Monday, December 27, 2010

வெயிலைத் தேடிதில்லியில் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை குளிர்காலம்தான். இப்பொழுது என்னுடைய ஒன்பதாம் குளிர் காலம், ஆனாலும் குளிர் விட்டு போயிடுச்சு என்று சொல்ல முடியாது!  இங்கே  ஒரு வழக்கு மொழி சொல்வார்கள், ”தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டர் போடத் தொடங்கினால் ஹோலிக்கு மறுநாள் கழட்டலாம் என்று.

குளிர் காலத்தில் வியர்வை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் சோர்வே ஏற்படாது. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதே போல நன்றாக பசிக்கும். அதற்கு ஏற்றாற்ப் போல விதவிதமாகப் பழங்களும், சிற்றுண்டிகளும், இனிப்புகளும், காய்கறிகளும் கிடைக்கும். இந்த பனிக்காலத்தில் எல்லோர் வீட்டிலும் செய்யும் ஒரு இனிப்புகாஜர் அல்வா என்கிறகாரட் அல்வா.” என் வீட்டில் நான்செய்த காஜர் ஹல்வா கீழே உங்களுக்காய்…..


அதே போல் அநேக பெண்கள் இந்த நேரத்தில் செய்யும் ஒரு வேலை ஸ்வெட்டர் பின்னுவது. நானும் திருமணமாகி இங்கு வந்த பின் ஒரு வட இந்தியப் பெண்மணியிடம் இதைக் கற்றுக் கொண்டு எனக்காக ஒரு ஸ்வெட்டர் பின்னிக் கொண்டேன். என்னிடமிருந்து அவர் இட்டிலி, ரசம் போன்றவற்றின் செய்முறையை கற்றுக் கொண்டார். அய்யய்யோ ஆன்ட்டி வயிறு என்னானதோ என்று நீங்க நினைக்க வேண்டாம், இன்னும் நல்லாத்தான் இருக்காங்க! இங்கு வீட்டில் வளர்க்கும் நாய், ஆடு, எருமை போன்ற விலங்குகளுக்குக் கூட ஸ்வெட்டர் அணிவிப்பார்கள். இதை  முதலில்  பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


 
இட்லிக்கு மாவு அரைத்து வெளியில் வைத்தால் அப்படியே தான் இருக்கும். பொங்கவே பொங்காது. பின்னர் தான் இங்கு இருக்கும் நம்மூர் தோழிகள், மாவு அரைத்து உப்புப் போட்டு கரைத்த பின் அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி கம்பளியால் சுற்றி வைத்தால் மாவு பொங்கும் எனச் சொன்னார்கள். எங்கள் வீட்டில் பழைய ஸ்வெட்டரை இந்த டப்பாவுக்கு போட்டு மஃப்ளர் சுற்றி வைப்பேன். இந்த செய்முறை ஓரளவு குளிரில் எடுபடும். கடுங்குளிரில் இதுவும் நடக்காது. இட்லி, தோசை சாப்பிடும் ஆசையை சிறிது நாள் தள்ளிப் போட வேண்டியதுதான்.

தயிர் உறைவதற்கு பாலை அப்படியே காய்ச்சி CASSEROLE ல் விட்டு இரண்டு மூன்று கரண்டி தயிர் விட்டு வைத்தால் தான் அது தயிராக மாறும். இல்லையேல் அது பாலாகவே தான் இருக்கும். இந்த கடும் பனிக் காலத்தில் வெளியில் நின்றிருக்கும் போது பேசும் எல்லோர் வாயிலிருந்தும் சிகரெட் குடிக்காமலே புகை வரும். சாலையோரங்களில் நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்வார்கள்.


பொதுவாகவே தில்லியில் ஒவ்வொரு சீசனுக்கும் அதற்கேற்ற பழங்கள் விதவிதமாய் கிடைக்கும். இந்த பனிக் காலத்தில் கிடைக்கும் பழங்கள். ஆப்பிள், கின்னு (ஆரஞ்சு மாதிரியே இருக்கும்), பைனாப்பிள், சப்போட்டா, திராட்சை, பப்பாளி, பேரீச்சை போன்றவை.

அதே போல அங்கங்கே வேர்க்கடலை, பாப்கார்ன், போன்றவைகளை வறுத்துக் கொடுப்பார்கள். இதற்குக் கடைகளும் உண்டு.  பெயர்கஜக் பண்டார் இங்கு கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி உருண்டை போன்றவை விற்கப்படும்.

இந்தப் பனியில் எல்லோரும் பகல் வேளைகளில் வெயிலைத் தேடி பூங்கா, மொட்டை மாடி போன்ற இடங்களில் அமர்வார்கள். இங்கு இருக்கும் எங்கள் நண்பர்கள் குடும்பத்துடன் எல்லோர் வீட்டிலிருந்தும் ஒவ்வொரு உணவு செய்து ஞாயிறுகளில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று வெயிலில் குழந்தைகளை விளையாட விட்டு பெரியவர்களான நாங்கள் அரட்டையடித்து உணவு உண்டு வருவோம். இது ஒரு வித்தியாசமான அனுபவம்.

மேலே உள்ளவைகள் சில விவரங்களே. இதில் விடுபட்டவைகளையும், என்னுடைய முதல் பனிக் காலத்தைப் பற்றியும், சப்பாத்தி என் வாழ்க்கையில் விளையாடிய விளையாட்டைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாமா?

16 comments:

 1. தலைநகரின் தகவல்கள் நன்று.கடைசியாக கூறிய விடுபட்ட விவரங்களை விரைவில் எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 2. பொதுவாய் பதிவுகள் வசிக்கும் இடம்.. சம்பவங்கள் இப்படி அமையும் போது அது காலக் குறிப்பாய் மாறி பின்னாட்களில் தகவல் குறிப்பேடாய் மாறும்.
  உங்கள் பதிவு பார்க்கும் போது ஆனந்தரங்கம் பிள்ளை டயரி குறிப்பு போல நிகழ்காலப் பதிவுகளாய் அமைவது சந்தோஷமாய் சுவாரசியமாய் இருக்கிறது.

  ReplyDelete
 3. ஒரு ஸ்வெட்டர் தானா..:))

  நான் பாதி ஸ்வெட்டர் தான் பின்னினேன் :))

  ReplyDelete
 4. தில்லிப் பனியில் உங்கள் பணிகளைப் பற்றி விளக்கி மற்றவர்களுக்கு உபயோகமான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ;-)

  ReplyDelete
 5. இட்லி மாவை ரூம் ஹீட்டர் பக்கத்துல வைங்க, சீக்கிரம் புளிக்கும்.

  ReplyDelete
 6. பதிவு நல்லா இருக்குங்க.உபயோகமான தகவல்கள்.
  //முத்துலெட்சுமி/muthuletchumi said...

  ஒரு ஸ்வெட்டர் தானா..:))

  நான் பாதி ஸ்வெட்டர் தான் பின்னினேன் :))
  //
  எனக்கு இன்னும் ஸ்வெட்டர் பின்னத் தெரியாதுங்க

  ReplyDelete
 7. வாங்க raji,

  நன்றி.

  வாங்க ரிஷபன் சார்,

  நன்றி.

  வாங்க முத்துலெட்சுமி,

  நன்றி.

  வாங்க ஆர்.வி.எஸ்,

  நன்றி.

  வாங்க கலாநேசன்,

  நன்றி.

  வாங்க ஜி.ஜி,

  நன்றி.

  ReplyDelete
 8. வெயிலின் அருமை குளிர் காலத்தில்தான் தெரியும் இல்லையா ஆதி?

  போனில் என் மகளிடம் முதலில் கேட்பது எப்படி இருக்கிறது குளிர் என்பது தான்.

  மகள் இன்று கொஞ்சம் வெயில் அடித்தது அம்மா என்று சொல்லும் போது மகிழ்ச்சி.

  ReplyDelete
 9. வாங்க கோமதி அரசு அம்மா,

  நன்றி.

  ReplyDelete
 10. தில்லிக் குளிருக்கு ஆட்டுக்கே ஸ்வட்டர் மாட்டிவிட்டுட்டிங்க...காஜர் அல்வா தில்லியில் ரொம்ப பாப்புலர் போல ...

  தயிர் தோய்த்தல் ஐடியா அருமைங்க..நாங்க ஊட்டியில் இருந்தப்ப இந்த ஐடியா தான்...இட்லி மாவு புளிச்சா போதும்னு ஆகிவிடும்..

  பகிர்வுக்கு நன்றி

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. நல்ல பகிர்வு.புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வாங்க பத்மநாபன்,

  நன்றி.

  வாங்க ஆசியா உமர்,

  நன்றி.

  ReplyDelete
 13. சப்பாத்தி உங்க வாழ்க்கையிலயும் விளயாடிடுச்சா?

  ReplyDelete
 14. வாங்க ஹுஸைனம்மா,

  நன்றி.

  ReplyDelete
 15. தயிர் பண்ண, லேசான சூடுல பாலை உரை விட்டு மைக்ரோவேவில் வெச்சிடுங்க. ஒரே நாள்ல தயிராகிடும்.

  ReplyDelete
 16. வாங்க விக்னேஷ்வரி,

  தகவலுக்கு நன்றி. அவசியம் ஏற்படாததால் ”மைக்ரோவேவ் அவன்” இன்னும் வாங்கவில்லை. ”CASSAROLE” லிலும் ”FRIDGE STABILISER” மேலும் வைத்து இருக்கிறேன்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…