Monday, December 20, 2010

தோய்ப்பு நடனம்!!

இதென்ன புது மாதிரி நடனமாக இருக்கே! இதை ஆடுவது எப்படின்னு தெரிஞ்சிக்க விருப்பமுள்ளவர்கள்  கீழே படிங்க.

முன்னாட்களில் துணியெல்லாத்தையும் ஆத்தங்கரைக்கு எடுத்துட்டு போய் ஓடற தண்ணியில காலை வைச்சு, கரையோரமா கிடக்கும் கல்லில் பொறுமையா தோய்ச்சுட்டு அப்படியே குளிச்சுட்டும்  வருவாங்க.  துணியில் இருக்கும் அழுக்கை நாம் வெளுக்க, ஓடும் தண்ணீரில் இருக்கும் சிறு மீன்கள் நம் காலில் இருக்கும் அழுக்கைத் தின்னும்போது நாம் உணரும் குறுகுறுப்பு இருக்கே!ஆஹா அது ஒரு  அலாதியான ஆனந்தம். அகண்ட காவிரியில் இந்த அனுபவம் ஒவ்வொரு முறையும் நான் திருப்பராய்த்துறை செல்லும்போதெல்லாம்  கிடைக்கிறது.


அப்புறமா துவைக்கறதுக்குன்னு ஒரு மிஷின் வந்த பிறகு துணியையும் சோப்புத் தூளையும்  போட்டு தண்ணீரை திறந்து விட்டு, பட்டனை அமுக்கிட்டு  வந்துட்டா, மத்த வேலையெல்லாம் பாத்துட்டு இருக்கலாம்.  தோய்ச்சு முடிச்சு மிஷின்நான் தோய்ச்சு முடிச்சுட்டேனே அப்படின்னு ஒரு லாலி பாடின பிறகு எடுத்து காய வைச்சா போதும். எனக்கு மெஷின்ல தோய்க்கறதை விட கையால  தோய்க்கிறதுதான் பிடிக்கும். குளிர்காலத்தில தான் வேற வழியில்லாம மெஷின்ல தோய்க்கிறேன்.


கல்லுல துணியை அடிச்சு தோய்க்கும்போது வேற ஒரு வசதியும் இருந்துச்சு. வீட்டுக்காரர் மேல இருக்கிற கோபத்தை எல்லாம் துணிமேல காமிச்சு அடி அடின்னு அடிக்கலாம், அட நான் துணியைத்  தாங்க சொல்றேன்! இங்க வட இந்தியாவில் துணி தோய்க்கிற கல் கிடையாது.  அதுக்கு பதிலா ஒரு மரக்கட்டை வச்சிருப்பாங்க, கிரிக்கெட் பேட் மாதிரி அதுக்குப் பேரும்பேட் தான்.  அந்த பேட்டால துணியை அடி அடின்னு அடிச்சி விளாசுவாங்க பாருங்க... அது அந்த துணியை போட்டிருந்த ஆளையே அடிக்கற மாதிரி இருக்கும்.

எங்க பின்னாடி வீட்டுல ஒரு அம்மணி இருக்காங்க.  அவங்க வாஷிங்மெஷின்- தோய்க்கிறத வேடிக்கை பார்க்கறது எனக்கு ஒரு வாடிக்கை. மெஷின்- துணியைப் போட்டு ஒரு முறை தோய்த்த உடனே அந்த துணியை எடுத்து டிரையர்ல போட்டு குழாயடில வீசுவாங்க.    அங்க ஒரு தடவை வாளில போட்டு அலசுவாங்க.  அதுக்கப்பறம், வாஷிங் மெஷினையே தலைகீழாக்கி தண்ணியை வெளியேத்துவாங்க.  இத்தனைக்கும் அழுக்குத் தண்ணிய வெளியேத்தற குழாயும் நல்லாத்தான் இருக்கு. பிறகு வாளியில் அலசுன துணியை எடுத்து மெஷின்ல போட்டு 10 நிமிடம் தோய்க்க விடுவாங்க.

திரும்பவும் டிரையர்ல போட்டுட்டு அது வேகமா சுத்தும்போது மெஷினை  கையில பிடிச்சுப்பாங்க, அது என்னமோ , இவங்க படுத்தற பாட்டைத் தாங்காம ஓடிப்போயிடற மாதிரி. ஏற்கனவே, அந்த மெஷின் பலகணில ஒரு சின்ன சந்துல தான் இருக்கு, அது எங்க ஓடறது? அது வேகமா சுத்தும்போது அதைப் பிடிச்சுட்டு இருக்கிறதுன்னால இவங்க, அந்த சின்ன இடத்திலேயே, அதுவும் நின்ன இடத்துலேயே நின்னு ஒரு ஆட்டம் ஆடுவாங்க பாருங்க , அதைக் காண கண் இரண்டு பத்தாது.   பரதநாட்டியம், குச்சிப்புடி, ப்ரேக், ஒடிசின்னு பலவிதமான ஆட்டங்களையும் கலந்து ஆடுனா எப்படி இருக்கும், அது மாதிரி அவங்க நடனம் இருக்கும்.

ஒரு நாள் அவங்க ஆடுற ஆட்டத்தை வீடியோ எடுக்கலாம்னு ஆசைதான், அதுக்கு உலகளாவிய பதிப்புரிமை எல்லாம் வித்து காசாக்கலாம்தான், ஆனா அப்படியே ஆடிக்கிட்டே அவங்க வீட்டு பலகணியிலேர்ந்து பாய்ஞ்சு வந்துடுவாங்க ளோங்கற பயத்துல இன்னும் வீடியோ எடுக்கல இதை எப்படி தைரியமா சொல்றீங்கன்னு கேட்கறீங்களா, அந்த அம்மணி ஹிந்திக்காரங்க! அதனால தமிழில்  நான் எழுதறதை  படிக்க முடியாதுன்னுன்ற தைரியம்தான்.

35 comments:

 1. நல்ல பதிவுங்க, சுவாரஸ்யமா ஒப்பிட்டு காட்டியிருக்கீஙக..
  நன்றிகள்.

  அந்த ஹிந்திகாரங்ககிட்ட நான் டிரான்ஸ்லேட் பண்ணி சொல்லப்போறேன். அப்புறம் பார்க்கலாம் யாரு டன்ஸ் நல்லாயிருக்கு-னு.

  ReplyDelete
 2. பார்த்துங்க.. பாரத்... பாரதி...இந்தப் பதிவை படிச்சு சொல்லி அந்த ஹிந்திக்காரங்க உங்களை துவைச்சு போட்டுடப் போறாங்க.. ;-) ;-)

  ReplyDelete
 3. வாங்க பாரத் பாரதி,

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  வாங்க அமைதிச்சாரல்,

  வரவுக்கு நன்றி.

  வாங்க RVS,

  கருத்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 4. /. வீட்டுக்காரர் மேல இருக்கிற கோபத்தை எல்லாம் துணிமேல காமிச்சு அடி அடின்னு அடிக்கலாம், ///

  பாவம் அவரு என்னங்க பண்ணாரு உங்களை ???

  ReplyDelete
 5. //பரதநாட்டியம், குச்சிப்புடி, ப்ரேக், ஒடிசின்னு பலவிதமான ஆட்டங்களையும் கலந்து ஆடுனா எப்படி இருக்கும், அது மாதிரி அவங்க நடனம் இருக்கும். //

  நடனம் கத்துக்கலாமே

  ReplyDelete
 6. :)
  நல்ல காட்சி அதைப்பார்த்து உங்களுக்குத்தோன்றிய எண்ணங்கள் ஆகா...
  ஒலியும் கேக்குமா உங்களூக்கு.. கடகட ந்னு அந்த நடனத்துக்கு பொருத்தமான கடம் சத்தமும் வருமா மிசின்ல இருந்து..

  ReplyDelete
 7. இந்த நடனம்? இப்ப தான் கேள்விபடுறேன்.சுவாரஸ்யம்.

  ReplyDelete
 8. வாங்க LK,

  இது ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்குன்னு நினைச்சுக்கலாம்.

  இரண்டு முறை நன்றி.

  வாங்க முத்துலெட்சுமி,

  நல்லாவே சத்தம் கேட்கும். நன்றி.

  வாங்க ASIYA OMAR,

  இது ஒரு புது வித நடனம் தான். நன்றி.

  ReplyDelete
 9. அட.. காமெடில கலக்கறீங்க..
  ஆமா.. வாஷிங் மெஷின் தட தட னு ஆடினா பிடிச்சுக்க வேணாமா? இத்தனை நாள் இது தெரியாம அதைப் போய் அமுக்கிப் பிடிச்சு அது இஷ்டத்துக்கு ஆட விடாம பண்ணிட்டேனே..

  ReplyDelete
 10. வாங்க ரிஷபன் சார்,

  மெஷினோட சேர்ந்து ஆடினா ஸ்லிம்மா ஆயிடலாம்னு நினைக்கிறேன். ஏனென்றால் அந்த பெண்மணி அப்பிடித்தான் இருப்பாங்க.
  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 11. தோய்ப்பு நடனம் அருமை.

  மெஷினோட சேர்ந்து ஆடினா ஸ்லிம்மா ஆயிடலாம் என்றால் ஸ்லிம்மா ஆக நினைப்பவர்கள் ஆடலாமே.

  ReplyDelete
 12. அகண்ட காவிரி.... ம்ம்ம் சின்ன வயசுல காவேரில குளிக்கும் போது இப்படி காவேரியை விட்டு ரொம்ப தூரத்தில் வந்து வாழ்வேன் என்று தெரியாது. ஹூம்ம்.

  நல்ல ஹாஸ்யமான பகிர்வு

  ReplyDelete
 13. மாதரசியே, கற்பனையின் களஞ்சியமே,
  பார்கின்ற அல்லது செவி வழி கேட்கின்ற அல்லது பிறர் மூலம் கேட்கப்படுகின்ற எந்த ஒரு செய்தி அல்லது சம்பவத்தினை , இயற்கையாகவே உங்களிடத்தில் அள்ள அள்ள குறையாமல் இருக்கின்ற கற்பனா சக்தியின் துணைகொண்டு, அதற்கு உயிரூட்டம் அளித்து சுவைகுன்றாமல் படிப்பவர்களை களிப்படைய செய்யும் கலையில் கை தேர்ந்தவர் என்பதற்கு "தோய்ப்பு நடனம் " ஒரு எடுத்துக் காட்டு என்றால் அது மிகையாகாது. அந்த புதுவித நடனத்தை கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு வாஷிங் மெஷினை படித்துக்கொண்டு ஆடியதில் , ஏற்கனவே இருந்த முதுகு வலி , இன்னும் அதிகமானது மட்டும் இல்லாமல் எனது காதல் கிழத்தி , தங்கள் அறிவுரைப்படி "என்னை தோய்த்து " எடுத்து விடடாள். தங்கள் உதவியை அவள் என்றென்றும் மறக்க மாட்டாள். எல்லா புகழும் உம்மையே சேரும். வாழ்க வளர்க.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 14. நடனம் ரொம்ப நல்லாயிருக்கு.. அப்படியே ஒரு பாடலும் போட்டால் காதும் குளுருமல்லவோ.. ஹ..ஹ..ஹ..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

  ReplyDelete
 15. அடுத்த தடவை அவர் துணி துவைக்க ஆரம்பித்ததும் ஒரு மெஸேஜ் கொடுத்து விடுங்கள். நேரடிக் காட்சி காண ஆவலாக உள்ளது. (Ticket வசூலிக்கலாம் - only Balcony Ticket)

  ReplyDelete
 16. நகைச்சுவையான பதிவுங்க. இந்தக் காட்சியை பார்த்து தினமும் நல்லா பொழுதுபோகும் போல உங்களுக்க
  அருமை.

  ReplyDelete
 17. வாங்க கோமதி அரசு அம்மா,

  கருத்துக்கு நன்றி.

  வாங்க லாவண்யா (உயிரோடை),

  நானும் தில்லியில் வந்து வாழ்வேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. என்ன இருந்தாலும் அவரவர் ஊர் அவரவருக்கு பெரிது தான்.

  கருத்துக்கு நன்றி.

  வாங்க V.K NATARAJAN அவர்களே,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 18. வாங்க ம.தி சுதா,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஈஸ்வரன் சார்,

  தினமும் இதே கதை தான். கண்டிப்பா மெஸேஜ் கொடுக்கிறேன்.
  கருத்துக்கு நன்றி.

  வாங்க ஜி.ஜி,

  நல்லா பொழுது போகும். உண்மையிலேயே அவங்க ஒரு சுறுசுறுப்பான ஆளு. அவங்கள பார்த்தாலே சும்மா இருக்க பிடிக்காது.
  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 19. இப்ப யாரு அடிச்சி துவைக்கிராங்க.
  அந்த காலத்து கல்லை பார்ப்பதே அபூர்வமா இருக்கு..

  (ஆசியா பதிவுல உஙக்ள் மாமியார் சோளி தச்சி தருவாஙக்ன்னு சொல்லி இருந்தீங்க, ஆச்சரியாமா இருக்கு) உங்கள் மாமியார் ரொம்ப நல்ல வங்க.\

  ReplyDelete
 20. தோய்ப்பு ஒரு நடனம் + உடற்பயிற்சி

  கிரான்மா சொல்லுவாங்க பெட்சீட், ,மிதியடி எல்லாம் சோப்பு போட்டு ஊறவைத்துட்டு, காலால் மிதித்து, குமுக்க சொல்வாஙக்.

  ReplyDelete
 21. வாங்க JALEELA KAMAL,

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 22. இன்னிக்குத்தான் இந்த ப்ளாக் வந்தேன். ஐயோ.என்ன
  காமெடி எழுத்து திறமை. வாழ்த்துக்கள்.இதுபோல பக்கத்து வீட்டு ஹிந்திக்காரி வேர என்னகாமெடி சீன்கள்ளாம் காட்டுவாங்கன்னு தொடர்பதிவு போடவும்.
  ஹா, ஹா, ஹ.

  ReplyDelete
 23. வாங்க LAKSHMI அம்மா,

  தொடர் பதிவெல்லாம் போட்டா என்ன துணி தோய்க்கிற கட்டையாலேயே பொலந்துடுவாங்க. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 24. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

  http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_06.html

  ReplyDelete
 25. //ஓடும் தண்ணீரில் இருக்கும் சிறு மீன்கள் நம் காலில் இருக்கும் அழுக்கைத் தின்னும்போது நாம் உணரும் குறுகுறுப்பு இருக்கே!ஆஹா அது ஒரு அலாதியான ஆனந்தம்.//

  அதெல்லாம் அனுபவிக்க வாய்க்காதவங்க.....பாவங்க‌

  ReplyDelete
 26. //எனக்கு மெஷின்ல தோய்க்கறதை விட கையால தோய்க்கிறதுதான் பிடிக்கும்.////வீட்டுக்காரர் மேல இருக்கிற கோபத்தை எல்லாம் துணிமேல காமிச்சு அடி அடின்னு அடிக்கலாம், //

  எவ்ளோ டிரிக்ஸ்ஸா இருக்கீங்க....

  ReplyDelete
 27. ஆத்துல துணி துவைக்கும்போது, இந்த மீன் கடியிலருந்து தப்பிக்கிறதுக்காகவும் கால் மாத்தி, மாத்தி நின்னு, அதுவும் ஒரு டான்ஸ் மாதிரிதான் இருக்கும்!!

  ஆனாலும், அந்தம்மா ஏன் மிஷினைப் பிடிக்கிறாங்கன்னு ஒரு முறைகூட கேட்கலையா நீங்க? கேட்டுச் சொல்லுங்களேன்.

  ReplyDelete
 28. :)) mumbaila thuni thuvaika kattai vachu adichu thuvaipanga. athu gypagam vanthuchu

  ReplyDelete
 29. ஓடுகிற தண்ணி துணியை சுத்தப் படுத்தும், நீந்துகிற மீன்கள் பாதத்தை சுத்தப்படுத்தும். அருமை.
  ஆற்றில் குளிக்கப் போகும்போதெல்லாம் இதுக்காகவே கால்களை தண்ணீரில் வைத்துக்க்கொண்டு அங்குள்ள கல்லில் உக்காந்திருப்பேன். நல்ல கொசு வத்தி!!!

  ReplyDelete
 30. வாங்க அமைதிச்சாரல்,

  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  வாங்க வார்த்தை,

  நன்றி.

  வாங்க ஹுஸைனம்மா,

  நன்றி.

  வாங்க புதுகைத் தென்றல்,

  நன்றி.

  வாங்க நானானி,

  நன்றி.

  ReplyDelete
 31. தோய்ப்பு நடனம் சிறந்த உடற்பயிற்சி போல.

  ReplyDelete
 32. வாங்க இராஜராஜேஸ்வரி,

  ஆமாம். நன்றிங்க.

  ReplyDelete
 33. ம.தி.சுதா பாடல் கேட்டிருந்தார்
  இதோ இப்படி ஒரு பாடல் சரியா...
  அடிச்சு துவச்சு புழிஞ்சு போட்டா அழுக்கிருக்காது...உதறி உதறி காயப்போட்டா ஈரம் இருக்காது.....ஆடிப்படி வேலை செஞ்சா ...ராகத்தில் பாடி மகிழுங்கள்]

  எப்படி நம்ம தோய்ப்பு பாட்டு

  ReplyDelete
 34. வாங்க goma,
  தோய்ப்பு பாட்டு நல்லாயிருக்குங்க. நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…