Wednesday, August 25, 2010

சூப்பர் அம்மா சூப்பராம்மா?


சில மாதங்களாக ஒரு பிரபல தமிழ் ஊடகத்தில் ‘’SUPER MOM’’ என்ற நிகழ்ச்சி வருகிறது. தாயின் திறமையைப் பொருத்து அவர் சாதா அம்மாவா இல்லை சூப்பர் அம்மாவா என்பதை தெரிவு செய்வார்களாம்! ஒரு குழந்தையின் தாய் என்னென்ன திறமைகள் கொண்டிருக்கிறாள் என்பதை பல சுற்றுக்களின் வாயிலாக நிரூபிக்க வேண்டும். இதில் பல தாய்மார்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் இறுதியில் சிறந்த தாய் அதாவது ’SUPER MOM யார் என்று தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்!!.


பங்குபெறும் தாயார்களை பாடவோ, ஆடவோ, ஓவியம் வரையவோ சொன்னால் கூடப் பரவாயில்லை. நான் சில சுற்றுக்களைப் பார்த்தபோது பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆச்சரியம் எதற்கு என்றால் நமது பாரம்பரியம், கலாச்சாரம் பற்றிய மிக அழகான போட்டிகளை வைத்திருந்ததுக்கு.


கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, நவராத்திரி, போன்ற பண்டிகை சுற்றுக்களும் இருந்தன. இது போக பழங்கால முறைப்படி ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றை உபயோகப்படுத்தி சட்னி அரைக்க வைத்தனர். அப்புறம் பாண்டியாட்டம் கூட ஆடச் சொன்னார்கள்.


பண்டிகை சுற்றுக்களில் நம் தாய்மார்கள் தயங்கியும் திக்கித் திணறியும் பதிலளிக்கிறார்கள். அதற்கு பிறகு மனோதத்துவ சுற்றுக்களும் இருந்தன. அதில் மனோதத்துவ நிபுணர் தாயிடமும், குழந்தையிடமும் தனித் தனியாக கேள்விகள் கேட்கிறார். பிடித்தவை, பிடிக்காதவை இப்படிப் பல.


அடுத்தது பயம் எதற்கு என்று கேட்டால், இறுதிச் சுற்று வரை வந்த அம்மாக்களுக்கு வைத்த போட்டி தான். கஷ்டமான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ள தன்னுடைய குழந்தையை தரப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குள் அச்சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால் இந்த சுற்றில் முன்னேற முடியாதபடி அதிவேகத்தில் குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சுவது, வழுக்கும் தரையில் நடந்து சென்று உயரத்தில் ஏறுவது, ரோட்டில் கயிற்றில் நடப்பார்களே அது போன்று ஒரு பைப்பின் மீது நடக்க வைப்பது, பனிக்கட்டிகளுக்குள் இறங்கி தேட வைப்பது, இப்படிப் பல சோதனைகளைக் கடக்க வேண்டுமாம். இதெல்லாம் செய்து முடிப்பவர் தான் ‘’SUPER MOM”! என்னைப் பொறுத்தவரை இப்படியெல்லாம் செய்தால்தான் சூப்பர் அம்மாவாக முடியுமா என்றால், கிடையவே கிடையாது.


ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய அம்மா ஒரு ‘’SUPER MOM’’ தான். தன்னுடைய முதுகில் குழந்தையை கட்டிக்கொண்டு வேலை செய்கிற ஒரு தாய், வறுமையில் உழலும்போதும், தனக்கு கிடைக்கிற உணவை தன்னுடைய குழந்தைக்குக் கொடுக்கத் துடிக்கும் தாய், குழந்தையை படிக்க வைப்பதற்காக வீட்டு வேலைகள் செய்பவள். இப்படி ஒவ்வொருவருமே சூப்பர் அம்மாதான்! நாம் சாப்பிடும் உணவில் கூட நம் அம்மா செய்தது தான் சிறந்தது என்று தானே எல்லோருக்கும் தோன்றுகிறது!


ஒரு ஐந்து வயது குழந்தையின் தாய் என்ற பார்வையில் பார்க்கும் போது இந்த நிகழ்ச்சியே ஒரு தேவையில்லாத ஒன்றாகத் தோன்றுகிறது! விளம்பரங்கள் மூலமாக தாங்கள் ஈட்டும் தனத்திற்காக, இப்படி தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பல தாய்மார்களும் வெறித்தனமாக பங்களித்து ஆதரவு அளிக்கிறார்கள் என்பது தான் வருந்த வேண்டிய விஷயம்.


ஆதி

 

20 comments:

 1. ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய அம்மா ஒரு ‘’SUPER MOM’’ தான். தன்னுடைய முதுகில் குழந்தையை கட்டிக்கொண்டு வேலை செய்கிற ஒரு தாய், வறுமையில் உழலும்போதும், தனக்கு கிடைக்கிற உணவை தன்னுடைய குழந்தைக்குக் கொடுக்கத் துடிக்கும் தாய், குழந்தையை படிக்க வைப்பதற்காக வீட்டு வேலைகள் செய்பவள். இப்படி ஒவ்வொருவருமே சூப்பர் அம்மாதான்! நாம் சாப்பிடும் உணவில் கூட நம் அம்மா செய்தது தான் சிறந்தது என்று தானே எல்லோருக்கும் தோன்றுகிறது!

  மிகவும் சரியானா கருத்து.

  அந்த போட்டியில் வெற்றி பெற்ற தாய் மட்டும் தானா சூப்பர் மாம் ?எல்லாம் விளம்பரத்தினால் வர பணம் செய்யற வேலை தான் தோழி .
  உங்க பெயர் தெரிஞ்சுக்க விரும்பறேன் தோழி. பிரச்சனை இல்லேனா சொல்லறிங்களா

  ReplyDelete
 2. திகிலா இருக்குங்க.. :)

  இப்படில்லாமா செய்யறாங்க அதுல..

  ஆரம்ப்த்துல க்விஸ் செய்யும்போது எட்டிப்பார்த்தது..

  ReplyDelete
 3. ”சூப்பர் அம்மா” பதிவு “சூப்பர் அப்பு!” sorry “சூப்பர் அம்மா!”

  ReplyDelete
 4. இதில் கொடுமை என்னவென்றால் இந்த சுற்றில் முன்னேற முடியாதபடி அதிவேகத்தில் குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சுவது, வழுக்கும் தரையில் நடந்து சென்று உயரத்தில் ஏறுவது, ரோட்டில் கயிற்றில் நடப்பார்களே அது போன்று ஒரு பைப்பின் மீது நடக்க வைப்பது, பனிக்கட்டிகளுக்குள் இறங்கி தேட வைப்பது, இப்படிப் பல சோதனைகளைக் கடக்க வேண்டுமாம். //

  கேள்வி கேட்கறது சரி.. இப்படி எல்லாமா சோதனை? அபத்தம்..

  ReplyDelete
 5. கொஞ்சம் நல்லா இருக்கேன்னு பார்க்க ஆரம்பித்தேன். ஓவர் செயற்கையாகப் போக ஆரம்பித்தது.
  ஆனால் இதெல்லாமே விஜய் டிவி ரேட்டிங்கை அதிகப் படுத்தவே என்று தோன்றுகிறது. நாட்டியம்,பாட்டு,இப்ப இது,...குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடப் போவதில்லை இவர்கள். இல்லை என் பார்வை சரியில்லையோ என்னவொ:(

  ReplyDelete
 6. நம்ம ஊர்காரர் பதிவு பக்கம் வந்ததுல ரெம்ப சந்தோஷம்... அழகா சொன்னிங்க... எல்லாருக்கும் அவங்க அவங்க மாம் சூப்பர் மாம் தான்... அதுல எந்த மாற்றமும் இல்ல... நல்ல பதிவு...

  ReplyDelete
 7. வாங்க சந்தியா,
  உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 8. வாங்க முத்துலெட்சுமி,
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  வாங்க ஈஸ்வரன். நன்றி.

  ReplyDelete
 9. வாங்க ரிஷபன் சார்,
  என் பதிவை படித்து கருத்தினை தெரிவித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. வாங்க வல்லிசிம்ஹன் அம்மா,
  உங்கள் கருத்தை பரிமாறிக் கொண்டதற்கு நன்றி.

  வாங்க அப்பாவி தங்கமணி மேடம்,
  நம்மூர்க்காரங்க என் பதிவை படித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 11. Miga Sariyana Padhivu. Idhu pondra nigazhchigalai naam parkamal thavirthu vanthale podumanadhu

  ReplyDelete
 12. டி.வி. க்காரங்களுக்கு எப்படியாவது காசு பண்ணவேண்டும், நம்மாளுகளுக்கு எப்படியாவது டி.வி. யில தலை காட்டணும். அதுக்காக குழந்தைகளை பலிக்கடா ஆக்குவது அக்கிரமம்.

  பைனல் ஷோவப்பார்த்துட்டே உங்களுக்கு இப்படியிருக்கே, இதுக்கு எத்தனை முறை ரிஹர்சல் பண்ணீருப்பாங்க. அத்தனை தடவையும் அந்தக் குழந்தை என்ன பாடு பட்டிருக்கும்?

  நியாயமா அந்த சூபர் மாம் வென்ற தாய்க்கு சிங்கப்பூர் மாதிரி 100 சவுக்கடி கொடுக்கவேண்டும்.

  ReplyDelete
 13. Dr.P. Kandaswamy Ph.D அய்யா, உங்கள் வரவுக்கு நன்றி. ஆனால், நீங்க சொல்ற மாதிரி சவுக்கடி கொடுக்கறதெல்லாம் ரொம்ப அதிகம். அப்படிப்பட்ட நிகழ்ச்சியை பார்க்காம விட்டாலே போதும். அதுனாலதான் நானே பாதியில நிறுத்திட்டேன்.

  ReplyDelete
 14. எனக்கு இதெல்லாம் பார்த்தா குரங்காட்டி கைல மாட்டின குரங்கு மாதிரி தான் தோணுது!!!

  ReplyDelete
 15. படித்தவர்கள், பணக்காரர்கள் சகலருக்கும் தொலைக்காட்சியில் முகம் தெரியும் பிரபல்யம் வேண்டியிருக்கு. அரசியலுக்கு ஓட்டுப் போல், இதற்கு ரிமோட் நம் கையிலிருப்பதை மறந்துவிடக் கூடாது. விழிப்புணர்வு ஊட்டும் பதிவுக்கு வாழ்த்து!

  ReplyDelete
 16. engavittil andha channel illamal irundhadharkku migavum sandhosha padukiren

  ReplyDelete
 17. வாங்க vadamally ,
  தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சார்,
  தங்கள் வரவுக்கு நன்றி.

  வாங்க நிலாமகள்,
  தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கிரி,
  தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 18. ஒவ்வொரு அம்மாவும் சூப்பர் அம்மாவாக இல்லாவிட்டால் அந்த குழந்தை பிறந்து வளர்ந்தே இருக்காது.

  ReplyDelete
 19. வாங்க இராஜராஜேஸ்வரி,

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 20. அம்மாவிற்கு சோதனைகள்.கேட்கவேநன்றாக இல்லையே.இதில் போட்டியிடும் தாய்மார்களை
  ப்பற்றிஎன்ன சொல்வது.கடவுளே

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…