Thursday, November 11, 2010

கொத்தமல்லி சாதம்


எங்க அம்மாகொத்தமல்லி சாதம்  செய்து தருவாங்க! அவங்க செஞ்சாங்கன்னாவாவ் எனச் சொல்ல வைக்கும் தனி டேஸ்ட் தான். திருமணமான பிறகு நானும் நிறைய தடவை செய்து பார்த்துட்டேன்.   ஆனாலும், அம்மாவோட கைப்பக்குவம் அளவுக்கு வரலை. அதுக்காகநல்லா இருக்காதா?”ன்னு எல்லாம் கேட்கக்கூடாது. ரொம்பவே நல்லா இருக்கும். அம்மா பண்ணும்போது சாதம் தனியா வடிச்சுட்டு கலவைய போட்டு கலப்பாங்க. ஆனா நான் இங்கு குளிர்காலங்களில் தனித்தனியா செய்தா ஆறிடும்கறதனால, கீழ்க்கண்ட முறைப்படி பண்ணுவேன். உங்களுக்கு எப்படி வசதியோ அது மாதிரி செய்து  சாப்பிடுங்க.

தேவையான பொருட்கள்:-

அரிசி – 1 தம்ளர்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4 () 5
சீரகம் – 1 டீஸ்பூன்
புளிசிறிதளவு
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 1 கையளவு

தாளிக்க:- கடுகுசிறிதளவு
கடலைப்பருப்புஅரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்புஅரை டீஸ்பூன்
பெருங்காயம்சிறிதளவு

செய்முறை:-

அரிசியை களைந்து தண்ணீரை வடித்து விட்டு 1 டீஸ்பூன் நெய் விட்டு பிசறி வைக்கவும்.  நீரில் அலசி சுத்தமாக்கிய கொத்தமல்லி, புளி, சீரகம், வரமிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும். பிறகு பச்சைப் பட்டாணியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கியதும் அரைத்த கொத்தமல்லி விழுதையும்  போட்டு நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், 1 தம்ளர் அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீ்ர் என்கிற விகிதத்தில் விட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அரிசியை சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் [சிம்மில்] 5 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை  நிறுத்தி விடவும்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரைத் திறந்தால் சுடச்சுடச் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்!  இந்த கொத்தமல்லி சாதத்தினை தனியாகவோ, வெங்காயத் தயிர் பச்சடியுடனோ சாப்பிடலாம்.

எப்போதும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலவை சாதங்களையே சாப்பிட்டு போரடித்து இருக்கும் எல்லோரும் இதைவாவ், இது ரொம்ப நல்லா இருக்கே!” என்று உங்களுக்குப் புகழாரம் சூட்டுவாங்க!

ஆதி.

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.

13 comments:

 1. அட நல்லா இருக்கே! செய்து பார்கனும்

  ReplyDelete
 2. வாங்க யாதவன்,
  நன்றிங்க.


  வாங்க காயத்ரி,
  நன்றிங்க.

  வாங்க அருண் பிரசாத்,
  நன்றிங்க.

  ReplyDelete
 3. நல்லா இருக்கு..
  போட்டோ உங்க வீட்டு கொத்தமல்லி சாதமா.. சூப்பரா இருக்கே..

  ReplyDelete
  Replies
  1. நலமா? எங்கே ஆளையே காணோம்?

   Delete
 4. மாதரசியே,
  தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற என்ற பெரியோர் கூற்றிற்கு மற்றுமோர் தடவை, தங்கள் கொத்துமல்லி சாதம் செய்முறை விளக்கம் உலகத்தோருக்கு எடுத்துக்காட்டியது. சுவைபட செய்தது மட்டுமன்றி , அதை கலை நயமிக்க அலங்காரத்தோடு பரிமாறிய பாங்கு நேர்த்தியாகவும் அதே சமயம் நாக்கின் சுவை நரம்புகளை தூண்டி, உடனே இது நமக்கு சாப்பிடக் கிடைக்காதா, என்று ஏங்கவும் வைத்ததென்னவோ உண்மை. இதுபோல் பலசெய்முறை விளக்கங்களை எங்களுக்கு வழங்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல், இவற்றை, வருங்கால சந்ததியருக்கும் பயன்படும் வண்ணம் ஒரு புத்தகமாகவும் அச்சில் வெளியிட எங்கள் வாழ்த்துக்கள்.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 5. வாங்க முத்துலெட்சுமி,
  இது எங்க வீட்டு கொத்தமல்லி சாதம் தான். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் செய்தேன். அப்ப எடுத்த போட்டோ இது. நன்றிங்க.

  வாங்க VK NATARAJAN அவர்களே,
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 6. வாங்க கே.பி ஜனா சார்,
  நன்றிங்க.

  ReplyDelete
 7. திருப்தி!!


  “ஆரண்ய நிவாஸ்”
  http://keerthananjali.blogspot.com/

  ReplyDelete
 8. வாங்க ஆர் ஆர் ஆர் சார்,

  ரொம்ப நன்றி சார்.

  ReplyDelete
 9. நாளைக்குச் செஞ்சு பார்க்கிறேன்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…