Monday, November 15, 2010

மக்களே உஷார்

என்னடா இது? தலைப்பைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே எனத் தோன்றுகிறதா? எதைப் பற்றி உஷார்படுத்தப் போகிறேன் என்று நீங்கள் யோசிக்கும் முன் நானே சொல்லி விடுகிறேன்.

ஒருபுறம் இன்று பூமி வெப்பமயமாதல் பற்றி எல்லோரும் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். மறுபுறம் கலியுகம் முடியப்போகிறது, உலகம் அழியப் போகிறது என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. காடுகளை அழிப்பது, பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது என்று ஒருபுறமும், அராஜகங்கள் நடப்பது மறுபுறமும் என்று இன்னும் எத்தனையோ.

நான் இங்கே கூற வருவது உணவுப்பொருட்களில் கலப்படம் பற்றி. பெருவாரியான உணவுப்பொருட்களில் இன்று கலப்படம் செய்யப்படுகிறது. இதை பயன்படுத்துவதால் வயிற்றுக்கும், வீட்டுக்கும் தீமை விளைவிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு சமையலுக்காக புளியை கரைத்துக் கொண்டிருந்தேன். கையில் ஏதோ தட்டுப்படவே என்னவென்று பார்த்தால் அது ஒரு ஸ்க்ரூ. அதிர்ந்து விட்டேன். எதிர்பாராத விதமாக வயிற்றுக்குள் சென்றிருந்தால் என்ன ஆவது? எடை அதிகரித்து காண்பிப்பதற்காக சேர்த்திருக்கலாம். அல்லது பேக் செய்யும் போது அலட்சியத்தால் விழுந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.


இது போல பிற உணவுப் பொருட்களில் உள்ள கலப்படங்கள் பற்றி பார்ப்போம். வெல்லம் உபயோகிக்கும் போது முடிந்த வரை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி உபயோகிக்கவும். ஏனென்றால் மண், கல், நகங்களும் கூட அதில் இருக்கிறது. மாதுளம் பழங்களில் சிவப்பு நிறத்தை மிகைப்படுத்தி காண்பிப்பதற்காக ஊசி மூலம் மருந்து செலுத்தப் படுகிறது. தர்பூசணிப் பழத்திலும் இதே கதை தான்.


நாம் வாங்கும் பாலிலும் கலப்படம் செய்யப்படுகிறது. பாக்கெட் பாலாவது பரவாயில்லை. கறந்த பாலை வாங்கும் போதே வடிகட்டி வாங்கவும். இதில் முடி, வைக்கோல், குப்பை போன்றவையும் இருக்கலாம். சமீபத்தில் ஒரு பால் கடையின் முன் நின்றிருந்த போது கவனித்தது என்னவென்றால் பால்கடைக்காரர் புகைபிடித்துக் கொண்டிருக்கும் போது சாம்பலை தட்டினார் அது அத்தனையும் பாலில் தான் விழுந்தது. இப்போது வட இந்தியாவில் பாலுக்குப் பதிலாய் ரசாயனப் பொருட்களைக் கலந்து பால் என்ற பெயரில் ஏதோ ஒரு வெள்ளை திரவத்தை விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.


இவை ஒரு சில உதாரணங்கள் தான். இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து உபயோகிப்பதானால் மிகவும் கடினம் தான். ஆனால் முடிந்த வரை கண்முன் நடப்பதை தடுக்கலாம். முதலில் சுத்தம் சுகாதாரம் தேவை. காய்கறி மற்றும் பழங்களை மூன்று தடவை கழுவி பயன்படுத்தவேண்டும்.

நமது முன்னோர்களுக்கு வியாதிகள் வருவது அரிதாக இருந்தது. இன்று யாரை விசாரித்தாலும் ஏதோ ஒரு உடல்நலக் குறைபாடு உள்ளது. வியாதிகளோ ஏராளமாய் வருகிறது. ஆகவே நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நமக்கு அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியம் என்னும் நிறைவில்லா செல்வத்தை அளிப்போம்.

உஷாரய்யா உஷாரு!!!!!!!!!!!!!!!!

14 comments:

 1. சத்தான சாப்பாடுன்னுநம்பி எதையும் சாப்பிடமுடியரதில்ல.. புலிய கட்டி சாப்பாடு போட்ட ஆட்டுக்குட்டி கணக்கா நாம பயந்து பயந்து சாப்பிட்டு.. நோஞ்சானா இருக்கவேண்டியதா இருக்கு..

  ReplyDelete
 2. அம்மாடியோவ் இவ்வளவு நடக்குதா? பயம்மா இருக்கு.

  ரேகா ராகவன்

  ReplyDelete
 3. வாங்க முத்துலெட்சுமி,

  ஆமாமா பயந்து தான் சாப்பிட வேண்டியதாயிருக்கு. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க KALYANARAMAN RAGHAVAN அவர்களே,

  இப்படியெல்லாம் தான் நடக்குது. முதல் முறையாக கருத்திட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. புளி வாங்கி உபயோகிக்கரவங்க வயித்தில புளி கரைக்க வெச்சுட்டிங்க தோழி... எல்லோருக்கும் கவனம் இருக்க வேண்டிய தகவல்.

  ReplyDelete
 5. சரியா சொன்னீங்க. இப்போ எது சாப்படறதுன்னாலும் பயமா தான் இருக்கு. எதுவுமே ஆரோக்கியமானதில்ல. :(

  ReplyDelete
 6. கொடுமைங்க.... இவனுங்களை எல்லாம் நடு ரோட்டுல கல்லால அடிக்கனும்

  ReplyDelete
 7. வாங்க நிலாமகள்,
  தகவல் உபயோகமாக இருக்கட்டும் என்று எண்ணி தான் பதிவில் இட்டேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க விக்னேஷ்வரி,
  நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க அருண்பிரசாத்,
  நாம் யாரையும் திருத்த முடியாது. நாம் கவனமாக இருந்தால் ஓரளவுக்கு சிறந்தது. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 8. நல்ல பதிவு.

  உடல்,மன ஆரோக்கியம் எனும் நிறை செல்வத்தை அடுத்த தலை முறைக்கு அளிப்பது நம் கடமை.

  ReplyDelete
 9. உங்கள் சமுதாய விழிப்புணர்வுப் பதிவுக்கு பாராடுக்கள்.

  ReplyDelete
 10. வாங்க கோமதி அரசு அம்மா,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க நிலாமதி,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

  ReplyDelete
 11. ஆமாங்க.நீங்க சொல்ற மாதிரி, இப்போல்லாம் எது சாப்பிட்டாலும் பயந்து பயந்துதாங்க சாப்பிட வேண்டி இருக்கு.

  ReplyDelete
 12. வாங்க ஜிஜி,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. உண்மைதானுங்க.தேவையான பகிர்வு...

  ReplyDelete
 14. வாங்க KALIDOSS,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…