Tuesday, August 10, 2010

புதுமுகம் ஒரு அறிமுகம்



என்னுடைய வலைப்பூவின் தலைப்பு சொல்வது போலவே நான் கோவையிலிருந்து தில்லிக்கு வந்து வசிக்கும் ஒரு தமிழ் மகள். எனது தாய்மொழி தமிழ் என்று சொல்லிக்கொள்வதில் எப்போதுமே ஒரு தனி கௌரவம். எங்கள் கோவையின் அழகான கொங்கு தமிழ் பேசி, கேட்டு மகிழ்ச்சியில் திளைத்ததில் எனக்கு மிகப் பெருமை.

வாழ்க்கையில் எல்லாப் பெண்களுக்கும் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் மாற்றங்களில் ஒன்று இட மாற்றம். சிலருக்கு வேறு கிராமம், சிலருக்கு வேறு நகரம், மற்றும் பலருக்கு வேறு மாநிலம், வேறு நாடு என்று அமைந்துவிடுவதை தவிர்க்க முடிவதில்லை.

கல்யாணம் முடிந்து பக்கத்து ஊரிலோ, அதே மாநிலத்திலோ இருந்தாலாவது நாம் ஆசைப்படும் போது தாய் வீட்டுக்குச் சென்று வரலாம். வேறு மாநிலத்திற்கோ, வேறு நாட்டுக்கோ சென்று விடும்போது நினைக்கும்போதெல்லாம் தாய் வீடு செல்ல முடியாது என்பது ஒருவிதத்தில் சோகம் தான்.

கல்யாணம் ஆகும்வரை கோவையிலிருந்து தமிழகம் தவிர வேறு எங்கும் சென்றிராத [அறியாச் சிறு வயதில் திருப்பதி சென்றது தவிர] எனக்கு இப்படிப்பட்ட மாற்றம் – கோவை 2 தில்லி! ஊரில் மட்டுமா மாற்றம் – கல்யாணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் எத்தனை பெரிய மாற்றங்களை உண்டு பண்ணி விடுகிறது.

என்னுடைய இந்த வலைப்பூவில் நான் கண்ட மாற்றங்கள், எனக்குப் பிடித்த விஷயங்கள் பற்றியும், சமையல் குறிப்புகள் [ஆஹா கிளம்பிட்டாங்கய்யா இன்னுமொருத்தங்க!], பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் போன்றவற்றை எழுதப் போகிறேன்.

நீங்கள் எல்லோரும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்…


ஆதி

16 comments:

  1. welcome
    நல்ல படைப்பு
    வாழ்த்துக்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தலைநகர் தமிழ்ப் பெண்ணே.

    ReplyDelete
  3. உங்களின் மெய்ல் ஐடி ப்ரொஃபைலில் இல்லை. முடிந்தால் என் ப்ரொஃபைலிலிருக்கும் மெய்ல் ஐடியில் தொடர்பு கொள்ளுங்கள். தில்லித் தமிழ்ப் பதிவர்களுடன் அறிமுகம் செய்கிறேன்.

    ReplyDelete
  4. எங்கள் அதரவு உங்களுக்கு இருக்கிறது... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் :)

    ReplyDelete
  5. வா தாயி வா.நம்ம[தமிழ்]ள்ல ஒருத்தியாயிட்ட.நம்ம தலையெழுத்த[நல்லதோ கெட்டதோ]யாரால மாத்த முடியும்.என்ன இப்படியெல்லாமா வரவேற்பாங்கனு பயந்துராத.
    வாழ்த்துக்களோடு வரவேற்கிறேன்.

    ReplyDelete
  6. பதிவுலகிற்கு கோவையில் இருந்து தில்லி வந்திருக்கும் தங்களை வருக வருக என்று கமெண்ட் மட்டும் போடுவோர் சங்கம் - 18-ம் வட்டம் சார்பாக வரவேற்கிறோம்.

    ReplyDelete
  7. @ யாதவன்: நன்றி.

    @ விக்னேஷ்வரி: நன்றி. நான் உங்களுக்குத் தனியாக மெயில் அனுப்புகிறேன்.

    @ சௌந்தர்: நன்றி.

    @ Mohammed Faaique: Thanks.

    @ சிவா: நன்றி.

    @ ஸ்வாமி ஓம்கார்: நன்றி.

    @ ஈஸ்வரன்: ப்ளாக் எழுதுவோர் சங்கம் சார்பாக நன்றி.

    ReplyDelete
  8. அட.. வாங்க.. வாங்க..
    //என்னுடைய இந்த வலைப்பூவில் நான் கண்ட மாற்றங்கள், எனக்குப் பிடித்த விஷயங்கள் பற்றியும், சமையல் குறிப்புகள் ...//
    படிக்க ஆர்வமாய்..

    ReplyDelete
  9. பதிவுலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் தோழி ...உங்க எழுத்து படிக்க ஆவலோடு காத்து கொண்டுஇருக்கிறேன் ...வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  10. இப்போதுதான் உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  11. கண்டிப்பா எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு அம்மணி... கலக்குங்க...

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…