Tuesday, January 4, 2011

முதல் பனிசென்ற பதிவில் "வெயிலைத் தேடி" என்ற தில்லியின் குளிர்காலம் பற்றி எழுதும்போது சில விவரங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.  இந்த பதிவில் தில்லியில் என் முதல் குளிர்காலம் பற்றியும், வேறு சில விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்துள்ளேன்

இந்த குளிர்காலத்தில் சருமம் மிகவும் வறண்டு விடும்.  இதற்காக பல நிறுவனங்கள் குளிர்காலத்திற்காய் விற்பனை செய்யும் க்ரீம் மற்றும் லோஷன்களை தடவிக்கொள்ள வேண்டும்.   இல்லையெனில்இளமையிலேயே முதுமைஎன்று சொல்லும் அளவுக்கு சருமம் சுருக்கத்துடன் காணப்படும்.   வட இந்தியர்கள் கடுகு எண்ணெயை தடவிக் கொண்டு வெயிலில் உட்கார்ந்து கொள்வார்கள். பாதி வட இந்தியர்கள் நம்மைத் தாண்டிச்  செல்லும்போது காற்றினூடே தவழ்ந்து வரும் ஒரு வித வாடைக்கும் இதுவே காரணம்இவர்கள் சமையலுக்கே கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அவ்வளவாய் வித்தியாசம் தெரிவதில்லை.  நமக்குத்தான் கடுகு எண்ணை கொண்டு அவர்கள் சமையல் செய்யும்போது குமட்டிக்கொண்டு வருகிறது

குளிக்கும் போது வெந்நீரில் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் விட்டு குளித்தால் சரும வறட்சி, ”போயே போச், இட்ஸ் கான்என்று சொல்லி ஓடிவிடும்.  உடம்பில் எண்ணைய் தடவிக் கொண்டு உடனே சோப்பு போட்டுக் குளிப்பதை விட இந்த முறையில் கடைசி சொட்டு நீர் வரை எண்ணெய் இருக்கும்.

இந்த குளிர்காலத்தில் தில்லியில் கிடைக்கும் காரட், காலிஃப்ளவர், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, குடை மிளகாய் போன்ற.காய்கறிகள் பச்சைப் பசேலன, பார்க்கும் போதே வாங்கத் தூண்டும்படியாய் இருக்கும். விலையும் இந்த சீசனில் மலிவாகத் தான் இருக்கும். ஆனால் இந்த வருடம்தான் விலை எல்லாம் தாறுமாறாக ஏறி, கதிகலக்கிக் கொண்டு இருக்கிறது


திருமணமாகி தில்லி வந்த பின் முதல் குளிர் காலம் வந்தது. என்னவர் என்னை பயமுறுத்த, நான் தில்லி குளிரை பற்றித் தெரியாமல்என்ன நாங்க பார்க்காத குளிரா? எங்க கோயமுத்தூரில் மார்கழி மாசத்தில் இருக்கும் குளிர் எல்லாம் பார்த்து இருக்கேன்என பீற்றிக்கொண்டேன். ஊரில் இருந்த என்னை அழைத்துச் செல்வதற்காக வந்த கணவர், வரும் போதே எனக்காக தில்லியில் இருந்து ஒரு ஸ்வெட்டரும், ஷாலும் வாங்கிக் கொண்டு ரயில் பயணத்திற்காக ரஜாயும் எடுத்து வந்திருந்தார். ஜான்சி தாண்டியதுமே குளிர் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

நவம்பர் மாதத்திலேயே குளிர் தாங்க முடியவில்லை. அதன் பின் நினைத்துப் பாருங்கள். அநேக நேரம் படுக்கையில் ரஜாயுடன் தான் இருந்தேன். ஹாலில் உக்காந்து டி.வி பார்க்க முடியவில்லை. அதனால் டிவியை படுக்கையறைக்கே கொண்டு வந்து ரஜாயை கண் மட்டும் தெரியும் அளவிற்கு விட்டு வைத்து, டிவி பார்ப்பேன். என்னவரிடம் ஒரு குமுட்டி வாங்கி கொடுத்து விடுங்கள் இப்படியே சப்பாத்தி போட்டு சாப்பிடலாம். ரஜாயை விட்டு வெளியே வந்தால் குளிர்கிறது என்பேன்.

எனக்கோ சப்பாத்தி சாப்பிட்டால் சாப்பிட்ட உணர்வே இருக்காது.  ஆனால் இவரோ மூன்று வேளையும் ரொட்டி தான்!!  இரவில் அரிசி உணவு சாப்பிட்டால் குளிர் அதிகம் தெரியும் என்று சொல்லி, என்னையும் சப்பாத்தியே சாப்பிடச் சொல்வார். வேறு வழியின்றி சப்பாத்தி செய்து, அதை உருட்டி கடமையே என்று சாப்பிடுவேன்.  ஒரு ஃப்ளாஸ்கில் டீயும் மற்றொன்றில் வெந்நீரும் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிப் பருகிய படி குளிரை சமாளித்தேன்.

நான் ஸ்வெட்டர், ஷால், ஸ்கார்ஃப், கைக்கு கிளவுஸ் இப்படியிருக்க என்னவர் ஸ்வெட்டர் கூட அணியாமல் சாதாரண உடைகளில் இருப்பார். அவருக்கு தில்லி வந்த  உடனேயே குளிர் விட்டுப் போய் விட்டது போல!ஒன்பது குளிர்காலங்கள் பார்த்த பிறகு இப்போது கொஞ்சம் சமாளித்து விடுகிறேன். முதல் குளிர்காலம் என்னதான் பிடிக்காது போனாலும், இப்போதெல்லாம் குளிர்காலம் தான் பிடிக்கிறது

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்

ஆதி 

14 comments:

 1. எனக்கு இப்போ தான் நாலாவது வருஷம். என்னால தாக்குப் பிடிக்க முடியலைங்க.

  ReplyDelete
 2. இங்கியும் ஜில்ஜில்தான் :-))))))

  கார்த்தால ஏந்தான் எந்திருக்கணுமோன்னு இருக்கு :-))))))

  ReplyDelete
 3. //அவருக்கு தில்லி வந்த உடனேயே குளிர் விட்டுப் போய் விட்டது போல!//
  காமெடியை ரசித்தேன். பீகார் போனபோதும் இதே கடுகு எண்ணை அவஸ்தை. தயிரில் கூட அந்த வாசனை. எப்படா தப்பிச்சு வெளியே வருவோம் என்றாகி விட்டது. கடைசி நாள் வெறும் வாழைப்பழம் மட்டும் (ஒரு டஜன்!) தின்று பசியாற்றிக் கொண்டேன். டெல்லி வரும்போது ரெண்டு ஸ்வெட்டர்தான்.. கெஸ்ட் ஹவுசில் ஹீட்டர் இருந்ததால் எதுவும் பாதிப்பு இல்லை..

  ReplyDelete
 4. குமுட்டி ஆகா :)

  இந்த வெந்நீர் பாட்டில் கையோட வச்சிருக்கிறது எதோ குடிகாரன் இடுப்பிலிருந்து குட்டி பாட்டிலை எடுத்து தட்டி கொஞ்ச நேரத்துக்கொருமுறை குடிக்கிற ஸ்டைலிலாக்கும் எங்க வீட்டில் ஹஹஹாஅ..:))

  ReplyDelete
 5. கொங்கு நாடு செய்த மாதவத்தால் எங்களை உய்விக்க வந்த மாதரசியே,
  குளிர் பற்றிய குறிப்புகள் மிக நன்று. வட இந்தியர்களை "வாடை இந்தியர்" என்று அழைக்கலாம், அவ்வளவு சுத்தம். கவின் மலையாள தேசத்தவர், தேங்காய் எண்ணையை தேய்த்துக்கொண்டு தினமும் சோப்பு தேய்க்காமல் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். என் பெங்களுரு நண்பர் கம்பளி அணியமாட்டார். அதை பாராட்டாமல் விட்டு விட்டால் உடல் இறுகிவிடும் என்பார்!!. உங்களவரிடம் , உங்களை (ஆதிலட்சுமி) கரம் பிடித்த அன்றிலிருந்தே தைர்ய லக்ஷ்மியும் அவரின் மற்றொரு பாகத்திற்கு உரிமை கொண்டாட வந்துவிட்டார்கள் என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 6. என்னதும் இதே கதைதாங்க... நம்ம ஊரு (கோவை) மார்கழி குளிருக்கே எட்டு மணி வரை தூங்கின ஆள் நானு... இப்ப என் நெலமைய நெனச்சு பாருங்க... இந்த பனி காட்டுல (கனடா) வந்து சிக்கிட்டேன்... சித்திரமும் கை பழக்கம் போல இப்ப கொஞ்சம் பழகிடுச்சு... சூப்பர் பதிவு ஆதி...

  ஒரு முறை மவுண்ட் அபு போய் இருந்தப்ப காலேஜ்ல இருந்து இந்த கடுகு
  எண்ணை கொடுமை அனுபவிச்சு இருக்கேன்.. பாவம் தான்

  ReplyDelete
 7. போன வருடத்தைவிட இந்த வருடம் ரொம்ப அதிகம். அதுவும் கடந்த இரண்டு நாளா தாங்க முடியல. இப்போ 6°C

  ReplyDelete
 8. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 9. அருமையான பகிர்வு ரசித்தேன்.

  ReplyDelete
 10. நான் இந்த வருடம் இந்தக் கொடுமையான குளிரில் இருந்து தப்பிச்சிட்டேங்க.

  ReplyDelete
 11. இந்த இடுகைக்கு கருத்துரையிட்ட , மற்றும் இண்ட்லியில் வாக்களித்து பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி.
  குளிரில் ஒரு இடத்தில் பத்து நிமிஷம் சேர்ந்தார்ப்போல் உக்கார்ந்தாலே பயங்கரமாக குளிருகிறது. எல்லாருக்கும் தனித்தனியாக பதிலளிக்க முடியவில்லை.

  ReplyDelete
 12. செம்மையா எழுதி இருக்கீங்க ஆதி!

  ReplyDelete
 13. வாங்க நிலாமகள்,

  நன்றி.

  ReplyDelete
 14. குளிருக்கு குளிரை குடுக்கும் பதிவு இங்க கோவையிலும் குளிராதான் இருக்குங்க அளவுதான் வித்தியாசம்

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…