Tuesday, October 19, 2010

“தசாவதார்”


சிறு வயதில் சினிமாவுக்கெல்லாம் எங்களை அழைத்துக் கொண்டு போவது அரிதான விஷயம். விடுமுறை நாட்களில் அம்மா ஏதோ ஒரு படத்தைத் தேர்வு செய்து அழைத்துப்  போவார்திருமணமாகி தில்லி வந்த பின்பும் தமிழ் படங்கள் இங்கே  அவ்வளவாக வெளியிடாததால் பார்க்க வாய்ப்பு இல்லாமலே இருந்தது.

கமல்ஹாசன் நடித்ததசாவதாரம்தில்லியில் வெளியாகவேவார இறுதியில் அதற்க்குச்  செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்திருந்தோம். வாரக் கடைசியில் ஒரு வேலையாக வெளியே சென்ற என் கணவர் யதேச்சையாக அவருடைய நண்பரை சந்திக்கவும்  அவர்  தசாவதாரம் பார்க்கப் போவதாகச்  சொல்லி, அவரே எங்கள் எல்லோருக்கும் சேர்த்து டெலிபுக்கிங் செய்து விட்டார்.


எல்லோரும் சேர்ந்து நண்பருடைய வண்டியில் புறப்பட்டோம். போகும் வழியில் நண்பர் “WAVES”ல் தசாவதாரம் போட்டிருப்பதாக சொல்லி அங்குதான் டெலிபுக்கிங் செய்து உள்ளதாகச் சொன்னார். என்னவரோ, தான் பேப்பரில் ”FUN CINEMAS V3S MALL”ல் போட்டிருப்பதாக பார்த்த ஞாபகம் என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே  “WAVES” வந்துவிட்டது.

இரண்டாம் தளத்திற்குச் சென்று சினிமா ஆரம்பிப்பதற்காக காத்திருந்தோம். அங்கு பார்த்தால் கும்பலும் இல்லை, வந்திருந்த ஒரு சிலரும் ஹிந்திக்காரர்கள். தமிழ் போஸ்டரும் இல்லை என்னடா இது என்று நினைத்தபடியே உள்ளே சென்று உட்கார்ந்தோம்.

படம் ஆரம்பமானது. ஆஹா! கமல்ஹாசன்  இதோ வரப்போகிறார்  என்று பார்த்தால் காலச்சக்கரம் சுழலும் படம் வந்த பிறகுதசாவதார்என்ற கார்ட்டூன் படத்தின் டைட்டில் ஓடியது. ஒன்றரை மணி நேர படம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பற்றி குழந்தைகளுக்குச் சொல்லும் அழகான படம்.

கமல்ஹாசன் படம்  பார்க்கச் [!] சென்ற எங்களுக்கோ ஒரே அதிர்ச்சி. என் பெண்ணுக்கும், நண்பரின் பெண்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற படம் என்பதால் ஒரே குஷி

ஒரு டிக்கெட் 130 ரூபாய் கொடுத்து வாங்கியதால் பேசாமல் அமர்ந்து பார்த்து விட்டு வந்தோம். அத்தோடு விட்டோமா, இரண்டு நாட்கள் கழித்து கமல்ஹாசன் நடித்ததசாவதாரம்படத்திற்கும் சென்றோம்.

ஒரே பெயரில், ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் வெளிவந்ததால் வந்த குழப்பம். டெலிபுக்கிங் செய்த நண்பரை இப்போது பார்த்தாலும்  கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.

சொந்த செலவில் சூனியம் – "தசாவதார்" மற்றும் "தசாவதாரம்" படம் பார்க்க எங்களுக்கு ஆன செலவு – 1000 ரூபாய்.


"அட தேவுடா" என்று நினைக்கத் தோன்றியிருக்கணுமே உங்களுக்கு இந்நேரம்!


ஆதி

15 comments:

 1. ஆகா சூப்பர்ங்க..நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்..:)
  இதுபோல கதைகள் கேட்டு நாங்க பலமுறை க்ராஸ் செக் செய்துக்கிறம்..
  ரோபா வா எந்திரனான்னு நல்லா பாத்துட்டீங்களானு
  பலமுறை கேட்டு படுத்திட்டோம்..:)

  ReplyDelete
 2. ஹாஹாஹா... ரொம்பக் காஸ்ட்லியான குழப்பமா இருக்கே!

  ஆனாலும் குழந்தைகள் படமெல்லாம் ஓவர். பாவங்க நீங்க.

  ReplyDelete
 3. வாங்க முத்துலெட்சுமி,

  வாங்க விக்னேஷ்வரி,

  வாங்க நிலா மகள்,

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 4. ஆஹா, தலைநகர்ல இப்படியெல்லாம் கூத்து நடக்குதா?

  ReplyDelete
 5. வாங்க ஆர் ஆர் ஆர் சார்,

  வாங்க DR P KANDASWAMY அய்யா,

  தங்களது வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. சொந்த செலவில் சூனியம் – "தசாவதார்" மற்றும் "தசாவதாரம்" படம் பார்க்க எங்களுக்கு ஆன செலவு – 1000 ரூபாய்///

  ஒரு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் க்கு 1000 ரூபாய் செல்வா????

  ரொம்ப சிரிப்பு வருது....

  ReplyDelete
 7. அச்சச்சோ!ஆனாலும் நீங்க இப்படி ஏமாந்து இருக்கக் கூடாதுங்க.
  நல்லா விசாரிச்சிட்டு போயிருந்திருக்கலாம்.

  ReplyDelete
 8. வாங்க செளந்தர்,

  வாங்க ஜி ஜி,

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .

  ReplyDelete
 9. @ வாசன்: என் மகளுக்கு தசாவதார், எனக்கு தசாவதாரம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. ஆதி அவர்களே, வேகம் கண்ணை மறைத்து , ஒருவனின் விவேகத்தையும் எப்படி இருட்டடிப்பு செய்து கலங்க வைத்து விட்டது என்பதை கோர்வையாக சொல்லிய பாங்கில் ஒரு முதிர்வு தெரிந்தது. வாழ்க, வளர்க உம் தொண்டு.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 11. வாங்க VKN அவர்களே,

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 12. தசாவதாரம் பார்க்க இரண்டு அவதாரம் எடுக்கவேண்டியிருந்ததா உங்களுக்கு??
  நல்ல பகிர்வு.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…