Thursday, August 19, 2010

இளைய நிலா பொழிகிறது!

எல்லோருக்கும் கல்லூரி நாட்களை நினைத்தாலே ‘’பசுமை நிறைந்த நினைவுகளே’’. என பாடத்தோன்றும் அல்லவா! எனக்கும் அப்படித்தான். நான் படித்தது ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரியில். நமது வாழ்வில் குழந்தைப் பருவமும், கல்லூரி நாட்களும் மீண்டும் கிடைக்காது. பணம் படைத்தவனோ, வறுமையின் பிடியில் உழல்பவனோ கல்லூரிக்குள் வந்துவிட்டால் எல்லோரும் நண்பர்கள் ஆக இருப்பது எவ்வளவு சுகமானதொரு அனுபவம்.

என்னுடைய கல்லூரி வாழ்க்கை முதலாம் ஆண்டு அறிமுகங்களுடனும் பயத்துடனும் கழிந்தது. இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகள் ஒரே கலாட்டாவும் கூத்துமாகத்தான் இருந்தது. பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போதே எங்களுடைய கலாட்டாவும் ஆரம்பமாகிவிடும். எங்கள் நண்பர்களில் ஒருவர் நன்றாகப் பாடுவார், ஆனால் அவருக்கு பாட்டு வரிகள் தெரியாது. எங்களுக்கு போர் அடிக்கும்போது, தோழி ஒருத்தி முன் இருக்கையில் அமர்ந்து ஒரு பேப்பரில் பாடலை எழுதிக்கொடுக்க, அந்த நண்பர் ஸ்வர சுத்தமாக எங்களுக்கு மட்டும் கேட்கும்படி அழகாகப் பாடுவார்.

தினம் தினம் இது போன்று ஏதோ ஒரு பாடல் வரிகளை தோழி எழுதிக் கொடுக்க, அவர் பாட, நாங்கள் கேட்டுக்கொண்டு இருப்போம் ஆனால் பேராசிரியர் தான் பாவம் கடமை உணர்ச்சியுடன் பாடம் நடத்திக் கொண்டு இருப்பார். [அப்படின்னா பாடமே படிக்கலையான்னு கேட்கக் கூடாது! நாங்கல்லாம் படிப்புல புலிங்கோ!].

அப்படி நாங்கள் கேட்ட பாடல்களிலேயே அதிக முறை கேட்ட பாடல் “பயணங்கள் முடிவதில்லை” படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் பாடிய அற்புதமான பாடல்களில் ஒன்றாகிய “இளையநிலா பொழிகிறதே, இதயம் வரை நனைகிறதே….” என்ற பாடல்தான். இதோ அந்த பாடல் எனக்காகவும் உங்களுக்காகவும்…..

 
கேட்கும்போதே மீண்டும் அந்த கல்லூரி நாட்களுக்கே சென்று விடத் தோன்றுகிறது எனக்கு. நீங்களும் கொஞ்சம் கொசுவத்தி சுத்தி அந்த பாடல் நாட்களுக்குச் சென்று வாருங்கள்.


மீண்டும் சந்திப்போம்…… ஆதி.

9 comments:

  1. நல்ல பாடல் . மீண்டும் அந்நாட்கள் வருமா ?

    ReplyDelete
  2. பாட்டு நல்லா இருக்கு ..கல்லூரி நாட்கள் என்றும் இனிமையானவ தான் ...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. கல்லூரி லூட்டிகளெல்லாமே இனிமையானவைதான் :-)))

    ReplyDelete
  4. இந்த பாட்டு என்றும் இனியவை லிஸ்டில் உள்ள பாடல்.. நல்ல கல்லூரி நினைவைத் தூண்டும்... ஆனால் இது நான் குழந்தையாய் இருக்கும்போது வந்த படம். அதனால் என்னுடைய கல்லூரி நினைவுகளில் புதுப்படப் பாடல்களே உள்ளன..

    ReplyDelete
  5. கேட்க திகட்டாத பாடல்களில் அதுவும் ஒன்று.. பதிவு இனிமை.

    ReplyDelete
  6. வாவ்... அழகான கொசுவத்தி நினைவுகள் தான்... நீங்க சொல்றத பாத்தா SNR காலேஜ் போல தோணுது... ஜஸ்ட் கிட்டிங்... ஒகே ஒகே...

    ReplyDelete
  7. I also like this song very much. Thanks for reminding this wonderful song.

    ReplyDelete
  8. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…