Monday, October 25, 2010

சொர்க்கமே என்றாலும்……



சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?” என்ற பாடலைக்  கேட்கும் போதெல்லாம் எல்லோருக்கும்  அவரவர் ஊருடைய நினைவுகள் வரும். நம்முடைய பிறந்த ஊர் எவ்வளவு சிறிய கிராமமாக இருந்தாலும் - சிறு வயதில்நாம் பார்த்த, பழகிய இடங்கள், விளையாடிய இடங்கள், நம்முடைய பெற்றோருடன் கழித்த அந்த  இன்பமான நாட்கள் மீண்டும்  திரும்பக் கிடைக்காதா?” என்று எண்ணத்தோன்றும்.

கோவை என்று அழைக்கப்படுகிற கோயமுத்தூர் என்னுடைய சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதுமே பெருமை. “TEXTILE CITY” என்று அழைக்கப்படுகிற கோயமுத்தூருக்கு இன்னொரு பெயரும் உண்டு “MANCHESTER OF INDIA” என்ற பெயர் தான் அது. இங்குள்ள தட்பவெப்பநிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும். ஒருபுறம் உதகமண்டலம் மறுபுறம் கேரளா என்று இருப்பதால் எவ்வளவு வெயில் காலமாக இருந்தாலும் வியர்க்காது. மார்கழி மாதங்களில் சீதோஷ்ணம் மிகவும் நன்றாக இருக்கும். சுவையில் உலகிலேயே இரண்டாம் இடத்தை பெற்ற சிறுவாணி தண்ணீர்தான் எங்களுக்கு குடிநீர்.

நாங்கள் இருந்த ரேஸ்கோர்ஸ் என்ற பகுதி கோயமுத்தூரின் மையப்பகுதி. இந்த பகுதிக்கு காந்திபார்க் - காந்திபார்க் என்ற வழிப்பாதையில் செல்லும் 7C பேருந்து மட்டுமே வரும். இப்பேருந்தில் சென்றால் அநேகமாக எல்லா முக்கிய இடங்களுக்கும் சென்றுவிடலாம். இங்குள்ள வாக்கிங் ரோடில் காலை 4 மணி முதல் 9 மணி வரையிலும்  மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வாக்கிங் செல்பவர்கள் அதிகம். 

இந்த ரோடின் இருபுறங்களிலும் பூத்துக் குலுங்கும் மரங்களும் பூங்காக்களும் இருக்கும். ரேஸ்கோர்ஸில் ஆரம்பித்து K.G தியேட்டர், K.G ஆஸ்பத்திரி, அரசு கலைக் கல்லூரி, கலெக்டர் பங்களா, சாரதாம்பாள் கோவில் இப்படி 4 - 5 இடங்களை கடந்து திரும்பவும் ரேஸ் கோர்ஸிலேயே முடியும் வட்டப் பாதையே வாக்கிங் ரோடு. இந்த வாக்கிங் ரோடில் காலையில் வாக்கிங் செல்பவர்களுக்காக அருகம்புல் ஜூஸ், காய்கறி சூப்பு போன்ற உடல்  ஆரோக்கியத்திற்கு உதவும் பொருட்களை விற்கிறார்கள். இங்கு இப்பொழுது குழந்தைகளுக்காக உலக அதிசயங்களின் மாடல்கள் மற்றும் கேளிக்கைகளும் வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.

ரேஸ்கோர்ஸ்க்கு அருகில் உள்ள இடம் புலியகுளம். இங்கு உலகிலேயே மிகப்பெரிய விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவரது உயரம் 19 அடி.  மேலும்  ரேஸ் கோர்ஸிலேயே 108 விநாயகர் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை  5 அடுக்குகளாக வைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் பிரதட்சணம் செய்வதற்கு வசதியாக இருக்கும். இப்படி பல பேறுகளைப் பெற்ற பகுதியில் பல வருடங்கள் இருந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.

இவ்வளவு எழிலான நகரில் இருந்துவிட்டு இப்போது தில்லியில் இருப்பது மனதுக்கு என்னமோ பிடிக்கவில்லை.  தில்லியில் பல வருடங்கள் இருந்தாலும் இந்த ஊர் எனக்கு  பிடிக்கும் என்று தோன்றவும் இல்லை:-)

கோவையைப் பற்றி இது முதலாவது பதிவு.  இன்னும் தொடரும்.

ஆதி.

15 comments:

 1. அடடா.. நம் ஊர் நமக்கு பெரிசுதாங்க.. ரேஸ்கோர்ஸ் ல எங்க பெரியம்மா இருந்தாங்க .. கோவை அழகான ஊரு என்பது உண்மைதான்..

  உலக அதிசயம் மாடலா.. சரி அடுத்த முறை போய் பாத்துடறோம்..

  ReplyDelete
 2. வாங்க முத்துலெட்சுமி
  உலக அதிசயங்களின் மாடல்கள் வைத்திருப்பதாக என் சகோதரர் சொல்ல கேள்விப்பட்டேன். நானும் அடுத்த முறை தான் பார்க்க வேண்டும்.
  தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 3. ம் ம் கலக்குங்க

  நல்ல இருக்கு

  ReplyDelete
 4. வாங்க யாதவன்
  நன்றி.

  ReplyDelete
 5. நட்பின் இலக்கணமே ! நன்றாக நவீன்ரீர்," சொர்கமே ஆனாலும் நம்மூர் போல ஆகுமா" என்று. இதற்கு யாதொரு மாறான கருத்துமில்லை. குறும் படத்தினை காண்பதுபோல் மிகவும் சுவாரஸ்யமாக அதே சமயம் நிகழ்வுகளை கோர்வையாக சொல்லும் பாணி இத்தனை நாட்களாக எங்கே மறைந்திருந்தது உம்மில்? உறங்கிக் கிடந்த அந்த கனலை தூண்டியது எவரானாலும், மிகச்சிறந்த கதாசிரியை எமக்கு பரிசாக தந்த அந்த நல்லிதம் படைத்தவருக்கு எமது நன்றி உரித்தாகுக.!! தொடரட்டும் கோவையின் வட்டப்பாதையில் உமது இலக்கியப்பணி!! கோவையைபற்றி, கூடிய விரைவில் ஒரு புத்தகத்தை பிரசுரிக்க எமது அன்பான வாழ்த்துக்கள்.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 6. பிறந்த ஊரின் பெருமிதம் எல்லோருக்குமானது. அதிலும் குறிப்பாகப் பெண்கள்...!! ஆடவரும் வேலை நிமித்தம் இடம் மாறினாலும், வேர் பிடுங்கி நடப்படும் வேதனை நமக்குத்தான். எத்தனை சுற்றினாலும் பூர்வீகம் பிறந்த ஊராகி விடும் ஆண்களுக்கு! புகுந்த இடத்தையே சொல்லியாக வேண்டிய நியதி நமக்குத் தானே. கோவை பற்றிய அறிமுகம் அழகு. தொடருங்கள்.

  ReplyDelete
 7. மாதரசியே, "நல்லிதம்" என்பதை, "நல்லிதயம்" என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன். நன்றி. வாழ்க வளர்க.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 8. வாங்க VKN அவர்களே,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  வாங்க நிலாமகள்

  தங்கள் வரவுக்கும் தவறாமல் கருத்துரையிடுவதற்க்கும் நன்றி.

  ReplyDelete
 9. ஐ லவ் கோயம்பத்தூர் அண்ட் மிஸ்ஸிங் இட் டூ. ரேஸ்கோர்ஸ் சாலை என் ஃபேவரிட்.

  ReplyDelete
 10. வாங்க விக்னேஷ்வரி

  நானும் ரொம்ப மிஸ் பண்றேன். தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 11. கோவை என்றதும் எனக்கு முதலில் ஞாபகம் வருவது சுவையான சிறுவாணித் தண்ணீர் தான்.. பேரூர் ரூட்டில் செல்வபுரத்தில் அப்போது இன் லா வீடு. ‘சாப்பாடே வேண்டாம்.. தண்ணி போதும்’ என்றிருந்த நேரம்! அப்புறம் பார்த்தால் அதிலும் கலப்படம் செய்து, லாரியில் ‘சப்பை தண்ணி’ எல்லாம் வர ஆரம்பித்து விட்டது இப்போது.

  ReplyDelete
 12. வாங்க ரிஷபன் சார்

  அனைத்திலுமே கலப்படம் செய்யப்படுகிறது. அதில் தண்ணீரும் ஒன்று.
  தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. புலியகுளம் விநாயகர் உயரம் 19 அடி இல்லீங்....18 அடி...

  ReplyDelete
 14. வாங்க ரகுநாதன்

  தவறுக்கு வருந்துகிறேன். எனக்கென்னவோ 19 அடி என்று கேள்விப்பட்டதாக ஞாபகம்.

  தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…