராமன் கோஷ்டி.. தயாரிக்கும் முறைக்ககெல்லாம் அதிகப்படியா கமென்ட் போடக்கூடாது.. பார்த்துக்கிட்டேன்.. சமையல்ல உள்ள இறங்கும்போது செஞ்சு பார்க்கிறேன்.. நன்றி. ;-) ’’
கண்டிப்பா செய்து பாருங்க. நன்றி.
வாங்க CHITRA,
”Looks so yummy! ”
நன்றிங்க.
வாங்க எல்.கே
”சப்பாத்தி பிடிக்காதுன்னு சொல்லிகிட்டே இப்படி அதுக்கு சைட் டிஷ் போடறீங்க. சரி இல்ல ”
என்ன பண்றது. வீட்டிலேயே இரண்டு பேர் சப்பாத்தி கோஷ்டி தான். நன்றி.
வாங்க அமைதிச்சாரல்,
”டேஸ்ட்டி குறிப்பு.. வீட்ல பனீர் இருந்தா எங்கூட்ல பாலக் பனீர், இல்லைன்னா மட்டர் பனீர் செஞ்சாகணும் :-)) ”
இங்கயும் அதே கதை தான். நன்றிங்க.
ஆலு பாலக்கை விட எனக்கு பாலக் பனீர் ரொம்ப பிடிக்கும்.
மிக அருமை.நிச்ச்யம் உங்க முறைப்படி செய்து பார்ப்பேன்.போட்டோவும் அழகு.
வாங்க புதுகைத் தென்றல்,
”ஆலு பாலக்கை விட எனக்கு பாலக் பனீர் ரொம்ப பிடிக்கும். ”
இங்கயும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். நன்றிங்க.
வாங்க ASIYA OMAR,
”மிக அருமை.நிச்ச்யம் உங்க முறைப்படி செய்து பார்ப்பேன்.போட்டோவும் அழகு. ”
செய்து பாருங்க. நன்றிங்க.
Nice blog! I am from CBE too, near poomarket :)
பாலக் பனீர் செய்முறை விளக்கம் அருமை ஆதி.
வாங்க MAHES,
”Nice blog! I am from CBE too, near poomarket :) ”
THANK U. I AM FROM RACE COURSE.
வாங்க கோமதி அரசு அம்மா,
”பாலக் பனீர் செய்முறை விளக்கம் அருமை ஆதி.”
நன்றிம்மா.
சுவையாக இருந்தது, படிக்க!
வாங்க கே.பி சார்,
“சுவையாக இருந்தது, படிக்க! ”
நன்றி சார்.
படங்களும் குறிப்பும் அருமை!
வாங்க மனோ சாமிநாதன் அம்மா,
”படங்களும் குறிப்பும் அருமை! ”
நன்றிம்மா.
nalla irukku
வாங்க JALEELA KAMAL,
நன்றிங்க.
Post a Comment
படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…