Tuesday, November 9, 2010

கல்லூரி கலாட்டா

கல்லூரியில் கலாட்டாக்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. பயம் என்றால்  என்னவென்றே அறியோம். அப்படித்தான் எங்கள் கல்லூரியிலும். நாங்கள் படித்தது இயந்திரவியல் டிப்ளமா. எங்கள் வகுப்பில் மொத்தம் ஐம்பத்தேழு மாணவர்கள், மூன்றே மூன்று [!] மாணவிகள்.

கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கென்று தனியான ஓய்வு அறை உண்டு. மதியம் உணவு இடைவேளையில் அங்கு சாப்பிட்ட பின்பு வராண்டாவில் அமர்ந்து கொண்டு அரட்டைக் கச்சேரி நித்தம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி.

ஒருநாள் நாங்கள் அப்படி அரட்டை அடிக்கையில் துறைத்தலைவர் எங்களை கடந்து சென்றார். அவருக்கு தலையில் வழுக்கை. உடனே என் தோழி அப்பொழுது வெளிவந்த ’’ரட்சகன்’’ படத்தில் வரும் ‘’சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அது நீதானா’’. என்று பாடுவாள்.

வகுப்பில் பேராசிரியர் முதல் இருக்கையில் அமர்ந்திருக்கும் என்னிடமோ என் தோழிகளிடமோ புத்தகம் வாங்கி சொல்லிக் கொடுப்பார். அவருடைய சட்டையில் இரண்டு மூடி போட்ட பாக்கெட்டுகள் வைத்து தைத்து இருக்கும். அவர் பாடம் எடுக்கையில் பெரிய தொப்பையுடன்கூடிய அவரின் உருவத்தினை நான் வரைந்து கொண்டிருப்பேன்.

கல்லூரியில் எங்கள் துறைக்கென்றே தனிக்கட்டிடம் இருந்தது. அதன் பின்புறம் விளையாட்டு மைதானம் இருக்கும். ஒரு பேராசிரியர் பாதி நாள் வகுப்புக்கு வரவே மாட்டார். அப்பொழுதெல்லாம் மாணவர்கள் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். என்றைக்காவது பேராசிரியர் வருவதைப்    பார்த்ததும் மாணவிகளாகிய நாங்கள் சைகை காட்டுவோம். உடனே வகுப்பறையின் கடைசிக்கதவின் வழியே மாணவர்கள் புகுந்து அமர்ந்து கொள்வார்கள்.

அந்த பேராசிரியர் ‘’தம்பிகளா கொடுக்கும் வேலையை தயவுசெய்து முடித்து விடுங்கள்.’’ என்று கெஞ்சுவார். இதை கேட்டுக்கொண்டே கையில் திருவோடுடன் கம்பு ஊன்றிக் கொண்டிருக்கும் ஒரு அப்பாவி ஜீவனை வரைந்து முடித்திருப்பாள் என்  தோழி.

இன்னும் ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடந்திருக்கு. உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கணுமே!   யோசித்துப் பாருங்கள். இவையெல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாத  பசுமையான நினைவுகள் அல்லவா?


ஆதி..... 

6 comments:

 1. ~~Stolen Days ~``

  i was the one who is the most mischiveous guy in my school days ...
  Then i went to a college in Trichy...
  just 1 year ,,
  i came out and joined viscom at chennai SRM ...

  ur article is making me to remember those days at Trichy college (Mookambigai college of engineering ) post more articles like this

  kudos......

  www.therathavan.blogspot.com

  ReplyDelete
 2. கல்லூரி கலாட்டாக்கள் எப்போது நினைத்தாலும் நம்மை அறியாமல் சிரிப்பு வரும்.. பசுமை நிறைந்த நினைவுகள்.. அது ஒரு பொற்காலம்

  ReplyDelete
 3. பெயர் வைப்பதும், படம் வரைவதும், மேனரிசங்களை நடித்துக் காட்டிச் சிரித்து மகிழ்வதுமாக... ம்ம்ம் ... அதெல்லாம் ஒரு காலம். ..!!

  ReplyDelete
 4. இன்னும் கொஞ்சம் சம்பவங்கள் சொல்லி இருக்கலாமோ ??

  ReplyDelete
 5. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 6. இனி கல்லூரி கடைசி நாளன்று யாரும் ‘பசுமை நிறைந்த நினைவுகளே..பாடிப் பறந்த பறவைகளே..’
  என்று பாட மாட்டார்கள். ஃபேஸ் புக், ட்விட்டர், ப்ளாக்
  வெளி நாடு சென்றால், இருக்கவே இருக்கு ’ஸ்கைஃப்’
  எந்த ஊரில்..எந்த நாட்டில் எங்கு காண்போமோ’ என்பது அடிபட்டுப் போய்விட்டது டெக்னாலஜியினால்...


  ஆர்.ஆர்.ஆர்.
  http://keerthananjali.blogspot.com/

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…