Thursday, September 23, 2010

நான் சேகரிக்கும் பொக்கிஷங்கள்


நம்மில் பலருக்கு வித விதமான தபால்தலைகள் சேகரித்து வைக்கும் பழக்கமும் சிலருக்கு வாழ்த்து அட்டைகள் சேகரித்து வைக்கும் பழக்கமும் இருக்கும். சிலர்    சாவிக்கொத்துகளை  சேகரித்து வைப்பார்கள். சிலர் பிரபலமானவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி - தோழர், தோழிகளின் கையெழுத்துகள் புகைப்படங்கள் என சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இதெல்லாம் இங்கு எதற்கு சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?

நான் அப்படி சேகரிக்கும் பொக்கிஷங்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே. என் குழந்தை பிறந்ததிலிருந்து இது வரை ஒவ்வொரு வருட முடிவிலும், அந்த வருடத்தில் அவள் அணிந்த அழகான உடைகளை பாதுகாப்பாக  எடுத்து வைப்பேன். அவள் பெரியவளாகும் போது இவைகளை காண்பித்தால் இதெல்லாம் நாம் சிறுவயதில் அணிந்தோமா என்று அவளுக்கு  வியப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

இது ஒரு உதாரணம். இவை போன்று அப்பா கொடுத்த 5 ரூபாய் புது நோட்டு; அம்மா கொடுத்த தலைதீபாவளி சீரில் இருந்த  1 ரூபாய் புது நோட்டு; புடவை கட்ட ஆசைப்பட்டு வாங்கிய முதல் புடவை; கணவர் ஆசையாக வாங்கிக் கொடுத்த முதல் சுடிதார்; அவர் எனக்கு எழுதிய கடிதங்கள்; நாங்கள் முதன்முதலாக சென்ற ”ரன்” சினிமாவின் டிக்கெட்; நான்  ஒரு குழந்தைக்கு அம்மா ஆகப்  போகிறேன் என்று டாக்டர் உறுதி செய்த நாளின் காலண்டர் ஷீட்; அப்பா கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்த புத்தகங்கள் - இப்படிப் பல பொக்கிஷங்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன் [இதுக்கே தனியா ஒரு அறை வேண்டும் போல இருக்கு என்று  என்னவர் அவ்வப்போது புலம்புவது தனிக்கதை].

இதைப் படிக்கும் போது உங்களுக்கும் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் என்னென்ன என்று மனதுக்குள் கொசுவத்தி சுத்த ஆரம்பித்துவிட்டதா?. 

மீண்டும் சந்திப்போம்!

ஆதி

17 comments:

 1. பட்டியல் வெகு அழகு... பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 2. உங்கள் கருவூலத்தில் மேலும் பல இனிய நினைவுச்சின்னங்கள் சேர வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. பொக்கிசங்கள் வாழ்கையில் பல நினைவுகளை மீட்ட உதவும் நானும் தொடங்கப்போரன்
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. பயங்கர செண்டிமெண்ட் ஆளா நீங்க :)

  ReplyDelete
 5. நானும் இந்த மாதிரி பல நினைவுச் சின்னங்களை சேகரித்து வைத்திருந்தேன். வயதான பின்பு அவைகளின் மேல் இருக்கும் ஈர்ப்பு குறைந்து விட்டது. பெரும்பாலானவற்றை கழித்து விட்டேன்.

  ஆனால் அவை கொடுக்கும் சந்தோஷம் தனி.

  ReplyDelete
 6. அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வாவ், நீங்க ரொம்ப ரசனையானவர்னு தெரியுதுங்க.

  ReplyDelete
 8. வாங்க நிலா மகள்,
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சேட்டை,
  முதல் முறையாக என் பதிவுக்கு கருத்திட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 9. வாங்க யாதவன்,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க முத்துலெட்சுமி,
  நான் ரொம்ப சென்டிமென்ட் ஆள் தாங்க. வரவுக்கு நன்றி.

  வாங்க DR. PKANDASWAMY PHD அய்யா,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. வாங்க ஜிஜி,
  வரவுக்கு நன்றி.

  வாங்க விக்னேஷ்வரி,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 11. பொக்கிஷமான நினைவுகளை மூட்டை கட்டி வைத்திருக்கிறீர்கள். குட்.

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  ReplyDelete
 12. வாங்க RVS,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. நானும் இப்படித்தான்.. சேர்த்துக்கொண்டிருந்தேன்மா. அடிக்கடி ஊர் மாற்றலில் சிலது மிஸ்ஆகிரும் மா..

  ReplyDelete
 14. உங்கள் இனிய பொக்கிஷங்களின் பட்டியல் இன்னும் பன்மடங்கு பெருக வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நானும் இப்படி சேத்து வெக்கற ஆளுதாங்க... இப்ப குறைச்சுட்டேன்... சேத்து வெச்சு எதை எல்லாம் போற எடமெல்லாம் தூக்கிட்டு போக முடியும்னு வருத்தம் தான் காரணம்... ஆனா நினைவுகள் நினைவு சின்னங்கள் அழகானவை... அழகான பகிர்வு தோழி...

  ReplyDelete
 16. வாங்க தேனம்மை அம்மா,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஈஸ்வரன் சார்,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க அப்பாவி தங்கமணி,
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 17. arumai ithai padikkumbothu niraya miss panni vittom endru thondriyathu

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…