Tuesday, November 30, 2010

நேமம்

[விடுமுறைப் பயணம் - பகுதி 2] பகுதி 1


திருச்சியிலிருந்து கல்லணை வழியாக சென்றால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது நேமம் என்ற கிராமம். இதுவும் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனின் திருநாமம் ஐராவதேஸ்வரர். அம்பாளின் திருநாமம் அலங்காரி. நியமம் என்ற பெயர் மருவி காலப்போக்கில் நேமம் என்றாகி விட்டதுஅப்பர் பெருமானின் வாக்கில் இடம்பெற்ற இத்தலம் அமைதியான இடத்தில் அழகாய் இருக்கிறது.  300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த  கோவிலின் உள்ளே சென்று தரிசிக்கலாமா?

வாயிலில் ஈசனின் நேராக நந்தி அமையப்பெற்றிருக்கிறது. இந்த நந்தி பீடத்தின் மீது இல்லாமல் இரண்டடி பள்ளத்தில் இருக்கிறது. பள்ளத்தில் இருப்பதற்கு காரணமும் சொல்கிறார் கோவிலின் காப்பாளர் - மழை இல்லாமல் மக்கள் அவதிப்படும் போது காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து நந்திக்கு அபிஷேகம் செய்வார்களாம். நல்ல மனதோடு அபிஷேகம் செய்தால் நந்தி பிரதிஷ்டை செய்திருக்கும் பள்ளம் நிறைந்து மழையும் வருமாம். அப்படியில்லாமல், ”இப்படியெல்லாம் செய்தால் என்ன ஆகப் போகிறது என்று நினைத்து வேண்டா வெறுப்பாக செய்தால் நந்தி இருக்கும் பள்ளம் நிரம்பாமல், அபிஷேகம் செய்யும் நீர் அனைத்தும் பூமிக்குள் சென்று காவிரியை அடைந்துவிடும் என்கிறார்.அடுத்து உள்ளே சென்று ஐராவதேஸ்வரரை கண்குளிரக் கண்டு தரிசித்தோம். அடுத்து அம்பாளை தரிசிப்போம். இங்கு அலங்காரி, ஆதி அலங்காரி என இரு அம்பாள்களின் சன்னதி இருக்கிறது. இதற்கும் ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆங்கிலேயர்கள் படையெடுப்பில் அம்பாளை காப்பாற்றுவதற்காக அலங்காரி அம்மனை காவிரியாற்றில் புதைத்து விட்டார்களாம். சில வருடங்கள் கழித்து அம்பாளை தேடிய போது கிடைக்கவில்லையாம். ஆதலால் வேறு ஒரு அம்மன் சிலை செய்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஒரு நாள் பூஜை செய்பவரின் கனவில் அம்மன் வந்து காவிரியாற்றில் தான் இருக்கும் இடத்தை சொல்லியிருக்கிறார். பின்பு அம்மன் சிலையை கண்டெடுத்து அந்த சிலையும் மறுபிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆகவே இரு அம்மன்கள். காவிரியில் கண்டெடுத்த அம்மன் ஆதி அலங்காரி. புதிதாக செய்த அம்மன் அலங்காரி. இரு அம்பாளுக்கும் அபிஷேகங்கள் ஆராதனைகள் சிறப்பாக செய்யப் படுகின்றன.


சுற்றுச் சன்னிதிகளாய் பிள்ளையார், வள்ளி-தெய்வானையுடன் இருக்கும் முருகன், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உண்டுகாவிரியின் கரையில் அமைந்திருக்கும் இக்கோவில் அழகாய் இருக்கிறதுபிரபலம் இல்லாத கிராமத்துக் கோவில் என்பதால் அவ்வளவாய் மக்கள் வந்து போவதில்லைகாலையில் பூஜை செய்துவிட்டு பூட்டிக்கொண்டு சென்று விடுகிறார் கோவிலின் அர்ச்சகர்நிம்மதியாய் கோவிலை தரிசிக்க காலையிலேயே சென்று விடுவது நல்லது.

காஞ்சி மாமுனிவர் அருளியதெய்வத்தின் குரலில் அலங்காரி அம்மனின் மகிமை பற்றி எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்நாங்கள் சென்றது நவராத்திரி காலமானதால், அலங்காரி அம்மனின் உற்சவமூர்த்திக்கு அழகாய் அலங்காரம் செய்து ஊஞ்சலில் வைத்திருந்ததையும் தரிசித்தோம்.


கோவிலுக்குக் கிராமத்திலிருந்து வந்திருந்த ஒரு வயதான பெண்மணி எங்கள் அனைவரையும் அவரது இல்லத்திற்கு அழைத்து சாப்பிட பாயசமும் கொடுத்தார்கள். முன்பின் அறியாதவர்களைக் கூட வீட்டிற்கு அழைத்து உபசரித்த கிராமத்து பண்பை எண்ணி வியந்தேன்.

அடுத்து செல்லப்போவது வரகூர் வேங்கடேச பெருமாள் சன்னிதிக்குபோகலாமா?

18 comments:

 1. இவ்வளவு பக்கத்திலேயிருந்தும் , உங்களோட போய் தான் நேம தரிசனத்துக்குப் ப்ராப்தமிருந்திருக்கு! பெருகட்டும் உங்க புண்ணியக் கணக்கு!

  ReplyDelete
 2. அழகா இருக்கு கோயில்.. விவரங்கள் எல்லாம் தெளிவாக் குடுக்கிறீங்க..

  பாயாசம் குடுத்தாங்களா.. கிராமம் கிராமம்தாங்க..

  ReplyDelete
 3. வாங்க நிலாமகள்,

  படித்த உங்களுக்கும் புண்ணியம் தான். நன்றி.

  வாங்க முத்துலெட்சுமி,

  நாங்கள் 11 பேர் சென்றோம். அனைவருக்கும் பாயசம் கொடுத்தார்கள். பெண்களுக்கு வெற்றிலை பாக்கும். நன்றி.

  ReplyDelete
 4. உங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் பெற்றுக் கொள்ளவும்

  http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

  ReplyDelete
 5. செட்டிநாட்டிலும் நேமம் என்ற பெயரில் ஓர் ஊரும் அழகான கோயிலுமுண்டு.இது நான் அறியாதது.நந்தி பற்றிய தகவல் புதியது.தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 6. வாங்க எல் கே,

  நான் விருதுக்குத் தகுதி உள்ளவளா என்று தெரியவில்லை. உங்கள் விருதுக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 7. வாங்க சுசீலாம்மா,

  முதல் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி அம்மா.

  ReplyDelete
 8. நண்பர் வெங்கட் அவர்களின் 100வது பதிவில் உங்கள் வலைப்பூவை பற்றி சொல்லியிருந்தார்...

  முதல் முதலாக வருகை தருகிறேன்...

  முதல் வருகையிலேயே “நேமம்” தரிசனம் கிடைக்கப்பெற்றேன்...

  மிக்க நன்றி.... தொடர்ந்து வருவேன்...

  நேரமிருப்பின் இங்கும் வருகை மற்றும் ஆதரவு தரவும்....

  www.jokkiri.blogspot.com

  www.edakumadaku.blogspot.com

  ReplyDelete
 9. ரிஷபத்தைப் பற்றி படிக்கும்போதே ஆனந்தம்..

  ReplyDelete
 10. புதிய தகவல்கள். நன்றி.

  ReplyDelete
 11. வாங்க R GOPI,

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  வாங்க ரிஷபன் சார்,

  நன்றி.

  வாங்க கலாநேசன்,

  நன்றி.

  ReplyDelete
 12. nalla thagaval parattugal
  polurdhayanithi

  ReplyDelete
 13. வாங்க POLURDHAYANITHI,

  முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. நேமம் சுற்றுலா அழகு!

  ReplyDelete
 15. வாங்க கே பி ஜனா சார்,

  நன்றி.

  ReplyDelete
 16. நேமம் நானும் போயிருக்கேன். சிறிய கிராமம். சிறிய கோயில். அருள் நிறைந்த மூர்த்தம். நன்றி ;-)

  ReplyDelete
 17. நேமம் தரிசனம் பெற்றேன். நன்றி ஆதி.

  ReplyDelete
 18. வாங்க RVS,

  நன்றி.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…