Saturday, September 18, 2010

ஆசை யாரை விட்டது


இயந்திரவியல் துறை டிப்ளமோ மாணவிகளாகிய நாங்கள் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் பணிமனைக்குச் (WORKSHOP) செல்ல வேண்டியிருக்கும். அப்படி ஒருநாள் பணிமனைக்குச்  செல்லும் முன்னர் பெண்கள் அறைக்கு சென்றோம். அங்கு பார்த்தால் சில மாணவிகள் மருதாணி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆசை யாரை விட்டது. சரி நாமும் வைத்துக் கொள்வோம் என்று தோழிகள் மூன்று பேரும் ஒரு கையில் வைத்துக் கொண்டு அந்தக்  கையை ஓவர்கோட் பாக்கெட்டினுள் விட்டுக் கொண்டு ஸ்டைலாக பணிமனைக்குச் சென்று விட்டோம்.

 நல்ல வேளை அன்று பணிபுரிய வேண்டிய வேலை எதுவும் இல்லாததால் அவரவர்  இருக்கையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தோம். மாணவர்கள் சிலர் எங்கள் மூவரிடமும் ஏன் ஒரு கையை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க எங்கள்  கைகளைக் காண்பித்தோம்.

என்ன தைரியம் உங்களுக்கு!” என்று திட்டினார்கள். இவர்களே இப்படி திட்டுகிறார்களே, விரிவுரையாளர் பார்த்தால்  எங்கள் கதி அதோகதிதான் என்று நினைத்துக்கொண்டோம். இறுதியாண்டில் வேறு இருக்கிறோம் தேர்வின் போது பிரச்சனை ஆகி விட்டால்? இப்படி பல கேள்விகளை எங்கள் மனதினுள் ஓட விட்டு  இடைவேளை வரும் வரை காத்திருந்தோம்.

இடைவேளை வரவும் அவசரம் அவசரமாக பெண்கள் அறைக்குச் சென்ற நாங்கள்  என்ன காரியம் செய்தோம் தெரியுமா?
 
ஆனது ஆயிற்று இனி என்ன ஆனாலும் சரி என்று மற்றொரு கையிலும் மருதாணி வைத்துக் கொண்டு வகுப்பிற்குத் திரும்பினோம். ஆசை யாரை விட்டது?

டிஸ்கி: தில்லிக்கு வந்த பிறகு, எல்லா இடங்களிலும்  பல வடிவங்களில் அழகழகாய் கைகளில் மருதாணி வைத்து விடுவதற்கென்றே பலர் இருப்பதினால் ஆசை தீர மருதாணி வைத்துக்கொள்கிறேன்!

ஆதி.

10 comments:

  1. என்ன ஒரு தைரியம் உங்களுக்கு.. :)

    இங்க ஷாப்பிங் போன இடத்துல மருதாணி வைத்துக்கொண்டு யார் மேலும் இடிக்காமல்
    சர்க்கஸ் செய்தபடியே வருவா மகள் :))

    ReplyDelete
  2. ஹாஹாஹா.. கையைக் கழுவிட்டு தான் வந்தீங்களோன்னு நினைச்சேன். சூப்பர் தைரியம் உங்களுக்கு.

    எனக்கும் டெல்லியில் ஷாப்பிங் முடித்துவிட்டு இரு கைகளிலும் வைத்து வருவது மிகப் பிடித்தம்.

    ReplyDelete
  3. ஆணி இல்லாமல் இயந்திரவியலா? நீங்கள் மருதாணியோடு சென்றீர்கள். அவ்வளவுதானே.

    ReplyDelete
  4. வாங்க முத்துலெட்சுமி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வாங்க கந்தசாமி அய்யா,
    வருகைக்கு நன்றி.
    வாங்க விக்னேஷ்வரி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முந்தைய பதிவுகளையும் படித்து கருத்துரையிடுங்கள்.
    வாங்க ஈஸ்வரன்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. ஆஹா... செம தில்லு தான்... அதான் கோவைல இருந்து தில்லி போயிட்டீங்களோ... ஹா ஹா ஹா

    ReplyDelete
  6. College daysla natantha visayangal elam ipothu than nabhagam varuthe...

    ReplyDelete
  7. வாங்க புவனா,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ஹாய் அரவிந்த்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. எனக்கும் மருதாணி வாசம் ரொம்ப பிடிக்கும்ங்க . நம்மிருவர் பெயர்த் தொடக்கம் ஒன்றாக இருப்பது இனிய ஆச்சர்யம்.(ஆதி )

    ReplyDelete
  9. வாங்க நிலா மகள்,
    நம்மிருவரின் பெயர் தொடக்கம் ஒன்றாய் இருப்பதில் சந்தோஷம்.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…