Pages

Monday, January 24, 2011

(B)பல்லே (B)பல்லே [Cho]சோலே


வட இந்தியர்கள் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள நிறைய சப்ஜி [Side Dish] செய்வார்கள். அதில் முக்கியமான சப்ஜிகளில் இந்த சன்னா மசாலாவும் ஒன்று. இதற்கு காபூலி [Kabooli] சன்னா, பெரியதாக இருக்கும் வெள்ளைக் கொண்டக் கடலை கிடைத்தால் நன்றாக இருக்கும். அப்படிப் பட்ட சன்னா மசாலா செய்முறையை தெரிந்து கொள்வோமா?

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டக் கடலை – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 1
மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன்
தனியாப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – ½ டீஸ்பூன்
சோலே மசாலா – ½ டீஸ்பூன் (இப்போதெல்லாம் கடைகளிலேயே கிடைக்கிறது.)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
சீரகம் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க
எலுமிச்சைசாறு – புளிப்பு சுவை பிடித்தால், கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டு சேர்க்க விருப்பமுள்ளவர்கள் இரண்டு பல் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். நான் பெரும்பாலும் சேர்ப்பது கிடையாது.

செய்முறை:

ஒரு கப் கொண்டக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் மேலே கொடுக்கப் பட்ட பொருட்களில் உள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றுடன் பிடித்தால் பூண்டு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் செய்வது போல குக்கரில் நேரிடையாக செய்யப் போகிறோம். அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிய விடவும். பின்பு அதில் அரைத்து எடுத்த வெங்காய-தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் அதில் மேலே குறிப்பிட்டுள்ள மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி, சோலே மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இப்படி வதக்க குக்கரின் மூடியை திருப்பிப் போட்டு மூடி வைத்தால் இந்த க்ரேவி நம் மேல் தெளிக்காமலும், கிச்சன் டைல்ஸ் மேலும் தெளிக்காமலும் இருக்கும்.

க்ரேவி நன்றாக வதங்கியதும் ஊற வைத்திருந்த கொண்டக் கடலையை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (மூழ்கும் வரை) குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் (மிகவும் குறைந்த தணலில்) 25 நிமிடங்கள் வைத்து அடுப்பை நிறுத்தவும். சிறிது நேரங்கழித்து குக்கரைத் திறந்து விருப்பமிருந்தால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளைப் போட்டு அலங்கரிக்கவும். சுவையான சன்னா மசாலா தயார்.

நான் முதலில் கொண்டக் கடலையை தனியாக வேக வைத்து க்ரேவி செய்து அதில் கலந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு என் தோழி ஷோபனாதான் க்ரேவியிலேயே கொண்டக்கடலையை  வேக வைக்கும் முறையை சொல்லிக் கொடுத்தார். அவருக்கு என் நன்றி. இப்பொழுதெல்லாம் என்னவருக்கு நான் கொடுக்கும் மதிய உணவில் சோலே கொடுத்தால் அதை சாப்பிடும் அவரது அலுவலக நண்பர்கள் பஞ்சாபிகள் செய்தது போலவே இருக்கிறது என்கிறார்களாம். நீங்களும் செய்து உங்களவரை அசத்துங்களேன்!!!.  சாப்பிட்டு உங்களவர் “(B)பல்லே (B)பல்லே” என ஒரு பஞ்சாபி பாங்க்ரா நடனமே ஆடுவார்!!!

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

ஆதி

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.




40 comments :

raji said...

நல்ல ரெசிப்பி.பகிர்வுக்கு நன்றி

raji said...

இதற்கு முன் நீங்கள் எழுதிய நான்கு போஸ்ட்கள் என் டாஷ்போர்டில் அப்டேட்
ஆகவில்லை இன்னும் கூட,ஏனென்று தெரியவில்லை.இப்பொழுதுதான்
தங்கள் தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன்.படித்து முடித்ததும் அவற்றுக்கு
பின்னூட்டம் இடுகிறேன்

விக்னேஷ்வரி said...

என்னாச்சு, உங்க ப்ளாகை சமையல் ப்ளாகா மாத்திட்டீங்களா..

thirumathi bs sridhar said...

நானும் இங்க வந்துதான் குக்கரில் சாப்ஜி வைத்துவிட கத்துகிட்டேன்,குக்கரில் வைத்தோமா வேற வேலைய பாத்தோமானு 4 ,5 விசில் வந்தவுடன் ஆஜரானால் போதும்,மேலும் மிக்சியில் அரைக்கும்போது மெல்லிய ஒரு பிடி( 20,25 ஊறின கொண்டகல்லை ) ஊறின கொண்டகல்லை போட்டு அரைத்தும் செய்யலாம்.தேங்காய் அரைத்து ஊற்றினால் கிடைக்கும் கிரேவி போலவும்,கொஞ்சம் டெஸ்ட் வேறுபாடுடன் நல்லாயிருக்கும்.அதிக கொண்டகல்லை போட்டு அரைத்து விட்டால் அதிக கொலகொலப்பாகிடும்.

asiya omar said...

நானும் குக்கரிலும் சன்னா மசாலா வைப்பதுண்டு,உங்க முறைப்படி நானும் செய்து அசத்தறேன்,பலே பலே...

கோமதி அரசு said...

வெங்காயம் தக்காளியோடு சிறிது கொண்டக்கடலை சேர்த்து அரைத்து செய்வேன்.
நீங்கள் செய்வது போல் செய்து பார்க்க வேண்டும்.
படம் அழகு ஆதி.

கோவை2தில்லி said...

வாங்க ராஜி,

ஆமாப்பா. அப்டேட்டே ஆகலை. ஏனென்று தெரியவில்லை. இப்போ சரியாயிடுச்சுன்னு நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி.

வாங்க விக்னேஷ்வரி,

சப்பாத்தி பத்தி பதிவு போட்டுட்டு கூடவே சப்ஜி சிலதும் போட்டுடலாம்னு நினைத்ததன் விளைவு தான். கருத்துக்கு நன்றி.

வாங்க thirumathi bs Sridhar,

நானும் அரைத்தும் செய்து இருக்கிறேன். கருத்துக்கு நன்றி.

வாங்க asiya omar,

குக்கரில் விசில் குடுத்துட்டே இருந்தா தண்ணீர் வற்றி விடுவதுண்டு. இது போல் சிம்மில் வைத்தால் கடலை நல்லா மெத்து மெத்துன்னு வெந்து விடுகிறது. கருத்துக்கு நன்றி.

வாங்க கோமதி அரசு அம்மா,

செய்து பாருங்கள் அம்மா. கருத்துக்கு நன்றி.

ரிஷபன் said...

ம்ம்.. யாராச்சும் செஞ்சு கொடுத்தா சாப்பிட ரெடி!

Lakshmi said...

நாங்க அடிக்கடி செய்யு ரெசிப்பி இது.

எல் கே said...

இன்றைக்குத்தான் உங்கள் போஸ்ட் அப்டேட் ஆகி இருக்கு :)

சரி இதெல்லாம் இருக்கட்டும், இதை சாப்டு விட்டு "பல்லு பல்லு " என்று அலற மாட்டார்களே ??

Chitra said...

Updates ஆச்சு! சூப்பர்! இனி மிஸ் ஆகாதுன்னு நினைக்கிறேன்.

Chitra said...

ஆச்சு! சூப்பர்! இனி மிஸ் ஆகாதுன்னு நினைக்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

கொஞ்சமா ஆம்ச்சூர் பொடி சேர்த்த ருசி அள்ளும். தாளிக்கும் பொழுது கசூரி மேத்தி சேத்தக்கிடணும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது செய்தா மட்டும் சூப்பர் அம்மா.. நல்ல அம்மா :)#குட்டீஸ் இருக்காங்களே யப்பா..

கோவை2தில்லி said...

வாங்க ரிஷபன் சார்,

தில்லி வரும் போது கண்டிப்பா வீட்டுக்கு வாங்க. செய்து குடுக்கறேன். கருத்துக்கு நன்றி.

வாங்க LAKSHMI அம்மா,

அப்படியா! கருத்துக்கு நன்றிம்மா.

வாங்க எல்.கே,

கண்டிப்பா யாரும் அலற மாட்டார்கள். கருத்துக்கு நன்றி சகோ.


வாங்க CHITRA,

கருத்துக்கு நன்றிப்பா.

வாங்க புதுகைத் தென்றல்,

ஆம்சூர்ப் பொடிக்கு பதிலாகத் தான் எலுமிச்சை சாறு சேர்க்க சொல்லியிருக்கேன். கசூரி மேத்தி சேர்ப்பு டிப்ஸ்க்கு நன்றி.

வாங்க முத்துலெட்சுமி,

ஆமாமா. குட்டீஸ்க்கு இது ரொம்ப பிடிச்ச அயிட்டம். கருத்துக்கு நன்றி.

சி.தவநெறிச்செல்வன் said...

நல்லா இருக்கு. முயற்சி செய்து பார்க்கனும், வெளிநாட்டில் வாழும் என்னைப்போன்றவர்களுக்கு ஒரு எளிய சப்ஜி. நன்றி

ஹுஸைனம்மா said...

//வதக்க குக்கரின் மூடியை திருப்பிப் போட்டு மூடி வைத்தால் //

அப்படியா? நான் சாதாரணமா எப்பவும்போலவே மூடி வைப்பேன், தீயைக் குறைச்சு வச்சுட்டா சீக்கிரம் வதங்கிடும். இப்படியும் செய்யலாம்னும் தெரிஞ்சுகிட்டேங்க.

கோவை2தில்லி said...

வாங்க சி.தவநெறிச்செல்வன்,

கண்டிப்பா செய்து பாருங்க. முதல் வருகைக்கு கருத்துக்கும் நன்றி சகோ.

வாங்க ஹுஸைனம்மா,

கருத்துக்கு நன்றி.

கவிதை காதலன் said...

ஆஹா.. ஈவ்னிங் சென்னா சாப்பிடணுங்கிற ஆசையை தூண்டிவிட்டுட்டாரே மனுஷன்...

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

raji said...

ஆதி , நீங்க இன்னொரு தடவை திருமதி பி எஸ் ஸ்ரீதர் வலைப்பூக்கு
போயி கையை பலமா தட்டிடுங்க
அவங்களுக்கு சேர வேண்டிய பாராட்டு அவங்க வலைப்பூவில் இருந்தாதான்
நல்லார்க்கும்

அவங்க வலைப்பூவிலதான் இந்த நகைச்சுவை பதிவை போட சொன்னேன்
அவங்க போட்டுக்க மாட்டேனுட்டாங்க

raji said...

ரசித்த பாடல்களை ரசித்து விட்டு கமென்ட் போடுகிறேன்

thirumathi bs sridhar said...

நீங்கள் ரசித்து கை தட்டியத்தில் மகிழ்கிறேன்.நன்றி(எனக்கு ஒரு வோட்டு போட்டு விட்டிங்க)

அப்பாவி தங்கமணி said...

வாவ்... பாக்கவே அழகா இருக்கே...

//வாணலியில் செய்வது போல குக்கரில் நேரிடையாக செய்யப் போகிறோம்//
ஐ லைக் இட்... ரெண்டு பாத்திரம் கழுவ வேண்டிய வேலை மிச்சம்... (யாரது அல்பம்னு திட்றது... ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

//சாப்பிட்டு உங்களவர் “(B)பல்லே (B)பல்லே” என ஒரு பஞ்சாபி பாங்க்ரா நடனமே ஆடுவார்!!!//

இதெல்லாம் சாப்பிடாமயே ஆடறவங்கள நிறுத்தறதுக்கு எதுனா ஐடியா இருந்தா சொல்லுங்களேன்... ஹா ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்...

மிச்ச கமெண்ட் செஞ்சு பாத்துட்டு சொல்றேன் ஆதி...

அப்பாவி தங்கமணி said...

//மகளிர் சக்தி//

வாவ்... என்னையும் இங்க சேத்ததுக்கு ரெம்ப தேங்க்ஸ்ங்க...

அப்பாவி தங்கமணி said...

//சரி இதெல்லாம் இருக்கட்டும், இதை சாப்டு விட்டு "பல்லு பல்லு " என்று அலற மாட்டார்களே ?? //

ROFTL LK... இதை தான் நானும் சொல்றேன்... மத்தவங்க ப்ளாக்ல கமெண்ட் போடறப்ப மணி மணியா உதிரும் தத்துவங்கள் நாம எழுதறப்ப ஏன் தான் காணாம போகுதோ... ஹா ஹா ஹா...

raji said...

எனது வலையில் நினைவாஞ்சலி பதிவு வெளியிட்டிருக்கிறேன்
கலந்து கொள்ள எண்ணமிருப்பின் பின்னூட்டம் மூலம் கலந்து கொள்ளவும்

கோவை2தில்லி said...

வாங்க ராஜி,

அவங்க பதிவிலும் போட்டு விட்டேன். ரசித்த பாடலில் கமெண்ட் போட்டதுக்கும் நன்றி.

வாங்க thirumathi bs Sridhar,

ராஜி சொன்னது மாதிரி உங்க ப்ளாக்கில் போடுங்க.

வாங்க புவனா ,

நான்கு கமெண்ட் போட்டதற்காக நன்றி.

V.K.Natarajan said...

ரெசிப்பி சக்ரவர்த்தினி ஆதி வெங்கட் அவர்களே,
நாவின் சுவைநரம்புகளை படிக்கும்போதே தூண்டிவிடுவதில் கோவையரசிக்கு நிகர் யாருமில்லை என்று எண்ண வைக்கும் ஒரு கோர்வையான செய்முறை விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றி. இந்த ஆதிவாரம் எங்கள் இல்லக் கிழத்தியிடம் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள B பல்லே B பல்லே, கொண்டை கடலையில் ((திருமதி ஸ்ரீதர் சொன்ன கொண்டகல்லில் அல்ல) செய்ய சொல்லி ஒரு மனுவை இன்றே கொடுத்துவிட்டேன். நன்றி, பலே, பலே.

மந்தவெளி நடராஜன்.

சி.பி.செந்தில்குமார் said...

ஓக்கே

கோவை2தில்லி said...

வாங்க VK. NATARAJAN அவர்களே,

தங்கள் கருத்துக்கு நன்றிகள்.

வாங்க சி.பி. செந்தில்குமார்,

நன்றி.

thirumathi bs sridhar said...

பேசும் தமிழில் கொண்டகல்லைனு சொல்லி பழக்கப்பட்டதால்,அப்படியே எழுதியும் விட்டதால் வந்த பின் விளைவுகளை அனுபவித்துதான் ஆகனும்.பல்லே,சோலே வைவிட நான் எழுதிய கல்லேவின் நிலையை பாருங்கள் ஆதி.

அமைதிச்சாரல் said...

நானும் நேரடியா குக்கரில்தான் செய்வேன். கடைசியில் குக்கரை திறந்தப்புறம் ஒரு நிமிஷம் கொதிக்கவிட்டு இறக்குவேன். இது இன்னும் ருசியையும், மணத்தையும் கூட்டுது..

D.Martin said...

படிச்சவுடன் பசிக்குதுங்க மேடம். நன்றி

Jaleela Kamal said...

arumai.

naan sila neeram thaniyaakavum sila neeram kukkarillum seyveen

கோவை2தில்லி said...

வாங்க அமைதிச்சாரல்,

தங்கள் கருத்துக்கு நன்றி.

வாங்க D. MARTIN,

முதல் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி சார்.

வாங்க JALEELA KAMAL,

தங்கள் கருத்துக்கு நன்றிங்க.

மனோ சாமிநாதன் said...

மிக நன்றாக சன்னா மசாலாவை விள‌க்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஆதி! பாராட்டுக்கள்! புகைப்படமும் அழகு!

கோவை2தில்லி said...

வாங்க மனோம்மா,

தங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கு நன்றிம்மா.

மோகன்ஜி said...

நிதானமா படிச்சு பெருமூச்சு விட்டேன்.. எப்போ டில்லிக்கு வந்து எப்போ இதையெல்லாம் சாப்பிடறது?
கலக்குங்க!

கோவை2தில்லி said...

கண்டிப்பா தில்லிக்கு வரும்போது வீட்டுக்கு வாங்க. இதெல்லாம் செய்து குடுத்துட்டா போச்சு. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

Post a Comment

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…