Saturday, November 27, 2010

விடுமுறைப் பயணம்பயணம், சுற்றுலா செல்வது எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம்.  தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுகள் நடந்தபோது குழந்தைக்கு விடுமுறை என்பதால் அந்த நாட்களில் நாங்கள் திருச்சி சென்று என்னவரின் வீட்டில் தங்கினோம்.

பொதுவாக மதுரையைத்தான்  “தூங்கா நகரம் என்று சொல்கின்றனர்.  காவிரியாறு ஓடும் அழகான ஊரான திருச்சியையும், ”தூங்கா நகரம் என்று சொல்லலாம். இரவு 1 மணிக்குச்  சென்றாலும் உள்ளூர் நகர பேருந்துகள் கிடைக்கும். கட்டணம் மட்டும் இரு மடங்கு. திருச்சி செல்லும்போதெல்லாம், திருச்சியிலுள்ள மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில், திருவானைக்கா, ஸ்ரீரங்கம், சமயபுரம், குணசீலம், வயலூர் போன்ற கோவில்களுக்கெல்லாம் ஒரு முறையாவது சென்று வருவோம்.
இம்முறை திருச்சி-தஞ்சையின் அருகில் உள்ள சில கோவில்களுக்கெல்லாம் ஒரு டெம்போ ட்ராவலர் வண்டி வைத்துக்கொண்டு குடும்பத்துடன் ஒரு நாள் பயணமாய் சென்று வந்தோம்.  காலை ஏழு மணிக்கு ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி இந்த ஒரு நாள் பயணத்தில் நேமம், வரகூர், புன்னைநல்லூர் மாரியம்மன், திருக்கருகாவூர், திட்டை, தஞ்சை பெரிய கோவில் போன்ற இடங்களுக்கெல்லாம் செல்வதாய் ஏற்பாடு செய்திருந்தார் என்னவர்.

உங்களையும் என்னுடன் கூட இந்த பயணத்தில் அழைத்துச் செல்கிறேன். முதலாவதாய் நாம் பார்க்கப் போவது திருச்சியிலிருந்து கல்லணை வழியாய் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள நேமம் என்ற இடத்திற்கு.  நேமம் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஐராவதேஸ்வரர்-ஆதி அலங்காரி-அலங்காரி சன்னிதியில் சந்திப்போமா?

18 comments:

 1. நறுக் சுறுக் ந்னு அறிமுகமா.. டெம்போல இடமிருக்குமில்ல.. :)

  ReplyDelete
 2. அட.. நம்ம ஊரு.. சொல்லுங்க.. சொல்லுங்க..

  ReplyDelete
 3. இப்படி சின்னதா போட்டா எப்படி ??? டெம்போ டிரைவர் பக்கத்தில் ஒரு சீட்டு

  ReplyDelete
 4. அவர் ஆந்திர ஆலயங்களை எழுதி முடித்ததும் நீங்க தமிழ்நாட்டுக் கோவில்களா...எதிர்பார்க்கிறோம்...

  ReplyDelete
 5. சுப்பரா போகுது

  ReplyDelete
 6. வாங்க முத்துலெட்சுமி,

  தாராளமா இடம் இருக்குது ஏறி உக்காந்துக்குங்க.
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ரிஷபன் சார்,

  நம்மூரு தான் சொல்லிட்டா போச்சு.
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 7. வாங்க எல் கே,

  டிரைவர் பக்கத்தில் இடம் ரெடி.
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கலாநேசன்,

  ஆமா ஆந்திரப் பயணம் முடிச்சுட்டார். அதனால நான் தமிழ்நாட்டு பயணம் ஆரம்பிச்சுட்டேன்.
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 8. வாங்க யாதவன்,

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 9. காமன்வெல்த் (சுருட்டல்) பாவத்தை சுமக்க சகிக்காமல் , க்ஷேத்ராடனம் போய் புண்ணியம் தேடிக் கொண்டீர்களாக்கும். நல்லதுதான்.

  ReplyDelete
 10. எனக்கு ஜன்னல் சீட்..முறுக்கு...நெல்லிக்காய் & உப்பு எல்லாம் மறக்காம எடுத்து வைச்சுக்கோங்க...:)

  ReplyDelete
 11. ஸ்டார்ட் ம்யூஸிக்.

  ReplyDelete
 12. வாங்க LAKSHMINARAYANAN,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மங்கை,

  ஜன்னல் சீட் ரெடி. நெல்லிக்காய் முறுக்கு எல்லாம் வாங்கியாச்சு. வாங்க போகலாம்.
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க விக்னேஷ்வரி,

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. நம்ம ஏரியா கோவில் டூரா? நான் ரெடி. ஜூட். ;-)

  தென்குடித் திட்டை வஷிச்டேஸ்வரர் கோவில், குரு பகவான் அருள்பாலிக்கிறார்.
  திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை.. முல்லைவனநாதர்...

  ReplyDelete
 14. வாங்க RVS,

  நீங்க சொல்லியிருக்கிற கோவிலெல்லாம் வரிசையா வரப்போகுது.
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 15. “தூங்கா நகரம்” -- திருச்சிக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒன்று. ஏனென்றால்... மதுரை யோ... சென்னையோ -- இரவு நேரத்துல உள்ளூர் பேருந்து கிடைக்காது... ஆனா திருச்சி அப்படி இல்லை.. எந்த நேரமானாலும்... எல்லா ஏரியாவுக்கும் கிடைக்கும்.

  ReplyDelete
 16. வாங்க மோகன்,

  முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 17. குலமாதர் கொண்டாடும் குல மாமணியே,
  எந்தவிதமான கட்டுரை வரைந்தாலும் அதை சுருக்கமாகவும் அதே சமயம் சுவைபடக்கூறி தனக்கென ஒருவாசகர் வட்டத்தை குறுகிய காலத்தில் பெற்றமைக்காக , "ப்ளாக் மன்னர்" என அறியப்படும் திரு எல்கே அவர்களிடம் , "தங்க மங்கை " என்ற பாராட்டுப் பத்திரமதைப் பெற்றமைக்கு எங்களின் முதற்கண் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்ளும் இந்த வேளையில், தங்களின் பயணக் கட்டுரைகள், மேலும் பல நூறு வாசகர்களை தங்களுக்கு பெற்றுத் தந்து அவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றிட எல்லாம் வல்ல அந்த இறைவன் துணைபுரிவாராக. தொடரட்டும், ஆதி அலங்காரி- இராவதேஸ்வரர் பயணக் கட்டுரைகள்!! பயணங்கள் முடிவதில்லை என்ற ஒரு பெரியோரின் கூற்றுக்கு ஒரு இலக்கணம் கற்பிக்க வந்த மாதரசியே, இருபத்தோராம் நூற்றாண்டின் மற்றுமொரு "பரணீதரன்" என்ற பெயரை தாங்கள் விரைவில் பெற்றிட எங்கள் வாழ்த்துக்கள்.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 18. வாங்க V.K.NATARAJAN அவர்களே,

  வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…